Thursday, 30 October 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 31.10.2025 (வெள்ளி)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 31.10.2025 (வெள்ளி)

1) இன்று சர்தார் வல்லபாய் பட்டேலின் 150 ஆவது பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

2) தேசிய ஒற்றுமைத் தினத்தையொட்டி நவம்பர் 1 முதல் 15 வரை பாரதத் திருவிழா என்ற பெயரில் தேசிய அளவிலான கொண்டாட்டம் நடைபெற உள்ளது.

3) தஞ்சாவூர் பெரிய கோயிலில் சதய விழா இன்று தொடங்குகிறது.

4) உச்சநீதி மன்றத்தில் 53 ஆவது தலைமை நீதிபதியாக சூரியகாந்த் நவம்பர் 24 அன்று பதவியேற்பார்.

5) சதுரங்க விளையாட்டில் தமிழகத்தின் 35 ஆவது கிராண்ட் மாஸ்டராக இளம்பரிதி தேர்வாகியுள்ளார்.

6) இந்திய மின்உற்பத்தி திறன் 500 ஜிகா வாட்டைக் கடந்தது.

7) 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அணு ஆயுத சோதனைகளை நடத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

8) உலகக் கோப்பை மகளிர் மட்டைப்பந்து போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

Education & General Knowledge News – 31.10.2025 (Friday)

1) Today is the 150th birth anniversary of Sardar Vallabhbhai Patel, celebrated as National Unity Day.

2) A national-level celebration called Bharath Festival will be held from November 1 to 15 on the occasion of National Unity Day.

3) The Sataya festival at the Thanjavur Big Temple begins today.

4) Suryakant will take oath as the 53rd Chief Justice of the Supreme Court on November 24.

5) Ilamparithi has been selected as the 35th Grand Master of Tamil Nadu in the game of chess.

6) India's power generation capacity has crossed 500 gigawatts.

7) US President Donald Trump has ordered the USA military to conduct nuclear weapons tests again after 30 years.

8) The Indian team has advanced to the final of the Women's Cricket World Cup.

Wednesday, 29 October 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 30.10.2025 (வியாழன்)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 30.10.2025 (வியாழன்)

1) மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முன்சோதனை காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி ஆகிய மூன்று மாவட்டங்களில் நவம்பர் 10லிருந்து மேற்கொள்ளப்பட உள்ளன.

2) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ரஃபேல் போர் விமானத்தில் 30 நிமிடங்கள் சாகசப் பயணம் மேற்கொண்டார்.

3) உலக மட்டைப்பந்து வீரர்களில் இந்தியாவின் ரோஹித் சர்மா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

4) நவம்பர் 4 வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

5) அமேசான் நிறுவனம் இந்தியாவில் 1000 பணியாளர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளது.



Education & General Knowledge News – 30.10.2025 (Thursday)

1) The Census pilot test will be conducted in three districts of Kanchipuram, Tiruvallur and Krishnagiri from November 10.

2) President Draupadi Murmu took a 30-minute adventure in a Rafale fighter jet.

3) India's Rohit Sharma has topped the world's batsmen.

4) There is a possibility of moderate rain in Tamil Nadu till November 4.

5) Amazon is going to lay off 1000 employees in India.

Tuesday, 28 October 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 29.10.2025 (புதன்)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 29.10.2025 (புதன்)

1) மோந்தா புயல் ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் கரையைக் கடந்தது.

2) மோந்தா புயலால் ஆந்திராவில் 1.76 லட்சம் ஹெக்டர் நெற்பயிர்கள் சேதமாயின.

3) ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் எட்டாவது ஊதியக் குழுவை மத்திய அரசு அமைத்தது.

4) தமிழக விவசாயிகளிடையே சிறுநீரகச் செயலிழப்பு அதிகரித்து வருவதாக லான்செட் இதழ் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

5) தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சியாகச் செயற்கை மழைக்கான சோதனை முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.

6) இந்திய தொலைதொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 123 கோடியாக ஆகியது.







Education & General Knowledge News – 29.10.2025 (Wednesday)

1) Cyclone Mondha made landfall near Kakinada in Andhra Pradesh between Machilipatnam and Kalingapatnam at around 7.30 pm last night.

