பணம் எடுக்கும் தானியங்கி இயந்திரத்தில் (ATM)
பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்!
பணம்
எடுக்கும் தானியங்கி இயந்திரத்தைப் பயன்படுத்தும் போது பின்வரும் பாதுகாப்பு நடைமுறைகளைக்
கடைபிடிப்பது பலவிதங்களில் நன்மையாக அமையும். அவையாவன,
ஆள்நடமாட்டம்
மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் உள்ள தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரப் பகுதிகளைத்
(ATM Located Area) தேர்ந்தெடுங்கள்.
பண அட்டையின்
ரகசிய எண்ணைப் பதிவிடும் போது பிறர் பார்க்காத வண்ணம் இயந்திரத்தின் அருகில் நின்று
பதிவிடுங்கள். யாராவது அருகில் வந்து நீங்கள் பதிவிடும் எண்ணைப் பார்ப்பதாகத் தெரிந்தால்
கூச்சப்படாமல் அவரைத் தள்ளி நிற்குமாறு சொல்லுங்கள்.
பண அட்டையின்
ரகசிய எண்ணை மூன்று மாதங்களுக்கு ஒரு முறையேனும் மாற்றம் செய்யுங்கள்.
பண அட்டையின்
ரகசிய எண்ணை அட்டையிலேயே எழுதி வைக்காதீர்கள்.
இயந்திரத்தில்
பரிவர்த்தனை முழுவதுமாக முடிந்து வங்கியின் முகப்புத் திரை தோன்றும் வரை இயந்திரத்தை
விட்டு அகலாதீர்கள்.
பணம்
எடுத்த பின்பு ஏதோ அவசரத்தில் அல்லது வேறு ஏதோ நினைப்பில் பண அட்டையை இயந்திரத்திலிருந்து
எடுக்க மறக்காதீர்கள்.
உங்களது
பண அட்டையானது காணாமல் போனாலோ அல்லது தொலைந்து போனாலோ உடனடியாக வங்கிக்குத் தகவல் தெரிவித்து
அந்த அட்டையை முடக்குங்கள்.
பண அட்டை
மூலமாக நீங்கள் எந்தப் பரிவர்த்தனை செய்தாலும் உடடினயாக உங்கள் அலைபேசி எண்ணுக்குச்
செய்தி வரும் வகையில் வங்கிக்குச் சென்று உங்கள் அலைபேசி எண்ணைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
யாரிடமும்
பண அட்டையைக் கொடுத்துப் பணம் எடுத்து வரச் சொல்லாதீர்கள்.
பண அட்டையைக்
கொடுத்து யாரையும் பணம் எடுத்துக் கொடுக்கச் சொல்லி உதவி கேட்காதீர்கள். நீங்களே பணம்
எடுக்க கற்றுக் கொள்ளுங்கள்.
கூட்டமாக
இருக்கிறது என்பதற்காகப் பணம் எடுக்கும் போது அவசரம் காட்டாதீர்கள் மற்றும் பதற்றம்
அடையாதீர்கள்.
பொதுவாக
மாதத்தின் முதல் ஐந்து நாட்கள் பணம் எடுக்கும் தானியங்கி இயந்திரப் பகுதிகள் கூட்டமாக
இருக்கும். இயன்றவரை மாதத்தின் முதல் ஐந்து நாட்ககளில் பணம் எடுப்பதை மாற்றிக் கொண்டு,
அதன் பிறகு பணம் எடுப்பதற்கேற்ப உங்கள் பண நிர்வாகத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
கூட்டத்தைத் தவிர்க்க இத்திட்டமிடல் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
*****
No comments:
Post a Comment