கல்வி & பொது அறிவுச் செய்திகள் (11.07.2025)
1) தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1996 முதுகலை
ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆகஸ்ட்
12 வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரிக்குக் கீழே சொடுக்கவும்.
2) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
திருவாரூர் நடுநிலைப் பள்ளியில் முன்னறிவிப்பின்றி ஆய்வு செய்தார்.
3) திருவாரூரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றுத் தமிழக
முதல்வர் மு.க.ஸ்டாலின் 600 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
4) பிரதமர் நரேந்திர மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது வழங்கப்பட்டது.
5) சர்வதேச விண்வெளி மையத்தில் சுபான்சு சுக்லா வெந்தயம், பச்சை
பயிறு போன்றவற்றை வெற்றிகரமாக முளைக்கச் செய்து ஆய்வு செய்துள்ளார்.
6) தலைநகர் டில்லியில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலநடுக்கம் ஹரியானாவின் குராவாரா பகுதியில் மையம் கொண்டிருந்தது.
7) பிரேசிலுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர்
டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Education & GK News
1) A notification has been issued for 1996 vacancies for
postgraduate teachers in government schools in Tamil Nadu. Applications can be
made online till August 12.
Click below for the website address to apply.
2) School Education Minister Anbil Mahesh Poyamozhi made
an unannounced inspection at Tiruvarur Middle School.
3) Tamil Nadu Chief Minister M.K. Stalin participated in
a government function held in Tiruvarur and provided welfare schemes worth Rs
600 crore.
4) Prime Minister Narendra Modi was awarded Namibia's
highest award.
5) Subhanshu Shukla has successfully germinated
fenugreek and green gram at the International Space Station and conducted
research.
6) A moderate earthquake occurred in the capital Delhi
yesterday. The epicenter of the earthquake was in the Kurawara area of Haryana.
7) US President Donald Trump has said that Brazil will
be subject to a 50 percent tax.
No comments:
Post a Comment