Sunday, 30 November 2025

அரையாண்டு தேர்வு கால அட்டவணை – டிசம்பர் 2025

அரையாண்டு தேர்வு கால அட்டவணை – டிசம்பர் 2025

முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அரையாண்டு தேர்வு கால அட்டவணையைக் கீழே காண்க.

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (01.12.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (01.12.2025)

1) இன்று முதல் தமிழகத்தில் தனிநபர் பயன்பாட்டுக்கான இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஆய்வு (RTO Registration) ரத்து செய்யப்படுகிறது.

2) கரையைக் கடக்காமல் டித்வா புயல் வலுவிழந்தது. தமிழகத்துக்கு மழை அபாயம் நீங்கியது.

3) டித்வா புயலால் ஏற்பட்ட கனமழையால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 50000 ஏக்கர் வயல்களும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 13000 ஏக்கர் வயல்களும் நீரில் மூழ்கின.

4) தமிழகத்தில் பெய்துள்ள கனமழையால் நீர்த்தேக்கங்கள் 85 சதவீதம் நிரம்பின.

5) சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே அரசுப் பேருந்துகள் மோதிக் கொண்டதில் 11 பேர் உயிரிழந்தனர். 49 பேர் காயமடைந்தனர்.

6) டித்வா புயலால் ஏற்பட்ட கனமழையால் இலங்கையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளது.

7) பொருளாதாரம் மற்றும் ராணுவ வலிமையில் இந்தியா உலகின் மூன்றாவது பலம் வாய்ந்த நாடாக உருவாகியுள்ளது.




Education & GK News

1) From today, the Regional Transport Office (RTO) registration for two-wheelers and four-wheelers for personal use in Tamil Nadu will be canceled.

2) Cyclone Titva weakened without making landfall. The threat of rain has been lifted for Tamil Nadu.

3) Due to heavy rains caused by Cyclone Titva, 50,000 acres of fields in Nagapattinam district and 13,000 acres of fields in Thanjavur district were submerged.

4) Due to heavy rains in Tamil Nadu, reservoirs were filled by 85 percent.

5) 11 people died in a collision between government buses near Tirupattur in Sivaganga district. 49 people were injured.

6) The death toll in Sri Lanka due to heavy rains caused by Cyclone Titva has increased to 334.

7) India has emerged as the third most powerful country in the world in terms of economy and military strength.

‘பாரத் டாக்ஸி’ செயலி!

‘பாரத் டாக்ஸி’ செயலி!

ஆட்டோ, கார் கட்டணம் அதிகமாக இருக்கிறது என்று புலம்பியவர்கள் ஓலா, ஊபர் வந்ததும் கொண்டாடினார்கள். இதில் ஓலா இந்திய நிறுவனம். ஊபர் அமெரிக்க நிறுவனம். கூடிய விரைவிலயே நிலைமை மாறியது. ஓலா, ஊபரின் கட்டணங்கள் எகிறியடிக்க அதிலிருந்து ஒரு மாற்றம் கிடைக்காதா என மக்கள் ஏங்கும் வேளையில் ‘பாரத் டாக்ஸி’ என்ற செயலி அறிமுகமாக இருக்கிறது. இது ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் நியாயமான மாற்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் மும்பை, புனே, லக்னோ, ஜெய்ப்பூர் போன்ற பெருநகரங்களில் அறிமுகமாகப் போகும் இச்செயலி கூடிய விரைவிலேயே அனைத்து நகரங்களுக்கும் வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொறுத்திருந்துதான் பார்ப்போமே, பாரத் டாக்ஸி என்னென்ன மாற்றங்களைச் செய்யப் போகிறது என்று?

*****

Saturday, 29 November 2025

கடனை அடைக்கவும் முறைகள் இருக்கின்றன!

கடனை அடைக்கவும் முறைகள் இருக்கின்றன!

