Monday 23 September 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 24.09.2024 (செவ்வாய்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)      இந்தியாவில் புதிதாக 60 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 766 ஆகிறது.

2)      100 குடும்பங்களுக்கு மேல் உள்ள கிராமப் பகுதிகளுக்கு டிசம்பர் முதல் மினி பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.

3)      சேலம், தஞ்சாவூரில் மினி டைடல் பூங்கா மற்றும் 58 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை முதல்வர் காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார்.

4)      அமெரிக்க தொழிலதிபர்கள் மற்றும் அமெரிக்க இந்தியர்களைச் சந்தித்து அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.

5)      கத்தோலிக்க திருச்சபை பேராயர் எஸ்ரா சற்குணம் உடல்நலக் குறைவால் காலமானார்.

6)      பூமியை இன்று நெருங்கும் எரிகற்களால் பூமிக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என நாசா தெரிவித்துள்ளது.

7)      இலங்கையின் ஒன்பதாவது அதிபராக அனுர குமார திசநாயக்க பொறுப்பேற்றுக் கொண்டார்.

8)      ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பாக லாப்பட்டா லேடீஸ் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

9)      தொடர்ந்து உயர்ந்து வரும் விலை உயர்வால் ஒரு கிராம் தங்கத்தின் விலை 7000 ரூபாயை நெருங்குகிறது.

10)  டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தர வரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

English News

1) 60 new medical colleges are granted permission in India. This brings the number of medical colleges in India to 766.

2) Mini bus service to rural areas with more than 100 families to be started from December.

3) CM inaugurated Mini Tidal Park in Salem, Thanjavur and direct paddy procurement stations at 58 places through video conference.

4) Prime Minister Narendra Modi who has visited the US to meet American businessmen and American Indians.

5) Catholic Church Archbishop Ezra Charkunam passed away due to ill health.

6) According to NASA, there will be no impact on the earth due to the igneous rocks approaching the earth today.

7) Anura Kumara Dissanayake took charge as the ninth President of Sri Lanka.

8) The film Lapatta Ladies has been nominated for the Oscars on behalf of India.

9) The price of gold is close to Rs 7000 per gram due to the ever-increasing price hike.

10) India has topped the Test Cricket Rankings.

No comments:

Post a Comment