Tuesday 24 September 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 25.09.2024 (புதன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)      கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 4.76 கோடி மதிப்பிலான பள்ளிக் கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

2)      மாணவர்கள் ஆராய்ச்சித் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தியுள்ளார்.

3)      சிறுவர்களைக் கைக்கணினிகள் எனும் டேப்லட்டுகள் கோபக்காரர்களாக மாற்றுவதாக கனடாவின் டோரன்டோ பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

4)      மனித குலத்தின் வெற்றி போர்க்களத்தில் இல்லை, ஒற்றுமையில்தான் இருக்கிறது என ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

5)      வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளது.

6)      சென்னை, நாகர்கோயில் உள்ளிட்ட 12 இடங்களில் மத்திய புலனாய்வு அமைப்பு (NIA) நேற்று சோதனை நடத்தியது.

7)      தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7207 உறுப்பு தானம் செய்யப்பட்டுள்ளது.

8)      காஷ்மீரில் இன்று இரண்டாம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

9)      லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

10)  புதிய உச்சமாகத் தங்கத்தின் விலை சவரனுக்கு 56000 ஐக் கடந்தது.

English News

1) The Chief Minister inaugurated school buildings worth 4.76 crores in Kolathur constituency.

2) Higher Education Minister Ponmudi has advised students to develop research skills.

3) The University of Toronto, Canada, says that tablets and laptops are making kids angry.

4) Prime Minister Narendra Modi has said in the United Nations that the victory of mankind is not in the battlefield but in unity.

5) A new depression has formed over the Bay of Bengal.

6) The National Investigation Agency (NIA) conducted raids at 12 places including Chennai and Nagercoil yesterday.

7) 7207 organs have been donated in 16 years in Tamil Nadu.

8) Voting for the second phase of assembly elections is taking place in Kashmir today.

9) More than 500 people were killed in Israel's attack on Lebanon.

10) Gold price crosses 56000 per sovereign as new high.

No comments:

Post a Comment