கடனில்லாத வறியவர்கள்கள்தான் செல்வந்தர் என்கிறார் ஔவையார். இந்தக் காலத்தில் செல்வந்தர்களே கடனில்தான் இருக்கிறார்கள். வறியவர்களும் கடனில்தான் இருக்கிறார்கள். ஆசையில்லாத மனிதர்களையும் கடனில்லாத மனிதர்களையும் பார்க்க முடியாத இந்த உலகில் வாங்கிய கடனை அடைப்பதற்குச் சில வழிமுறைகளும் இருக்கின்றன.

‘ஸ்னோபால்’ என்பது அதில் ஒரு முறை. பனிக்கட்டிகள் அளவைப் பொருத்து விரைவில் கரையும் என்பது இதன் தத்துவம். இதன்படி சிறிய கடன்களாகப் பார்த்து அடைக்கத் தொடங்கி, அது அடைபடும் வேகத்தைப் பார்த்து அதே உத்வேகத்தில் பெரிய கடன்களை அடைத்து முடிக்க வேண்டும். ஒரு சிறிய கடனை அடைத்து முடிக்கும் போது அடுத்து இருக்கும் பெரிய கடன் மற்ற கடன்களோடு ஒப்பிடுகையில் சிறிய கடனாக இருக்கும். அதை அடைத்து முடிக்கையில் அடுத்து இருக்கும் பெரிய கடன் சிறிய கடனாக ஆகி விடும். இப்படியே கடைசியில் எஞ்சியிருக்கும் மிகப்பெரிய கடனும் சிறிய கடனாகி எல்லா கடனையும் அடைத்து முடித்து விடலாம் என்பது இம்முறை காட்டும் வழி.

‘அவலாஞ்சி’ என்பது இன்னொரு முறை. இதைப் பனிச்சரிவு முறை என்கிறார்கள். இது முதலில் சொன்ன முறைக்கு எதிர் திசையில் பயணிப்பது. இங்கு பெரிய கடன்களை முதலில் முடிக்க வேண்டும். இதனால் மிச்சமாகும் வட்டியைக் கொண்டு அடுத்தடுத்த பெரிய கடன்களை விரைவில் முடிக்கலாம். இப்படியே முடித்துக கொண்டே போனால் கடைசியில் எஞ்சியிருக்கும் சிறிய கடன் ஜு ஜூபியாகி நீங்கள் தூக்கிச் சாப்பிடக் கூடிய நிலைக்கு வந்துவிடும்.

இந்த இரண்டு முறைகளில் உங்களுக்குப்பொருத்தமான முறையில் நீங்கள் கடனைக் கட்டிக் காலி பண்ண பாருங்கள். இந்த இரண்டு முறையும் வேண்டாம் என்றால் வேறு வழியே இல்லை, கடன் வாங்காமல் இருக்க வேண்டியதுதான்.

*****

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (30.11.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (30.11.2025)

1) சென்னைக்கு 250 கி.மீ தொலைவிலும், காரைக்காலுக்கு 80 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ள டித்வா புயலால் தமிழகம் கனமழையையையும் சூறைக்காற்றையும் எதிர்கொண்டு வருகிறது.

2) டித்வா புயல் 7 லிருந்து 10 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.

3) டித்வா புயல் கரையை நெருங்குவதற்கு முன்பே வலுவிழக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4) கனமழையின் காரணமாக ஏரிகள் நிரம்பியதால் பூண்டி ஏரியிலிருந்து 3500 கன அடி நீரும், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 2500 கன அடி நீரும் வெளியேற்றப்படுகின்றன.

5) திருநெல்வேலி மாவட்டத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுங்குளிராக 200 செல்சியஸ் பதிவாகியுள்ளது.

6) டிசம்பர் 5 இல் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தை நடத்த பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

7) இலங்கையில் கனமழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150 ஐக் கடந்தது.

8) இந்தோனேசியா, சுமத்ரா தீவுகளில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு 170க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.






