Tuesday, 22 July 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (23.07.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (23.07.2025)

1) உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை ஆய்வு செய்தார்.

2) மத்திய கல்வி வாரியப் பள்ளிகளில் கண்காணிப்பு ஒளிப்பதிவு கருவிகள் (சிசிடிவி காமிராக்கள்) பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

3) சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா பதவியேற்றுக் கொண்டார்.

4) இந்தியாவில் மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி 47 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

5) இந்தியாவின் 14 ஆவது குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

6) முன்னாள் கேரள முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் வயது மூப்பின் காரணமாகக் காலமானார். அவருக்கு வயது 101.

7) 11 ஆவது உலக சதுரங்கக் கோப்பைப் போட்டிகள் இந்தியாவில் அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை நடைபெற உள்ளன. போட்டிகள் நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

8) ஒரே நாளில் வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் ஏற்றம் கண்டு 128 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Education & GK News

1) Chief Minister M.K. Stalin, who was admitted to the hospital due to ill health, inspected the government works from there.

2) Installation of CCTV cameras has been made mandatory in Central Board of Secondary Education schools.

3) M.M. Srivastava took oath as the Chief Justice of Madras High Court.

4) Exports of electronic goods in India have grown by 47 percent.

5) Jagdeep Dhankhar, the 14th Vice President of India, has resigned from his post.

6) Former Kerala Chief Minister V.S. Achuthanandan has passed away due to old age. He was 101 years old.

7) The 11th World Chess Cup is to be held in India from October 30 to November 27. The venue of the tournament will be announced later.

8) The price of silver has increased by Rs 2 per gram in a single day and is being sold at Rs 128.

No comments:

Post a Comment