Tuesday, 3 September 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 04.09.2024 (புதன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

English News

1)                  பசுமை பள்ளித் திட்டத்தின் கீழ் 26 பள்ளிகளுக்கு 20 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் புள்ளமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி இத்திட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2)                  சூன் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என TNPSC அறிவித்துள்ளது.

3)                  திருச்சி விமான நிலையப் பேருந்து சேவையைப் பேருந்தில் பயணம் செய்து ஆய்வு செய்தார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

4)                  தொடர் கனமழையால் ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலங்கள் கடுமையான வெள்ளப் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

5)                  386 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது நாளை சென்னையில் வழங்கப்படுகிறது.

6)                  1.45 லட்சம் கோடியில் ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

7)                  இரண்டு வயது வரையுள்ள குழந்தைகள் செல்போன் மற்றும் தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்கக் கூடாது என சுவீடன் அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

8)                  பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் தடை செய்யப்பட்டதை அந்நாட்டின் உச்ச நீதி மன்றம் உறுதி செய்தது.

9)                  பாரா ஒலிம்பிக்கில் தமிழக வீராங்கனைகள் துளசிமதி வெள்ளிப் பதக்கமும், மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கமும் நித்யஸ்ரீ சிவன் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.

10)              பாரா ஒலிம்பிக்கில் இந்தியா 18 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் இருபது இடங்களுக்குள் வந்துள்ளது.

1) 20 lakh rupees has been allocated for 26 schools under the Green School Scheme. Pullamangalam Government Higher Secondary School in Thiruvarur district has been selected for this scheme.

2) TNPSC has announced that the results of the Group 4 exam held in June will be released next month.

3) School Education Minister Anbil Mahesh Poiyamozhi visited and inspected Trichy Airport Bus Service.

4) Andhra Pradesh and Telugu states are facing severe flood due to continuous heavy rains.

5) 386 teachers will be awarded State Best Teacher Award tomorrow in Chennai.

6) Central government has approved procurement of military equipment worth Rs 1.45 lakh crore.

7) The Swedish government has issued a ban on children under the age of two not allowing them to watch cell phones and television.

8) Brazil's Supreme Court upheld the ban on Site X.

9) In the Para Olympics, Tamil Nadu athletes have won Tulsimathi Silver Medal, Manisha Ramadoss Bronze Medal and Nityashree Sivan Bronze Medal.

10) India has won 18 medals in the Para Olympics and is in the top 20 in the medal list.

No comments:

Post a Comment