Education & GK News

1) Cyclone Titva, centered 250 km from Chennai and 80 km from Karaikal, is causing heavy rains and strong winds in Tamil Nadu.

2) Cyclone Titva is moving northwest at a speed of 7 to 10 kmph.

3) Cyclone Titva is likely to weaken before it reaches the coast, the Meteorological Department has said.

4) Due to the filling of lakes due to heavy rains, 3500 cubic feet of water is being released from the Poondi lake and 2500 cubic feet of water is being released from the Chembarambakkam lake.

5) Tirunelveli district has recorded a cold snap of 200 Celsius, the coldest in 100 years.

6) The School Education Department has advised schools to hold a school management committee meeting on December 5.

7) The death toll due to heavy rains in Sri Lanka has crossed 150.

8) More than 170 people have died in floods caused by heavy rains on the Indonesian island of Sumatra.

Friday, 28 November 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (29.11.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (29.11.2025)

1) டித்வா புயல் கரையை நெருங்கி வருவதால் சென்னை மற்றும் நாகப்பட்டினம் துறைமுகங்களில் நான்காம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

2) டித்வா புயலை எதிர்கொள்ள அரசு இயந்திரம் தயார் நிலையில் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

3) டித்வா முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாகப் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

4) டித்வா புயலால் ஏற்பட்ட கனமழையால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5) இந்தியப் பொருளாதாரம் 8.2 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது.

6) ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் டிசம்பர் 4 இல் இந்தியா வருகிறார்.


Education & GK News

1) Cyclone Warning Cage No. 4 has been raised at Chennai and Nagapattinam ports as Cyclone Titva approaches the coast.

2) Chief Minister M.K. Stalin has said that the government machinery is ready to face Cyclone Titva.

3) The Chief Minister has appealed to the public not to come out unnecessarily as a precautionary measure against Cyclone Titva.

4) The death toll in Sri Lanka due to heavy rains caused by Cyclone Titva has increased to 85. More than 50 thousand people have been affected.

5) The Indian economy has achieved 8.2 percent economic growth.

6) Russian President Vladimir Putin is coming to India on December 4.

Thursday, 27 November 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (28.11.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (28.11.2025)

1) வங்கக் கடலில் டித்வா புயல் உருவானது.

2) ஐந்து நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செலல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

3) வட கடலோர மாவட்டங்களில் 45 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4) கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

5) முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியாகின.

6) புதிய பாரத எழுத்தறித் திட்டத் தேர்வுகள் டிசம்பர் 14 இல் நடைபெற உள்ளன.

7) சமூக ஊடகப் பதிவுகளை ஒழுங்குபடுத்த தன்னாட்சி அமைப்பு தேவை என உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.

8) தமிழகத்தில் வாக்காளர் திருத்தப் படிவங்களைப் (SIR) பதிவேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

9) டிசம்பர் 4க்குள் வாக்காளர் திருத்தப் படிவங்களை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

10)  டிசம்பர் 9 இல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது.

11) வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத வாக்காளர்கள் மீண்டும் புதிதாக படிவம் 6 மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Education & GK News

1) Cyclone Titva has formed in the Bay of Bengal.

2) Fishermen have been warned not to venture into the sea for five days.

3) The Meteorological Department has said that land winds of up to 45 kmph may blow in the northern coastal districts.

4) Schools in Rameswaram taluk of Ramanathapuram district have been declared holiday due to heavy rains.

5) Results of the examination for the post of post-graduate teacher have been released online.

6) New Bharat Literacy Scheme examinations are to be held on December 14.

7) The Supreme Court has said that an autonomous body is needed to regulate social media posts.

8) The work of uploading voter correction (SIR) forms is in full swing in Tamil Nadu.

9) Voter correction forms have been advised to be submitted by December 4.

10) Draft voter list to be released on December 9.

