பெண்ணும் தாவரமும்!
பெண்ணை
நிலமாக, ஆறாக பார்க்கும் மரபு நம்முடையது. தாய்நாடு, தாய்மண் என்று செய்யும் சிறப்புகள்
பெண்வழிப்பட்டன. ஆறுகளின் பெயர்கள் பலவும் பெண்பாலிலிருந்து எடுத்தாளப்படுகின்றன. காவிரியும்
கங்கையும் இப்படித்தான் தாய்மை அடைகின்றன. இயற்கை முழுவதையும் பெண்ணாகக் காணும் வழக்கும்
நம்மிடம் உண்டு. இம்மரபும் வழக்கும் பெண்ணுக்கும் தாவரத்துக்கும் நிறைய ஒற்றுமைகள்
இருப்பதை விளக்குகின்றன. பெண்ணோடு தாவரத்தை பல இடங்களில் ஒப்பிடுகிறது தமிழ் இலக்கியம்.
பெண்ணின்
கண்ணுக்குக் குவளை,
பெண்ணின்
காதுக்கு வள்ளைக்கொடி,
பெண்ணின்
மூக்குக்கு எள்ளுப்பூ,
பெண்ணின்
வாய்க்கு ஆம்பல்,
பெண்ணின்
செவ்விதழுக்கு இலவம்பூ,
பெண்ணின்
பல்லுக்கு முல்லை,
பெண்ணின்
தோளுக்கு மூங்கில்,
பெண்ணின்
மார்புக்கு கோங்கு மொட்டு,
பெண்ணின்
இடைக்கு தாவரக்கொடி,
பெண்ணின்
விரலுக்குச் செங்காந்தள்,
பெண்ணின்
அடிக்கு இலவம்பூ இதழ்
ஆகியவற்றை
உவமையாகக் கூறுகிறது தமிழ் இலக்கியம். தாவரங்கள் மற்றும் பெண்களின் உற்பத்தி சக்தி
எப்போதும் வியப்பிற்குரியது. தாவரங்களும் பெண்களும் சேர்ந்துதானே இந்த உலகையும் வாழ்வையும்
தங்கள் சக்தியால் அழகாக்குகின்றனர், உயிர்ப்புடன் இயங்கச் செய்கின்றனர். ஆகவே பெண்களே
தாவரங்களாக, தாவரங்களே பெண்களாக இருப்பதில் வியப்பென்ன!
*****
No comments:
Post a Comment