2) Cyclone Mondha damaged 1.76 lakh hectares of paddy crops in Andhra Pradesh.

3) The Central Government has constituted the Eighth Pay Commission headed by retired Supreme Court Justice Ranjana Prakash Desai.

4) A Lancet study has revealed that kidney failure is increasing among Tamil Nadu farmers.

5) Trials of artificial rain are being conducted in Delhi in an attempt to reduce rising air pollution.

6) The number of Indian telecom subscribers has reached 123 crore.

Monday, 27 October 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 28.10.2025 (செவ்வாய்)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 28.10.2025 (செவ்வாய்)

1) நவம்பர் 4 முதல் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் தீவிர திருத்தப் பணிகள் தொடங்குகின்றன.

2) வங்கக் கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல் இன்று ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே இன்று மாலை அல்லது இரவு கரையைக் கடக்கிறது.

3) இன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு கனமழையின் காரணமாக விடுமுறை விடப்பட்டுள்ளது.

4) குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று தமிழகம் வருகை தருகிறார்.

5) ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒரு நாள் மட்டைப்பந்து போட்டியில் காயமடைந்த இந்திய அணியின் துணைத் தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Education & General Knowledge News – 28.10.2025 (Tuesday)

1) Intensive voter registration work will begin in 12 states including Tamil Nadu and Puducherry from November 4.

2) Cyclone Mondha, which has formed in the Bay of Bengal, is expected to make landfall near Kakinada in Andhra Pradesh this evening or night.

3) Schools in Chennai and Tiruvallur districts have been declared holiday today due to heavy rains.

4) Vice President C.P. Radhakrishnan is visiting Tamil Nadu today.

5) Indian team vice-captain Shreyas Iyer, who was injured in an ODI in Australia, has been admitted to the intensive care unit.

Thursday, 23 October 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 24.10.2025 (வெள்ளி)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 24.10.2025 (வெள்ளி)

1) வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2) மருத்துவம் மற்றும் ஆன்மிக சுற்றுலாவில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

3) தமிழகம் முழுவதும் 72 லட்சம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது.

4) இந்திய மத்திய வங்கியின் (ஆர்பிஐ) தங்கக் கையிருப்பு 880 டன்னைக் கடந்தது.

5) சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் பொன்னுசாமி மாரடைப்பால் காலமானார்.

6) இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷ் உடல்நலக் குறைவால்  காலமானார்.

7) நடிகை மனோரமாவின் மகன் பூபதி உடல்நலக் குறைவால் காலமானார்.

8) வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 20,500 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது. விரைவில் நீர் திறப்பு 40,000 கன அடியாக அதிகரிக்கலாம் என்பதால் காவிரி ஆற்றங்கரையோர பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்

9) நுரையீரல் மற்றும் சுவாச மண்டலத்தில் ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு எதிராகப் பயன்படும் 'Nafithromycin' நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து, முதல் முறையாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

10) இந்திய ராணுவத்தில் புதிய உயரடுக்கு படைப்பிரிவுகள் சேர்க்கப்பட உள்ளதாக காலாட்படை இயக்குநர் ஜெனரல் அஜய் குமார் தெரிவித்துள்ளார். சீனா, பாகிஸ்தான் உடனான எல்லைப் பகுதிகளில் திடீர் தாக்குதல்கள், ரோந்து பணிகள், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த 'Bhairav Battalion' என்ற பெயரில் புதிய படைப்பிரிவுகள் உருவாக்கப்பட உள்ளன. பைரவ் பட்டாலியனின் முதல் படைப்பிரிவு நவம்பர் 1ஆம் தேதி ராணுவத்தில் இணைய உள்ளது. அடுத்த 6 மாதங்களில் இதுபோன்ற 25 படைப்பிரிவுகளை உருவாக்கப்பட உள்ளன. ஒவ்வொரு பிரிவுகளிலும் காலாட்படை, பீரங்கிகள், வான் பாதுகாப்பு அமைப்புகளை கொண்ட 250 வீரர்கள் இடம்பெற உள்ளனர்.

