கடனை அடைக்கவும் முறைகள் இருக்கின்றன!
கடனில்லாத
வறியவர்கள்கள்தான் செல்வந்தர் என்கிறார் ஔவையார். இந்தக் காலத்தில் செல்வந்தர்களே கடனில்தான்
இருக்கிறார்கள். வறியவர்களும் கடனில்தான் இருக்கிறார்கள். ஆசையில்லாத மனிதர்களையும்
கடனில்லாத மனிதர்களையும் பார்க்க முடியாத இந்த உலகில் வாங்கிய கடனை அடைப்பதற்குச் சில
வழிமுறைகளும் இருக்கின்றன.
‘ஸ்னோபால்’
என்பது அதில் ஒரு முறை. பனிக்கட்டிகள் அளவைப் பொருத்து விரைவில் கரையும் என்பது இதன்
தத்துவம். இதன்படி சிறிய கடன்களாகப் பார்த்து அடைக்கத் தொடங்கி, அது அடைபடும் வேகத்தைப்
பார்த்து அதே உத்வேகத்தில் பெரிய கடன்களை அடைத்து முடிக்க வேண்டும். ஒரு சிறிய கடனை
அடைத்து முடிக்கும் போது அடுத்து இருக்கும் பெரிய கடன் மற்ற கடன்களோடு ஒப்பிடுகையில்
சிறிய கடனாக இருக்கும். அதை அடைத்து முடிக்கையில் அடுத்து இருக்கும் பெரிய கடன் சிறிய
கடனாக ஆகி விடும். இப்படியே கடைசியில் எஞ்சியிருக்கும் மிகப்பெரிய கடனும் சிறிய கடனாகி
எல்லா கடனையும் அடைத்து முடித்து விடலாம் என்பது இம்முறை காட்டும் வழி.
‘அவலாஞ்சி’
என்பது இன்னொரு முறை. இதைப் பனிச்சரிவு முறை என்கிறார்கள். இது முதலில் சொன்ன முறைக்கு
எதிர் திசையில் பயணிப்பது. இங்கு பெரிய கடன்களை முதலில் முடிக்க வேண்டும். இதனால் மிச்சமாகும்
வட்டியைக் கொண்டு அடுத்தடுத்த பெரிய கடன்களை விரைவில் முடிக்கலாம். இப்படியே முடித்துக
கொண்டே போனால் கடைசியில் எஞ்சியிருக்கும் சிறிய கடன் ஜு ஜூபியாகி நீங்கள் தூக்கிச் சாப்பிடக் கூடிய
நிலைக்கு வந்துவிடும்.
இந்த
இரண்டு முறைகளில் உங்களுக்குப்பொருத்தமான முறையில் நீங்கள் கடனைக் கட்டிக் காலி பண்ண
பாருங்கள். இந்த இரண்டு முறையும் வேண்டாம் என்றால் வேறு வழியே இல்லை, கடன் வாங்காமல்
இருக்க வேண்டியதுதான்.
*****

No comments:
Post a Comment