கல்வி & பொது அறிவுச் செய்திகள் (17.07.2025)
1) இளநிலை மருத்துவ படிப்பிற்கான (எம்பிபிஎஸ்) கலந்தாய்வு சூலை
30 முதல் தொடங்குகிறது.
2) அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு
சூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்.
3) புதுவை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 10 சதவீதம்
உயர்கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
4) மாணவர்கள் படிப்பதற்கு உகந்த நகரங்களின் பட்டியலில் சென்னை
நகரம் 128 ஆவது இடத்தில் உள்ளது. தென்கொரியாவின் சியோல் முதல் இடத்திலும், ஜப்பானின்
டோக்கியோ இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்தின் லண்டன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
5) அடுத்த மாதம் தொடங்க உள்ள நாடாளுமன்றத்தின் மக்களவைக் கூட்டத்தொடரில்
எட்டு மசோத்தாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
6) இந்தியாவின் சூன் மாத வேலை வாய்ப்பின்மை 5.6 சதவீதமாக உள்ளது.
7) சிறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்குரிய வசதிகளைச் செய்து
தர வேண்டும் என்று தமிழக சிறை அதிகாரிகளுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
8) ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 100 சதவீதம்
வரி விதிக்கப்படும் என நேட்டோ அமைப்பு எச்சரித்துள்ளது.
Education & GK News
1) The counselling for undergraduate medical courses
(MBBS) will start from July 30.
2) Applications for postgraduate courses in government
arts and science colleges can be made till July 31.
3) Chief Minister Rangasamy has announced that 10
percent reservation will be given to students studying in Puducherry government
schools.
4) Chennai is ranked 128th in the list of cities
suitable for students to study. Seoul in South Korea is at the first place,
Tokyo in Japan is at the second place, and London in England is at the third
place.
5) Eight bills are to be introduced in the Lok Sabha
session of Parliament that begins next month.
6) India's unemployment rate in June is 5.6 percent.
7) The Supreme Court has ordered the Tamil Nadu prison
authorities to provide facilities for the differently-abled in prisons.
8) NATO has warned that countries trading with Russia
will be taxed 100 percent.
No comments:
Post a Comment