11) வெள்ளை மாளிகையில் கடந்த அக்டோபர் 17 அன்று நடந்த சந்திப்பில், கிழக்கு டான்பாஸ் பகுதி முழுவதையும் ரஷ்யாவிடம் ஒப்படைக்க உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.




Education & General Knowledge News

1) The Meteorological Department has said that a low pressure area is likely to form in the Bay of Bengal today.

2) Tamil Nadu ranks first in India in medical and spiritual tourism.

3) The Tamil Nadu Forest Department has reported that 72 lakh palm seeds have been planted across Tamil Nadu.

4) The gold reserves of the Reserve Bank of India (RBI) have crossed 880 tonnes.

5) DMK MLA Ponnusamy from Senthamangalam constituency passed away due to a heart attack.

6) Music composer Deva's brother Sabesh passed away due to ill health.

7) Actress Manorama's son Bhupathi passed away due to ill health.

8) As the northeast monsoon intensifies, 20,500 cubic feet of water is to be released from the KRS dam. Officials have advised the public living along the banks of the Cauvery river to be safe as the water level may soon increase to 40,000 cubic feet.

9) Union Minister Jitendra Singh has said that the antibiotic 'Nafithromycin', which is used against infections in the lungs and respiratory system, has been developed domestically for the first time.

10) New elite battalions are to be inducted into the Indian Army, said Director General of Infantry Ajay Kumar. The new battalions are to be formed under the name 'Bhairav ​​Battalion' to be involved in surprise attacks, patrolling and counter-terrorism operations in the border areas with China and Pakistan. The first battalion of the Bhairav ​​Battalion is to be inducted into the army on November 1. 25 such battalions are to be formed in the next 6 months. Each battalion will have 250 soldiers with infantry, artillery and air defense systems.

11) It has been reported that during a meeting at the White House on October 17, US President Trump urged Ukrainian President Zelensky to hand over the entire eastern Donbas region to Russia.

Wednesday, 22 October 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 23.10.2025 (வியாழன்)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 23.10.2025 (வியாழன்)

1) சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், இராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2) வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புயல் சின்னம் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையைக் கடக்கும்.

3) தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு 3680 ரூபாய் குறைந்தது.

4) வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் பொருட்டு தமிழகம் முழுவதும் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

5) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சபரி மலையில் தரிசனம் செய்தார்.

6) இந்தியாவில் மின்சார மகிழ்வுந்துகளின் விற்பனை இரட்டிப்பாகியது.




Education & General Knowledge News – 23.10.2025 (Thursday)

1) Heavy rain warning has been issued for 5 districts namely Chennai, Kanchipuram, Chengalpattu, Tiruvallur and Ranipet.

2) The cyclone symbol in the Bay of Bengal will cross the coast between North Tamil Nadu and South Andhra Pradesh.

3) Gold fell by Rs. 3680 per sovereign in a single day.

4) Medical teams have been kept ready across Tamil Nadu to face the Northeast monsoon.

5) President Draupadi Murmu visited Sabarimala.

6) Sales of electric vehicles doubled in India.

Tuesday, 21 October 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (22.10.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (22.10.2025)

1) இந்த ஆண்டின் வடகிழக்குப் பருவமழையின் முதலாவது புயல் சின்னம் வங்கக் கடலில் உருவாகியுள்ளது.

2) வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் தமிழகத்தை நோக்கி நகர்வதால் இன்று தமிழகத்திற்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

3) வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததை அடுத்துத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களை நிவாரணப் பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ளுமாறு விடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

4) தீபாவளிப் பண்டிகையைத் தொடர்ந்து சென்னையில் 60 டன் பட்டாசுக் குப்பைகள் அகற்றப்பட்டன.

5) தமிழகம் முழுவதும் வெடி விபத்துகளால் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

6) இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 7 ஆயிரம் கோடி மதிப்பிலான பட்டாசுகள் விற்பனை ஆகியுள்ளன.

7) தீபாவளி பண்டைகையையொட்டி 789 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்கில் மதுபான விற்பனை நடந்துள்ளது.

