சில சொல் வேறுபாடுகள்!
ஈ – தா – கொடு
ஈ – தா – கொடு போன்ற சொற்களுக்குப்
பொதுவாக ‘ஒன்றை அளித்தல்’ என்று பொருள் கொண்டாலும், இச்சொற்களிடையே நுட்பமான வேறுபாடுகள்
இருப்பதாகத் தமிழறிஞர்கள் குறிப்பிடுவர்.
‘ஈ’ என்பது யாசிப்பவர் யாசித்துத்
‘தாருங்கள்’ என்று கேட்பதைக் குறிக்கும்.
‘தா’ என்பது சமநிலையில் இருப்போர்
தமக்கு இப்பொருளைத் தாருங்கள் என்று கேட்பதைக் குறிக்கும்.
‘கொடு’ என்பது உயர்நிலையில்
இருப்போர் தாழ்நிலையில் உள்ளோரிடம் இதை எமக்குக் கொடு எனக் கேட்பதைக் குறிக்கும்.
உண்ணல் - தின்னல்
உண்ணல் – தின்னல் எனும் சொற்களின்
பொருளும் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும் இச்சொற்களுக்கு இடையே நுட்பமான வேறுபாடுகள்
உண்டு.
‘உண்ணல்’ என்பது பசியடங்க
வயிற்றை நிரப்புதலைக் குறிக்கும்.
‘தின்னல்’ என்பது சிறிதளவு
உண்ணுதலைக் குறிக்கும்.
*****
No comments:
Post a Comment