சுட்டெழுத்துகள் அறிவோமா?
சுட்டுவதற்குப்
பயன்படும் எழுத்து சுட்டெழுத்து.
எப்படிச்
சுட்டலாம்?
அந்தப்
பையன், இந்தப் பெண், இவ்வீடு, அவ்வட்டம் எனப் பலவாறாகச் சுட்டலாம்.
இப்படிச்
சுட்டுவதற்கு எழுத்துகள் பயன்படுகின்றன. அவ்வெழுத்துகளைச் சுட்டெழுத்துகள் என்பர்.
அ, இ,
உ என்பன சுட்டெழுத்துகள்.
அவன்,
அவள், அது எனச் சுட்டலாம். இச்சொற்களில் அ எனும் சுட்டெழுத்தானது அச்சொற்களுள் ஓரெழுத்தாக
உள்ளது. இவ்வகைச் சுட்டு அகச்சுட்டு எனப்படும்.
அதே
போல இவன், இவள், இது என்பதில் இ எனும் சுட்டெழுத்து அச்சொற்களில் ஓரெழுத்தாக உள்ளதால்
இவ்வகைச் சுட்டும் அகச்சுட்டுகளே.
இதே
போல உவன், உவள், உது என்பனவும் உ எனும் சுட்டெழுத்து இடம் பெற்ற அகச்சுட்டுகளே.
அந்தப்
பையன், அந்தப் பெண் என்பதில் அ எனும் சுட்டெழுத்து இடம்பெறும் சொல்லை அந்த + பையன்
என இரண்டாகப் பிரிக்கலாம். இப்படி இடம் பெறும் சுட்டு புறச்சுட்டு எனப்படும். அதே போல
அப்பையன் என்பதை அ + பையன் என இரண்டாகப் பிரிக்கலாம் என்பதால் அதுவும் புறச்சுட்டே.
அதே
வகையில் இந்தப் பையன், இப்பெண் என்பதில் இடம் பெறும் இ எனும் சுட்டெழுத்து புறச்சுட்டு
ஆகும்.
அ எனும்
சுட்டெழுத்து இடம் பெறும் சொற்கள் தொலைவில் உள்ளவற்றைச் சுட்டிக் குறிக்கப் பயன்படுவதால்
சேய்மைச் சுட்டு எனப்படும்.
இ எனும்
சுட்டெழுத்து இடம் பெறும் சொற்கள் அண்மையில் உள்ளவற்றைச் சுட்டிக் குறிக்கப் பயன்படுவதால்
அண்மைச் சுட்டு எனப்படும்.
உ எனும்
சுட்டெழுத்து இடம் பெறும் சொற்கள் அண்மைக்கும் சேய்மைக்கும் இடையில் உள்ளவற்றைச் சுட்டிக்
குறிக்கப் பயன்படுவதாகும். இச்சுட்டு தற்போது வழக்கில் இல்லை. ஆனால் செய்யுளில் இவ்வகைச்
சுட்டு பயின்று வருவதைக் காணலாம்.
சுட்டெழுத்துகள்
ஐம்பாலிலும் வரும்.
அவன்,
அவள்,
அவர்,
அது,
அவை
என ‘அ’
எனும் சுட்டெழுத்து ஐம்பாலிலும் வரும். இதே போல மற்ற சுட்டெழுத்துகளுக்கும் ஐம்பாலையும்
எழுதிப் பாருங்களேன்.
*****
No comments:
Post a Comment