8) குடியரசுத்  தலைவர் திரௌபதி முர்மு நான்கு நாட்கள் அரசு முறை பயணமாகக் கேரளா வந்தடைந்தார்.

9) பிரதமர் நரேந்திர மோடி இவ்வாண்டு தீபாவளியைக் கோவா கடற்படை வீரர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.





Education & GK News

1) The first storm of this year's northeast monsoon has formed in the Bay of Bengal.

2) A heavy rain warning has been issued for Tamil Nadu today as the storm that has formed in the Bay of Bengal is moving towards Tamil Nadu.

3) Tamil Nadu Chief Minister M.K. Stalin has ordered the district collectors to immediately carry out relief work after the northeast monsoon intensified.

4) 60 tons of firecracker waste was removed in Chennai following the Diwali festival.

5) More than 200 people were injured in explosions across Tamil Nadu and are receiving treatment.

6) Firecrackers worth Rs 7,000 crore have been sold for this year's Diwali festival.

7) Liquor sales worth Rs 789 crore were made at TASMAC on the occasion of the Diwali festival.

8) President Draupadi Murmu arrived in Kerala on a four-day official visit.

9) Prime Minister Narendra Modi celebrated Diwali with Goa Navy personnel this year.

Sunday, 19 October 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (20.10.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (20.10.2025)

1) வங்கக் கடலில் 21 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

2) தமிழகத்திற்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

3) பெருமழையை எதிர்கொள்ள தமிழகம் தயாராக இருப்பதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

4) கத்தாரில் நடந்த பேச்சு வார்த்தையில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது.

5) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

6) பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அத்தியாவசிய துறைகளுக்குத் தடையற்ற மின்சாரம் வழங்குவதை மின்வாரியம் உறுதிபடுத்தியுள்ளது.

7) வைகை அணை வேகமாக நிரம்பியதை அடுத்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

8) ஒகேனக்கலுக்கு வரும் காவிரி நீர் 9500 கன அடியாக அதிகரித்துள்ளது.

9) வெள்ளப் பெருக்கின் காரணமாகக் குற்றால அருவியில் குளிக்க நான்காவது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

10) உலக அளவில் தரமான சேவையை வழங்குவதில் சென்னை மெட்ரோ முதலிடத்தைப் பிடித்துள்ளது.

11) வரி சீர்திருத்தத்தைத் தொடர்ந்து 54 பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கண்காணிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமான் தெரிவித்துள்ளார்.

12) பெற்றோர்களைக் கவனிக்காத அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தெலுங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.

13) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக 70 லட்சம் அமெரிக்கர்கள் வீதியில் இறங்கி போராடுகின்றனர்.




Education & GK News

1) A new low-pressure area is forming in the Bay of Bengal on the 21st October.

2) A heavy rain warning has been issued for Tamil Nadu.

3) Tamil Nadu Chief Minister M.K. Stalin has said that Tamil Nadu is ready to face heavy rains.

4) A ceasefire agreement was reached between Pakistan and Afghanistan during talks held in Qatar.

5) Primary health centers have been kept ready in view of the Diwali festival.

6) The Electricity Board has ensured uninterrupted power supply to essential sectors as a precautionary measure against the monsoon.

7) A flood warning has been issued after the Vaigai dam was filled rapidly.

8) Cauvery water entering Hogenakkal has increased to 9500 cubic feet.

9) Bathing in the Kutralam Falls has been banned for the fourth day due to flooding.

10) Chennai Metro has ranked first in providing quality service globally.

11) Finance Minister Nirmala Sitharaman has announced that the Goods and Services Tax (GST) on 54 items will be monitored following tax reforms.

12) Telangana Chief Minister Revanth Reddy has announced that the salaries of government employees who do not take care of their parents will be deducted.

13) Seven million Americans are taking to the streets to protest against the authoritarian actions of US President Donald Trump.

Saturday, 18 October 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (19.10.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (19.10.2025)

1) அடுத்தடுத்த இரண்டு புயல் சின்னங்களால் தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2) தீபாவளியை முன்னிட்டு 110 சிறப்பு தொடர்வண்டிகள் அக்டோபர் 22 வரை இயக்கப்படுகின்றன.

