குழந்தை உளவியலின் பிதாமகர் ரெனெ காப்ரியேல் ஜாஸ்ஸோ!
ரெனெ
காப்ரியேல் ஜாஸ்ஸோ கல்வி உளவியல் மற்றும் குழந்தை உளவியலுக்கு வித்திட்ட பிரெஞ்சுக்
கல்வியாளர். குழந்தைகளிடயே காணப்படும் கற்றல் குறைபாடான டிஸ்லெக்சியாவைக் கண்டறிந்தவர்
இவரே.
27 அக்டோபர்,
1910 இல் பாரிஸில் பிறந்தார் ரெனெ ஜாஸ்ஸோ.
1946
இல் தமது உளவியல் கண்டுபிடிப்புகளை Le Devenir Intelligence என்ற நூலில் வெளியிட்டார்.
அந்த நூலில்தான் அவர் டிஸ்லெக்சியா பற்றிக் கூறுகிறார்.
ஜெர்மனியின்
யேல் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக இருந்த போது ஹிட்லரால் யூதக் குழந்தைகள் சோதனை
எலிகள் போலப் பயன்படுத்தப்பட்டதை எதிர்த்துக் குரல் கொடுத்தார். அதனால் அவர் பிரான்சுக்கே
மீண்டும் நாடு கடத்தப்பட்டார்.
பிரான்சில்
இவர் தம் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருந்த போது, ஹிட்லரின் நாஜி படையால் பாரிஸ் கைப்பற்றப்பட்டது.
அப்போது ஹிட்லரின் கொலைப் பட்டியலில் ரெனெ ஜாஸ்ஸோவின் பெயரும் இருந்தது. இருப்பினும்
பிரான்ஸை விட்டுத் தப்பிச் செல்ல மறுத்து விட்ட துணிகர நெஞ்சம் படைத்தவர் இவர்.
மருத்துவமனைக்கு
வரும் நோயாளிகளுக்கு அவர்களது உடல்நிலைக்கேற்ப சிகிச்சை அளிப்பதைப் போல, கல்விக் கூடத்துக்கு
வரும் குழந்தைகளுக்கு அவர்களது உள நிலைக்கு ஏற்ப கல்வியளிக்க வேண்டும் என்று ரெனோ ஜாஸ்ஸோ
வலியுறுத்துகிறார்.
இவரது
கல்வி உளவியல் கருத்துகள் கல்விக் கூடங்களில் பின்பற்றப்பட்ட பிறகு கல்வியால் நிகழும்
தற்கொலைகள் குறைந்தன. கல்வி உளவியலில் தனியாள் வேற்றுமை அறிதல் என்பதைப் புகுத்தியவர்
இவரே.
Oligophrenic
Heterochrony என இவர் முன்வைத்த உளவியல் கருத்து கற்போரின் கற்கும் வளர்ச்சி நிலைகள்
மரபு நிலை மற்றும் சூழ்நிலை காரணமாக வேறுபடுவதற்கான காரணங்களை விளக்குகிறது.
நுண்ணறிவு
ஈவு குறைவின் காரணமாக ஒரு மாணவர்கள் ஒரு சில வகுப்புகளை குறிப்பிட்ட ஓராண்டிற்குள்
முடிக்க இயலாமல், அவ்வகுப்புகளை முடிப்பதற்கு சில ஆண்டுகள் கூடுதலாக எடுத்துக் கொள்ளலாம்.
வருங்காலத்திலும் அவர் அப்படியே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சில ஆண்டுகளுக்குப்
பிறகு அவர் நுண்ணறிவு ஈவில் மற்ற மாணவர்களை விட அபாரமாக முன்னோக்கிச் செல்வர் என்பதை
ரெனெ ஜாஸ்ஸோ நிறுவினார்.
இவரது
கல்வியியல் ஆய்வுகள் அனைத்தும் குழந்தைகளின் கல்வி உளவியலை அடிப்படையாகக் கொண்டன.
20 செப்டம்பர்,
1995 இல் காலமானார். அவர் அப்போது 17 உளவியல் நூல்களை எழுதி முடித்திருந்தார். கல்வி
உளவியலில் ரெனெ ஜாஸ்ஸோ மறக்க இயலாத கல்வியாளராவார்.
*****
No comments:
Post a Comment