Tuesday, 17 February 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 18.02.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 18.02.2026

1) தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 17.36 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

2) தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதமாக உள்ளதாகத் தமிழக பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

3) தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

4) குமரி முனையில் உள்ள திருவள்ளுவர் சிலை பேரறிவின் சிலை என அழைக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

5) அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்காக பட்ஜெட்டில் 11000 ரூபாய் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

6) கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

7) திருச்சி, மதுரை, ஓசூர் ஆகிய நகரங்களில் புதிய டைடல் பார்க்குகள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8) சுற்றுலா துறையில் தமிழகம் இந்திய அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளது.

வரலாற்றில் இன்று…

1) 1836 இல் இராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த தினம் இன்று.

2) அணுகுண்டின் தந்தை எனப்படும் ராபர்ட் ஓப்பன்ஹைமர் 1967 இல் மறைந்த தினம் இன்று.

3) 1930 இல் கிளைட் டோம்பாக் புளூட்டோவைக் கண்டுபிடித்த தினம் இன்று.






Education & GK News

1) 17.36 lakh students are writing the Class X and Class XII public examinations in Tamil Nadu.

2) The Tamil Nadu Economic Survey states that Tamil Nadu's economic growth is 11.19 percent.

3) Finance Minister Thangam Thennarasu presented the interim budget in the Tamil Nadu Legislative Assembly.

4) The Tamil Nadu government has announced that the Thiruvalluvar statue at Kumari Point will be named the Statue of wisdom.

5) Rs 11,000 crore has been allocated in the budget for the pension scheme of government employees.

6) It has been announced in the budget that one lakh houses will be built under the Kalaignar Kanavu Illam scheme.

7) New tidal parks will be set up in the cities of Trichy, Madurai and Hosur.

8) Tamil Nadu has ranked second in the tourism sector in India.

Today in history…

1) Today is the birth anniversary of Ramakrishna Paramahamsa in 1836.

2) Today is the anniversary of the death of Robert Oppenheimer, known as the father of the atomic bomb, in 1967.

3) Today is the anniversary of the discovery of Pluto by Clyde Tombaugh in 1930.

Monday, 16 February 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 17.02.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 17.02.2026

இன்று இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் அண்டார்டிகா பகுதியில் நிகழ்கிறது.

1) இன்று தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

2) இன்றைய இடைக்கால பட்ஜெட் காகிதமில்லாப் பட்ஜெட்டாகத் தாக்கல் செய்யப்படுகிறது.

3) பிப்ரவரி 23 இல் தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

4) தமிழகத்தில் 88 கல்வி நிறுவனங்களுக்குச் சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

5) புதுடெல்லியில் 5 நாட்கள் நடைபெற உள்ள செயற்கை நுண்ணறிவு மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார்.

6) இரண்டு நாள் அரசு முறை பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் செல்கிறார்.

7) வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் பிப்ரவரி 21 இல் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வரலாற்றில் இன்று…

1) 1867 இல் சூயஸ் கால்வாயில் முதல் கப்பல் பயணித்த நாள் இன்று.

2) 1986 இல் ஜே. கிருஷ்ணமூர்த்தி மறைந்த தினம் இன்று.



Education & GK News

Today, the first solar eclipse of the year will occur in Antarctica.

1) Today, the Tamil Nadu Legislative Assembly meets. The interim budget is being presented.

2) Today's interim budget is being presented as a paperless budget.

3) Chief Electoral Officer Archana Patnaik has said that the final voter list of Tamil Nadu will be published on February 23.

4) 88 educational institutions in Tamil Nadu have been granted minority status.

5) Prime Minister Narendra Modi inaugurated the 5-day Artificial Intelligence Conference in New Delhi.

6) Prime Minister Narendra Modi is on a two-day official visit to Israel.

7) A low-pressure area has formed in the Bay of Bengal. Due to this, there is a possibility of heavy rain in 10 districts of Tamil Nadu on February 21.

Today in history…

1) Today is the day the first ship sailed through the Suez Canal in 1867.

2) Today is the day J. Krishnamurthy passed away in 1986.

Sunday, 15 February 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (16.02.2026)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (16.02.2026)

1) வங்கக் கடலில் இன்று புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2) சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் நாளை தொடங்க உள்ளன.

3) இந்தியாவில் முதல் முறையாக நீருக்கு அடியில் செல்லும் சாலைமற்றும் ரயில் சுரங்கப்பாதைத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

4) வங்கதேச பிரதமராகத் தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்கிறார்.

5) டி20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றது.

வரலாற்றில் இன்று…

1) 1959 இல் கியூபாவின் அதிபராகப் பிடல் காஸ்ட்ரோ பதவியேற்ற தினம் இன்று.