3) தங்கத்தின் விலை சவரனுக்கு 1600 ரூபாய் குறைந்து 96000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

4) நாடு முழுவதும் போலி எண்மக் கைது பிரச்சனை (டிஜிட்டல் அரெஸ்ட்) அதிகரித்து வருவது குறித்து உச்சநீதி மன்றம் கவலை தெரிவித்துள்ளது.

5) வைகை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் மூன்று அடி உயர்ந்தது.

6) முற்றிலும் உள்நாட்டிலே தயாரான பிரமோஸ் ஏவுகணைகள் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

7) ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.



Education & GK News

1) The Meteorological Department has said that there is a possibility of heavy rain in Tamil Nadu due to the next two cyclones.

2) 110 special trains are being operated till October 22 on the occasion of Diwali.

3) The price of gold has fallen by Rs. 1600 per sovereign and is being sold at Rs. 96000.

4) The Supreme Court has expressed concern over the increasing problem of fake digital arrests across the country.

5) The water level of the Vaigai dam has risen by three feet in a single day.

6) The completely indigenously manufactured Brahmos missiles have been handed over to the Army.

7) US President Donald Trump has said that India has reduced the purchase of crude oil from Russia.

Thursday, 16 October 2025

கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

தமிழக அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதற்கான அறிவிப்பைக் கீழே காண்க.

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (17.10.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (17.10.2025)

1) அரசுப் பள்ளிகளில் பயிலும் வருவாய் ஈட்டும் தாய் – தந்தையரை இழந்த மாணவர்களுக்கு 5.94 கோடி மதிப்பில் காப்பீடு பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

2) சித்த மருத்துவ பல்கலைக்கழக விவகாரத்தில் ஆளுநரின் கருத்துகளை நிராகரித்துச் சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3) பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்ஸி) மூலம் நிரப்ப சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

4) தமிழகத்தில் நேற்று வடகிழக்குப் பருவமழை நேற்று தொடங்கியது.

5) வடகிழக்குப் பருவ மழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்கித் தமிழகத்தில் ஐந்து பெண்கள் உயிரிழந்தனர்.

6) அக்டோபர் 18 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7) மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான முன்னோட்டப் பயிற்சி நவம்பர் 10 இல் தொடங்குகிறது.




Education & General Knowledge News (17.10.2025)

1) Insurance policies worth Rs 5.94 crore have been provided to students studying in government schools who have lost their earning parents.

2) A unanimous resolution was passed in the Assembly rejecting the Governor's comments on the Siddha Medical University issue.

3) A bill has been introduced in the Assembly to fill non-teaching posts in universities through the Tamil Nadu Public Service Commission (TNPSC).

4) The northeast monsoon began in Tamil Nadu yesterday.

5) Five women died in Tamil Nadu due to lightning strikes during the northeast monsoon.

6) The Meteorological Department has said that a cyclone is likely to form in the Bay of Bengal on October 18 and 24.

7) The preview exercise for the census will begin on November 10.

Wednesday, 15 October 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (16.10.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (16.10.2025)

1) வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு நவம்பர் மாதத்துக்கான அரிசியை இந்த மாதமே நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

2) கனமழை காரணமாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

3) கொளத்தூரில் அதி நவீன துணை மின் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

4) தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்புத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

5) பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேரும் நாடுகள் மீது கடுமையான வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

6) பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.






Education & General Knowledge News (16.10.2025)

1) The Tamil Nadu government has announced that rice for the month of November can be purchased at fair price shops this month itself in view of the northeast monsoon.

2) A holiday has been declared for schools only in Tirunelveli, Thoothukudi and Tenkasi districts due to heavy rains.

3) Tamil Nadu Chief Minister M.K. Stalin inaugurated a modern sub power station in Kolathur.

4) Anti-corruption department officials conducted raids in government offices across Tamil Nadu yesterday.

5) US President Donald Trump has warned that countries joining the BRICS group will be subject to heavy taxes.

6) There is renewed tension on the Pakistan-Afghanistan border.