Wednesday, 2 July 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (03.07.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (03.07.2025)

1) மாணவர்களை வளர்த்தெடுக்கவே புதுப்புது திட்டங்கள் தீட்டப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2) சிவகங்கை மாவட்டம், திருபுவனம் கோயில் காவலாளி கொலை வழக்கை மத்திய புலனாய்வு அமைப்புக்கு (சிபிஐ) மாற்றி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

3) தமிழகக் காவல் துறையில் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகள் அனைத்தும் கலைக்கப்படுவதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

4) புதிய தலைமை மருத்துவமனைகளுக்கு விரைவில் மருத்துவர்கள் நியமிக்கப்படுவர் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

5) தக்காளி விலை திடீரென உயர்ந்து கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

6) 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு ஒரு லட்சம் கோடியை ஒதுக்கியுள்ளது.

7) இந்திய கப்பற்படையில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் தமால்  போர்க்கப்பல் சேர்க்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

8) ‘எண்ம இந்தியா’ (டிஜிட்டல் இந்தியா) திட்டம் நாட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

9) பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கு எட்டு நாள் பயணமாக இன்று டெல்லியிலிருந்து புறப்பட்டார்.

10) அதிகப் பயன்பாட்டு நேரங்களில் இரு மடங்கு கட்டணம் வசூலித்துக் கொள்ள ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

Education & GK News

1) Chief Minister M.K. Stalin has said that new schemes are being planned to develop students.

2) The Chief Minister has ordered the transfer of the murder case of the Thiruvuvanam temple guard in Sivaganga district to the Central Bureau of Investigation (CBI).

3) DGP Shankar Jiwal has said that all unauthorized special forces in the Tamil Nadu Police Department are being disbanded.

4) Health Minister M. Subramanian has said that doctors will soon be appointed to new head hospitals.

5) Tomato prices have suddenly increased and are being sold at Rs 50 per kg.

6) The central government has allocated one lakh crore rupees to create 3.5 crore jobs.

7) The Russian-made INS Thamal warship was inducted into the Indian Navy and dedicated to the nation.

8) Prime Minister Narendra Modi has said that the ‘Digital India’ project will eliminate inequalities in the country.

9) Prime Minister Narendra Modi left Delhi today for an eight-day visit to five countries.

10) The central government has allowed Ola and Uber to charge double the fare during peak hours.

No comments:

Post a Comment