2) 2005 இல் புவி வெப்பமடைவதைத் தடுக்க ஐ.நா. சபை கொண்டு வந்த கியோட்டோ ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த தினம் இன்று.

Education & GK News

1) The Meteorological Department has said that a cyclone is likely to form in the Bay of Bengal today.

2) CBSE public exams are set to begin tomorrow.

3) The Union Cabinet has approved the project of a road and rail tunnel going under water for the first time in India.

4) Tariq Rahman will take oath as the Prime Minister of Bangladesh tomorrow.

5) India qualified for the Super 8 round by defeating Pakistan in the T20 World Cup cricket match.

Today in history…

1) Today is the day when Fidel Castro was sworn in as the President of Cuba in 1959.

2) Today is the day the Kyoto Protocol, which was brought by the UN in 2005 to prevent global warming, came into effect.

Saturday, 14 February 2026

டைனோசர்கள் ஏன் நம்மோடு வாழவில்லை?

டைனோசர்கள் ஏன் நம்மோடு வாழவில்லை?

சுமார் ஆறரைக் கோடி வருஷங்களுக்கு முன்னால், பூமியின் சீஇஓ டைனோசர்கள்தான். அப்போது மனிதன் கிடையாது, மொபைல் போன் கிடையாது.

அப்புறம் எப்படி அவை அவுட் ஆப் ஆர்டர் ஆயின?

அது ஒரு மெகா ஆக்சிடென்ட்.

மெக்சிகோ வளைகுடாவில் வந்து விழுந்தது ஒரு விண்கல்.

அதன் தாக்கம் எப்படி இருந்தது தெரியுமா?

ஒரே நேரத்தில் ஒரு கோடி அணுகுண்டுகளை வெடித்தால் எப்படி இருக்குமோ அப்படி!

அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

பூமி முழுக்க கரும்புகை மூடியது.

சூரிய ஒளிக்கு நோ என்ட்ரி.

அப்படியானால் ஒளிச்சேர்க்கை என்னாவது? அதற்கும் விழுந்தது செக் போஸ்ட்.

ஒளிச்சேர்க்கை இல்லையென்றால் என்னவாகும்?

தாவரங்கள் தலைமறைவாகி விட்டன.

இதனால், செடி, கோடிகளைத் தின்ற டைனோசர்கள் காலி. அந்த டைனோசர்களைத் தின்ற பாஸ் டைனோசர்கள் காலி. இந்த செயின் ரியாக்சன் தொடரால் அனைத்து டைனோசர்களும் காலி. விளைவு இன்று நம்மிடையே டைனோசர்கள் இல்லை.

டைனோசர்களின் மிகப்பெரிய பலவீனமே ஷங்கர் படம் போன்ற அவற்றின் பிரம்மாண்டம்தான். ஊத்திக் கொண்டால் கதை கந்தல்தான். இந்தியன் 2 போல ஆகி விடும். அப்படித்தான் ஆகி விட்டது.

ஒருவேளை அந்த விண்கல் மட்டும் விழாமல் இருந்திருந்தால், இன்று உங்களோடு பஸ் ஸ்டாண்டில் ஒரு டைனோசர் க்யூவில் நின்று கொண்டிருக்கும். அல்லது கண்டபடி அலைந்து கொண்டிருக்கும் தெருநாய் போலவோ, பசுமாடு போலவோ நகரத்து வீதிகளில் திரிந்து கொண்டிருக்கும். அல்லது உங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஒரு குட்டி டைனோசர் திருட்டுத்தனமாக நுழைந்து குப்பையைக் கிளறிக் கொண்டிருக்கும்.

நல்லவேளை, இயற்கையானது மனிதன் என்கிற அடுத்த புராஜெக்ட்டுக்கு வழிவிட நினைத்தது. டைனோசர்களை மியூசியத்திற்கு அனுப்பிவிட்டு, நம்மை தியேட்டர் பக்கம் அனுப்பி வைத்தது. நாம் தியேட்டரில் ஜுராசிக் பார்க் படத்தைக் கைதட்டிப் பார்த்தபடி பொழுது போக்கிக் கொண்டோம்.

*****

தேர்தல் பணியாளர்களுக்கான மதிப்பூதிய விவரம்

தேர்தல் பணியாளர்களுக்கான மதிப்பூதிய விவரம்

வாக்குச்சாவடி அலுவலர்கள் உட்பட தேர்தல் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதிய விவரங்களைக் கீழே காண்க.

Friday, 13 February 2026

Service Certificate for TET

Service Certificate for TET

2026 சூன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்விற்கான பணிச் சான்றிதழ் மாதிரியைக் கீழே காண்க.

Special TET அறிவிப்பு

Special TET அறிவிப்பு

பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். அது குறித்த அறிவிப்பைக் கீழே காண்க.