பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) அரசுக்குச் சொந்தமான நிலம் மற்றும் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பவர்கள்
மீது கிரிமினல் வழக்கு தொடருமாறு மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
2) காலாண்டு விடுமுறைக்காக 1120 சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளதாக
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
3) நியாய விலைக் கடைகளில் தராசுகளுடன் விற்பனை இயந்திரத்தை இணைப்பதற்கான
உத்தரவைத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
4) உச்சநீதி மன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதை அடுத்து முன்னாள்
அமைச்சர் செந்தில் பாலாஜி 471 நாட்களுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வருகிறார்.
5) சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக பல இடங்கள்
தண்ணீரில் மிதக்கின்றன.
6) மும்பையில் ஒரே நாளில் 27 சென்டி மீட்டர் பெய்த மழையால் மும்பை
மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
7) புனேயில் கனமழை பொழியக் கூடும் என்ற வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையால்
பிரதமரின் புனே பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
8) தமிழகத்திற்கு மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையை வழங்கியுள்ள
வானிலை ஆய்வு மையம்.
9) பாரசிட்டாமால், கால்சியம் மாத்திரைகள், விட்டமின் பி3 மாத்திரைகள்
உள்ளிட்ட 53 மருந்துகள் மருந்து தரநிலைச் சோதனையில் தோல்வி அடைந்துள்ளதாக இந்திய மருத்து
கட்டுப்பாட்டு அமைப்பு அறிவித்துள்ளது.
10) திருப்பதி தேவஸ்தானத்துக்குக் கலப்பட நெய் வழங்கிய புகாரில்
திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
11) கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோனையை பசிபிக் பெருங்கடலில்
சீனா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
12) அமெரிக்க அதிபர் தேர்தலில் விண்வெளியில் இருந்து வாக்களிக்க
இருக்கிறார் சுனிதா வில்லியம்ஸ்.
13) நுங்கம்பாக்கம் காம்தார்நகர் சாலைக்குப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
பெயர் வைக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
14) உக்ரைன் போர் தீவிரமானால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா
தயங்காது என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எச்சரித்துள்ளார்.
English News
1) The Tamil Nadu Government has directed the District
Collectors to file criminal cases against those encroaching on government owned
land and water bodies.
2) Government State Transport Corporation has informed
that it will operate 1120 special buses for the quarterly holidays.
3) Government of Tamil Nadu has issued an order to
connect vending machines with scales in fair price shops.
4) Former minister Senthil Balaji comes out of jail
after 471 days after Supreme Court granted him conditional bail.
5) Many places are floating in water due to heavy rain
in Chennai.
6) 27 cm of rain in a single day in Mumbai, Mumbai city
is reeling under floods.
7) Prime Minister's visit to Pune has been canceled due
to weather forecast of heavy rains in Pune.
8) Meteorological Center has issued heavy rain warning
for Tamil Nadu for three days.
9) The Medicines Control Organization of India has
announced that 53 medicines including paracetamol, calcium tablets and vitamin
B3 tablets have failed the drug standard test.
10) A case has been registered against the Dindigul A.R.
dairy company on the complaint of providing adulterated ghee to Tirupati
Devasthanam.
11) China has successfully launched an ICBM in the
Pacific Ocean.
12) Sunita Williams to vote in US presidential election
from space.
13) The Chief Minister has announced that Nungambakkam
Kamtarnagar road will be named after singer SB Balasubramaniam.
14) Russian President Vladimir Putin has warned that
Russia will not hesitate to use nuclear weapons if the war in Ukraine
escalates.
No comments:
Post a Comment