வானியல் ஆர்வமுள்ளவர்கள் ISRO வுக்கு விண்ணப்பிக்கலாம்
வானியல் ஆய்வாளர்கள்,
வானியல் ஆர்வலர்கள் ISRO வின் அஸ்ட்ரோசாட் செயற்கைகோளின் தரவுகளைப் பெற்று வானியல்
ஆய்வு மெற்கொள்ளலாம். அஸ்ட்ரோசாட் என்ற செயற்கைக்கோள் வானியல் ஆய்வுக்காக 2015 இல்
இஸ்ரோவால் ஏவப்பட்டதாகும். இச்செயற்கைகோள் அனுப்பிய தரவுகளை 2018 முதல் இஸ்ரோ பொதுவெளியில்
பகிர்ந்து ஆய்வு மேற்கொள்ள ஊக்குவித்து வருகிறது. அஸ்ட்ரோசாட் தரவுகளைக் கொண்டு ஆய்வு
மேற்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது திட்ட அறிக்கையினை sspo@isro.gov.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
தேர்வாகும் நபர்கள் இஸ்ரோவின் நிதியுதவியுடன் அஸ்ட்ரோசாட் தரவுகளைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளலாம். திட்ட அறிக்கையை அனுப்ப கடைசி நாள் 31.05.2021 ஆகும். மேலதிக விவரங்களுக்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment