படிப்பில் சூப்பர் ஸ்டார் ஆக…!
படிப்பில்
நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆக வேண்டுமா?
நிச்சயம்
ஆகலாம்.
அதற்கு
முன்பு நடிப்பில் யார் சூப்பர் ஸ்டார் என்று பார்ப்போம். நடிப்பில் யார் சூப்பர் ஸ்டார்
என்று உங்களுக்குத் தெரியாதா என்ன?
இந்திய
திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்.
தமிழ்த்
திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்.
இவர்கள்
இருவரையும் பின்பற்றியே அவர்கள் நடிப்பில் சூப்பர் ஸ்டார் ஆனதைப் போல, நீங்கள் படிப்பில்
சூப்பர் ஸ்டார் ஆகலாம்.
அது
எப்படி என்கிறீர்களா?
அவர்கள்
நடிப்பில் கடைபிடிக்கும் நுட்பங்களை நீங்கள் படிப்பில் கடைபிடித்தால் நிச்சயம் நீங்களும்
சூப்பர் ஸ்டார் ஆகலாம்.
அவர்கள்
அப்படி என்னதான் நுட்பங்களைக் கடைபிடிக்கிறார்கள்?
ரஜினி,
அமிதாப் இருவரும் தங்கள் தொழில் வாழ்க்கையில் கடைபிடிக்கும் ஒழுக்கம் அபரிமிதமானது.
நீங்களும் அப்படி ஒழுக்கத்தைக் கடைபிடிக்கலாம்.
அவர்கள்
இருவரின் பணிவைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. நீங்களும் அப்படி பணிவானவர்களாக இருக்கலாம்.
இருவருமே
இயக்குநர்களை மதிப்பதில் நிகரற்றவர்கள். நீங்களும் அப்படி ஆசிரியர்களை மதிக்கலாம்.
தங்கள்
குருநாதர்களையும் தங்களுக்கு உதவியர்களையும் அவர்கள் இருவரும் எப்போதும் மறப்பதில்லை.
நீங்களும் அப்படி இருக்கலாம்.
இருவருமே
படப்பிடிப்புத் தளத்துக்குச் சரியான நேரத்துக்கு முன்பாக வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
நீங்களும் அப்படி பள்ளிக்குத் தனிப்பயிற்சிக்குச் செல்லலாம்.
அவர்களுக்கு
ஒதுக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் படப்பிடிப்பு நீண்டாலும் பொறுமையாக அவ்வளவு நேரமும்
ஒத்துழைத்து நடித்துக் கொடுப்பவர்கள். நீங்களும் அப்படி சில பாடப்பகுதிகளைப் படித்து
முடிக்க நேரமானால் பொறுமையாக அவசரப்படாமல் ஆத்திரப்படாமல் நிதானம் தவறாமல் இருந்து
படித்து முடிக்கலாம்.
இருவருமே
அவர்களுக்கான வசனத்தை முன்கூட்டியே வாங்கி மனதில் பதிய வைத்துக் கொண்டு கண்ணாடி முன்
நடித்துப் பார்த்து விட்டு படப்பிடிப்புத் தளத்துக்கு வருவதை வழக்கமாகக் கொண்டவர்கள்.
நீங்களும் அப்படி நாளை நடத்த இருக்கும் பாடத்தை இன்றே படித்துப் பார்த்து விட்டு வகுப்பறைக்குச்
செல்லலாம்.
அதிலும்
அமிதாப் பச்சன் எத்தனை பக்க வசனமென்றாலும் அதை தலைகீழாகக் கேட்டாலும், இடையில் எங்கிருந்து
கேட்டாலும் சொல்லக் கூடிய ஆற்றல் படைத்தவர். நீங்களும் அப்படி பாடப்பகுதியைப் படித்து
வைத்திருந்தால் எப்படி இருக்கும்.
அவர்களின்
தொழில் வெற்றிக்கு இந்த அர்ப்பணிப்பும் ஒழுக்கமும் அக்கறையும் நேர்த்தியும்தான் காரணம்
என்றால் அது உண்மைதானே! அப்படியொரு அர்ப்பணிப்பு, ஒழுக்கம், அக்கறை, நேர்த்தி உங்களுக்கும்
வந்து விட்டால்…. சொல்லவும் வேண்டுமோ, நீங்களும் படிப்பில் சூப்பர் ஸ்டார்தானே!
ஆகவே,
மாணவர்களாகிய இளைய தலைமுறையினருக்கு இவ்விருவரிடமிருந்து தெரிந்து கொள்வதற்கான முக்கியமான
செய்திகள் இருக்கின்றதுதானே. அவை என்ன என்று தொகுத்துச் சொன்னால் நலமாக இருக்கும் என்கிறீர்களா?
சரியாக
நேரத்திற்குப் பள்ளிக்குச் செல்லுதல், சரியான நேரத்தில் வீட்டுப்பாடங்களை முடித்தல்,
சில பாடங்களைப் படித்து முடிப்பதற்குக் கூடுதல் நேரமானாலும் பொறுமையாக இருந்து படித்தல்,
படித்ததை எப்படிக் கேட்டாலும் அதைச் சொல்லக் கூடிய வல்லமை பெறுதல் போன்ற விசயங்களை
ரஜினி மற்றும் அமிதாப்பைப் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம்தானே!
அப்படி
கற்றுக் கொண்டால் படிப்பில் நீங்களும் ஒரு சூப்பர் ஸ்டார்தான்! ஆமாம் நடிப்பில் மட்டும்தான்
சூப்பர் ஸ்டார் இருக்க வேண்டுமா என்ன? படிப்பில் நீங்கள் சூப்பர் ஸ்டாராக இருங்கள்!
*****
No comments:
Post a Comment