‘பாரத் டாக்ஸி’ செயலி!
ஆட்டோ,
கார் கட்டணம் அதிகமாக இருக்கிறது என்று புலம்பியவர்கள் ஓலா, ஊபர் வந்ததும் கொண்டாடினார்கள்.
இதில் ஓலா இந்திய நிறுவனம். ஊபர் அமெரிக்க நிறுவனம். கூடிய விரைவிலயே நிலைமை மாறியது.
ஓலா, ஊபரின் கட்டணங்கள் எகிறியடிக்க அதிலிருந்து ஒரு மாற்றம் கிடைக்காதா என மக்கள்
ஏங்கும் வேளையில் ‘பாரத் டாக்ஸி’ என்ற செயலி அறிமுகமாக இருக்கிறது. இது ஓட்டுநர்களுக்கும்
பயணிகளுக்கும் நியாயமான மாற்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில்
மும்பை, புனே, லக்னோ, ஜெய்ப்பூர் போன்ற பெருநகரங்களில் அறிமுகமாகப் போகும் இச்செயலி
கூடிய விரைவிலேயே அனைத்து நகரங்களுக்கும் வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொறுத்திருந்துதான்
பார்ப்போமே, பாரத் டாக்ஸி என்னென்ன மாற்றங்களைச் செய்யப் போகிறது என்று?
*****

No comments:
Post a Comment