Monday, 14 July 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (15.07.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (15.07.2025)

இன்று கர்மவீரர், கல்விக்கண் திறந்த ஏழைப் பங்காளர் காமராசரின் 123 ஆவது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

1) ‘உங்களுடன் ஸ்டாலின்’ எனும் 10000 சிறப்பு முகாம்களைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சிதம்பரத்திலிருந்து தொடங்கி வைக்கிறார்.

2) திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று தமிழ் முறைப்படி குடமுழுக்கு நடைபெற்றது.

3) நாடு முழுவதும் தீவிர சிறப்பு வாக்காளர் திருத்தம் அடுத்த மாதம் துவங்க உள்ளது.

4) நிகழ் ஆண்டில் மூன்றாவது முறையாக வீராணம் ஏரி நிரம்பியது.

5) தொடர் பட்டாசு விபத்துகளைத் தொடர்ந்து விருதுநகரில் உரிய பாதுகாப்புகள் இன்றி செயல்பட்டதாக 200 பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.

6) சர்க்கரை நோய், இதய நோய், கொழுப்பு நோய்களின் காரணமாக இனி புகையிலையைப் போன்று சமோசா, ஜிலேபி போன்ற உணவுப் பொருட்களுக்கும் எச்சரிக்கை வாசகத்தை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.

7) விம்பிள்டன் டென்னிஸ் சாதனையாளர் பட்டத்தை இத்தாலியின் யானிக் சின்னர் வென்றுள்ளார்.

8) பழம்பெரும் திரைப்பட நடிகை சரோஜாதேவி 87 ஆவது வயதில் நேற்று உடல்நல குறைவால் பெங்களூரில் காலமானார்.

எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த சரோஜாதேவி பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

50 ஆண்டுகால திரைப்பட வாழ்க்கையில் 200க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.

அபிநய சரஸ்வதி என்று அழைக்கப்பட்ட சரோஜா தேவியின் இயற்பெயர் ராதாதேவி கவுடா.

1938 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி கர்நாடகாவில் பிறந்தார் நடிகை சரோஜா தேவி.

60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

மகாகவி காளிதாஸ் என்ற கன்னட திரைப்படம் மூலம் 1955 இல் திரையுலகில் தடம் பதித்தார் சரோஜா தேவி.

1958 இல் தமிழ் சினிமாவில் அறிமுகமான சரோஜா தேவி முன்னணி நாயகர்களாக வலம் வந்த எம்ஜிஆர் உடன் 26 படங்கள், சிவாஜியுடன் 22 படங்களில் நடித்துள்ளார்.

Education & GK News

Today, the 123rd birth anniversary of Karmaveerar Kamarajar, the poor partner who opened the eyes of education, is being celebrated as Education Development Day.

1) Tamil Nadu Chief Minister M.K. Stalin will inaugurate 10,000 special camps called ‘Stalin with you’ from Chidambaram today.

2) A Tamil ritual consecration was held at the Thiruparankundram Subramania Swamy Temple yesterday.

3) Intensive special voter registration revision across the country is set to begin next month.

4) Veeranam Lake filled for the third time this year.

5) Following a series of firecracker accidents, 200 cracker factories were closed in Virudhunagar for operating without proper safety measures.

6) Due to diabetes, heart disease and cholesterol diseases, the central government is going to take steps to give warning labels to food items like samosa and jalebi like tobacco.

7) Italy's Yannick Cinner has won the Wimbledon tennis champion.

8) Veteran film actress Saroja Devi passed away yesterday in Bangalore due to ill health at the age of 87.

Saroja Devi, who acted with leading actors including MGR and Sivaji, has received various awards including Padma Shri and Padma Bhushan.

She has acted in more than 200 films in a film career of 50 years.

Saroja Devi, known as Abhinaya Saraswathi, was originally named Radha Devi Gowda.

Actress Saroja Devi was born on January 7, 1938 in Karnataka.

She has acted in Tamil, Kannada, Telugu, Malayalam and Hindi language films for more than 60 years.

Saroja Devi made her mark in the film industry in 1955 with the Kannada film Mahakavi Kalidas.

Saroja Devi, who debuted in Tamil cinema in 1958, acted in 26 films with MGR, who was a leading actor, and 22 films with Sivaji.

No comments:

Post a Comment