11) It is noteworthy that voters whose names are not in the draft voters' list will have to apply again using Form 6.

Wednesday, 26 November 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் -27.11.2025 (வியாழன்)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் -27.11.2025 (வியாழன்)

1) தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.

2) சென்னை, நாகப்பட்டினம் துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

3) இராமேஸ்வரம் மற்றும் பாம்பனில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

4) உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளரும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

5) சென்யார் புயல் இந்தோனேசியாவில் கரையைக் கடந்தது.

6) தனியார் வாகனங்களில் பயணிப்பதற்கான பாரத் டாக்சி என்ற செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

7) மழையால் வரத்து குறைந்ததால் தக்காளியின் விலை கிலோ 100 ரூபாயை எட்டியது. முருங்கைக் காயின் விலை கிலோ 400 ரூபாயை எட்டியது.




Education & General Knowledge News -27.11.2025 (Thursday)

1) A new low-pressure area has formed in the southwest Bay of Bengal.

2) Cyclone Warning Cage Number One has been hoisted at Chennai and Nagapattinam ports.

3) Cyclone Warning Cage Number Two has been hoisted at Rameswaram and Pamban.

4) President Draupadi Murmu has expressed confidence that India will become the third largest economy in the world.

5) Cyclone Senyar has crossed the coast in Indonesia.

6) An app called Bharat Taxi for traveling in private vehicles is to be launched soon.

7) The price of tomatoes has reached Rs 100 per kg due to reduced supply due to rain. The price of drumsticks has reached Rs 400 per kg.

Tuesday, 25 November 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 26.11.2025 (புதன்)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 26.11.2025 (புதன்)

1) கோவையில் உலகத்தரத்தில் செம்மொழிப் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

2) இன்று அரசியலமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டுக் குடியரசுத் தலைவர் தலைமையில் டில்லியில் விழா நடைபெறுகிறது.

3) ஜனநாயகத்தின் பிறப்பிடம் இந்தியா எனத் தமிழகத்தைக் குறிப்பிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

4) இதுவரை தமிழகத்தை நோக்கி 11 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

5) சென்னைக்குக் குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி முழுமையாக நிரம்பியது

6) எத்தியோப்பியாவில் வெடித்த எரிமலையால் உருவான சாம்பல் மற்றும் புகையால் இந்திய விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.



Education & General Knowledge News – 26.11.2025 (Wednesday)

1) Chief Minister M.K. Stalin inaugurated a world-class classical Tamil park in Coimbatore.

2) A ceremony is being held in Delhi under the presidency of the President today ahead of Constitution Day.

3) Prime Minister Narendra Modi has expressed pride, calling Tamil Nadu the birthplace of democracy, India.

4) Chief Minister M.K. Stalin has said that investments worth Rs 11 lakh crore have been attracted towards Tamil Nadu so far.

5) Veeranam Lake, which supplies drinking water to Chennai, is completely filled

6) Indian air traffic has been affected by ash and smoke generated by the volcano that erupted in Ethiopia.

Monday, 24 November 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (25.11.2025) - செவ்வாய்

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (25.11.2025)

1) வரும் கல்வியாண்டு முதல் பாடத்திட்டம் படிப்படியாக மாற்றப்படும் எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

2) போட்டித் தேர்வு மையங்களில் அதிகரித்து வரும் தற்கொலைகள் குறித்து ஆராய நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டுள்ளது.

3) ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து மலேசியாவும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமுக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது.

4) தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படாது என தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உறுதி அளித்துள்ளார்.

5) உச்சநீதி மன்றத்தின் 53 ஆவது தலைமை நீதிபதியாக சந்திரகாந்த் பதவியேற்றார்.

6) நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் ஐஎன்எஸ் மாஹே கடற்படையில் இணைக்கப்பட்டது.

7) பழம்பெரும் இந்தி நடிகர் தர்மேந்திரா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 89.






