Wednesday 25 September 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 26.09.2024 (வியாழன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)      150 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள தொடக்கப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்களை இடைநிலை ஆசிரியர் பணியிடங்களாக மாற்றுவது குறித்து கல்வித் துறையில் பரிசீலனை நடப்பதாகக் கல்வித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2)      காலாண்டு விடுமுறையை செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6 வரை ஒன்பது நாட்களுக்குப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. அக்டோபர் 7 இல் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்.

3)      மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் கல்வித் துறைக்கான நிதியைக் கேட்டு முதல்வர் இன்று டெல்லி செல்கிறார்.

4)      மாநிலம் முழுவதும் சிறந்த நெசவாளர் மற்றும் வடிவமைப்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்ட 12 விருதாளர்களுக்கு முதல்வர் விருதுகளை வழங்கினார்.

5)      சென்னை உயர்நீதி மன்ற தலைமை பதிவாளராக நீதிபதி அல்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

6)      தமிழகத்தில் மர்ம காய்ச்சல் பாதிப்பு இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

7)      காஷ்மீரில் இரண்டாம் கட்டமாக 26 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

8)      இந்தியாவில் 4000 கோடியில் 31 கப்பல்கள் கட்டப்பட்டு வருவதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

9)      விரைவில் அமைதி திரும்பும், போர் முடிவுக்கு வரும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

10)  ஹரிணி அமர சூரிய இலங்கையின் புதிய பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

English News

1) According to sources in the Education Department, the Education Department is considering converting the posts of Headmasters into Secondary Grade Teacher Posts in primary schools with less than 150 students.

2) The school education department has announced the quarterly holiday for nine days from September 28 to October 6. Schools will reopen on October 7 after the quarterly vacation.

3) CM is going to Delhi today to ask for funds for metro rail project and education department.

4) Chief Minister presented awards to 12 awardees selected as best weavers and designers across the state.

5) Judge Alli has been appointed as the Chief Registrar of Madras High Court.

6) Minister of Health has said that there is no case of mysterious fever in Tamil Nadu.

7) Assembly elections were held in Kashmir in the second phase in 26 assembly constituencies.

8) Defense Minister Rajnath Singh said that 31 ships are being built in India at a cost of 4000 crores.

9) Ukrainian President Zelensky said that peace will return soon and the war will end.

10) Harini Amara Surya has been selected as the new Prime Minister of Sri Lanka.

No comments:

Post a Comment