Gold Reserve of India
உலக
நாடுகள் தங்கத்தின் கையிருப்பை அடிப்படையாகக் கொண்டே பணத்தை அச்சடிக்கின்றன. ஒரு நாட்டின்
பொருளாதார மதிப்பு என்பது இதனால் அந்நாட்டின் தங்கத்தின் கையிருப்பைக் கொண்டே மதிப்பிடப்
படுகிறது. அதனடிப்படையில் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? சந்தேகமே இல்லாமல் அமெரிக்காதான்.
அமெரிக்காவின்
தங்க கையிருப்பு 8133 டன்னாக இருக்கிறது.
அதற்கடுத்த
இரண்டாவது இடத்தில் 3351 டன் தங்க கையிருப்பைக் கொண்டு ஜெர்மனி இருக்கிறது.
மூன்றாவது
இடத்தில் 2814 டன் தங்க கையிருப்போடு ஐ.எம்.எப். உள்ளது.
நான்காவது
இடத்தில் இத்தாலியும், ஐந்தாவது இடத்தில் பிரான்சும், ஆறாவது இடத்தில் ரஷ்யாவும், ஏழாவது
இடத்தில் சீனாவும், எட்டாவது இடத்தில் சுவிட்சர்லாந்தும், ஒன்பதாவது இடத்தில் ஜப்பானும்
உள்ளன.
இந்தியாவின்
இடம் இதில் எத்தனையாவது என்கிறீர்களா? பத்தாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவின்
தங்கக் கையிருப்பு எவ்வளவு தெரியுமா? 840 டன்.
மக்கள்
தொகையில் முதல் இடத்திலும் பரப்பளவில் ஏழாவது இடத்தில் இருந்தாலும் தங்க கையிருப்பில்
நாம் பத்தாவது இடத்தில் இருக்கிறோம்.
No comments:
Post a Comment