Education & GK News

1) School Education Minister Anbil Mahesh Poyyamozhi has said that the curriculum will be gradually changed from the next academic year.

2) A parliamentary committee has been formed to look into the increasing number of suicides at competitive examination centers.

3) Following Australia, Malaysia has also banned the use of social media by children under the age of 16.

4) Tamil Nadu Chief Electoral Officer Archana Patnaik has assured that the names of eligible voters will not be deleted.

5) Chandrakant took oath as the 53rd Chief Justice of the Supreme Court.

6) Anti-submarine warfare ship INS Mahe was commissioned into the Navy.

7) Veteran Hindi actor Dharmendra passed away due to ill health. He was 89.

Sunday, 23 November 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (24.11.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (24.11.2025)

1) வங்கக் கடலில் சென்யார் புயல் நாளை மறுநாள் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2) தமிழகத்தின் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

3) கனமழை எச்சரிக்கை காரணமாக 15 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

4) சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள் 78 சதவீதம் நிரம்பின.

5) ஜி20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி தெற்குலகின் குரலை உயர்த்துவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

6) உச்சநீதிமன்றத்தின் 53 ஆவது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பதவியேற்கிறார்.

7) வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஹேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு நாடு கடத்துமாறு வங்கதேசம் இந்தியாவுக்குக் கடிதம் எழுதியுள்ளது.

8) காவல்துறை மரியாதையுடன் ஈரோடு தமிழன்பனின் உடல் தகனம் செய்யப்பட்டது.







Education & GK News

1) The Meteorological Department has said that Cyclone Senyar is likely to form in the Bay of Bengal the day after tomorrow.

2) A heavy rain warning has been issued for the southern and delta districts of Tamil Nadu.

3) A holiday has been declared for schools in 15 districts due to the heavy rain warning.

4) The lakes that supply drinking water to Chennai are 78 percent full.

5) Prime Minister Narendra Modi, who participated in the G20 summit, has expressed his hope that we will raise the voice of the South.

6) Suryakanth will take oath as the 53rd Chief Justice of the Supreme Court today.

7) Bangladesh has written a letter to India to extradite former Bangladesh Prime Minister Hak Hasina to Bangladesh.

8) Erode Tamilanpan's body was cremated with police honors.

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (23.11.2025) - ஞாயிறு

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (23.11.2025)

1) வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவம்பர் 26 இல் புயலாக வலுபெற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2) தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

3) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 10 மசோத்தாகளை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

4) பீகாரில் ஆறு மாவட்டங்களில் தாய்ப்பாலில் யுரேனியல் கலந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5) டெல்லியில் காற்று மாசு அதிகரித்ததைத் தொடர்ந்து 50 சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது.

6) நடப்பு நிதியாண்டில் தொடர்வண்டிப் போக்குவரத்து 100 கோடி டன் சரக்குகளைக் கையாண்டு சாதனைப் படைத்துள்ளது.

7) கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 92.

8) துபாய் விமான சாகச நிகழ்ச்சியின் போது விபத்தில் உயிரிழந்த நமன் சியால் உடலுக்கு சூலூர் விமானப்படைத் தளத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.






Education & GK News

1) The Meteorological Department has said that the low-pressure area formed in the Bay of Bengal is likely to strengthen into a cyclone on November 26.

2) A yellow alert has been issued for 16 districts in Tamil Nadu today.

3) The central government plans to pass 10 bills in the winter session of Parliament.

4) Uranium mixed in breast milk in six districts of Bihar has caused shock.

5) Following the increase in air pollution in Delhi, 50 percent of employees have been allowed to work from home.

6) Railway transport has set a record by handling 1 billion tonnes of goods in the current financial year.

7) Poet Erode Tamilanban passed away due to illhealth. He was 92 years old.

8) Tributes were paid to the body of Naman Sial, who died in an accident during a Dubai air show, at the Sulur Air Force Base.