கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 18.11.2025 (செவ்வாய்)
1) தமிழக பள்ளிக்கல்வித்
துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ‘இயந்திரக் கற்றல் வழியாக பள்ளி மாணவர்களுக்கான
திறன் மேம்பாடு மற்றும் உடலியக்கச் செயல்பாடு’ எனும் தலைப்பிலான முனைவர் பட்ட ஆய்விற்கான
வாய்மொழித் தேர்வை நிறைவு செய்தார்.
2) தமிழ்ச் சமூகத்தின்
வரலாற்று ஆய்வை மேற்கொள்ள மாதந்தோறும் 50000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என உயர்கல்வித்
துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.
3) இயற்கை வேளாண்மை
மாநாட்டைத் துவங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவை வருகிறார்.
4) தமிழ்நாட்டில்
திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
5) செம்பரம்பாக்கம்
ஏரியிலிருந்து 1200 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
6) 16 ஆவது நிதிக்குழு
அறிக்கை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
7) பீகாரில் நிதிஷ்குமார்
தலைமையிலான அரசு நவம்பர் 20 இல் பதவியேற்க உள்ளது.
8) வங்கதேச நீதிமன்றம்
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
9) சவூதி அரேபியாவின்
மதீனா அருகே நடந்த பேருந்து விபத்தில் 42 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
10) முருகப்பா குழுமத்தின்
முன்னாள் தலைவர் வெள்ளையன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 72.
Education & General Knowledge News – 18.11.2025
(Tuesday)
1) Tamil Nadu
School Education Minister Anbil Mahesh Poyyamozhi completed the VIVA for his
doctoral thesis titled ‘Skill Development and Physical Activity for School
Students through Machine Learning’.
2) Higher
Education Minister Govi Chezhiyan
has announced that a monthly stipend of Rs. 50,000 will be provided to conduct
historical research on Tamil society.
3) Prime
Minister Narendra Modi is coming to Coimbatore tomorrow to inaugurate the
Organic Farming Conference.
4) Yellow alert
has been issued for 8 districts in Tamil Nadu, including Tirunelveli and
Kanyakumari.
5) 1200 cubic
feet of surplus water is being released from Chembarambakkam lake.
6) The 16th
Finance Commission report has been submitted to the President.
7) The Nitish
Kumar-led government in Bihar is set to take office on November 20.
8) Bangladesh
court sentences Sheikh Hasina to death.
9) 42 Indians
killed in bus accident near Medina, Saudi Arabia.
10) Former
Murugappa Group chairman Vellaiyan passed away due to ill health. He was 72.




No comments:
Post a Comment