Sunday, 29 September 2024

களஞ்சியம் செயலியில் விழா முன்பணம் பெற விண்ணப்பிப்பது எப்படி?

களஞ்சியம் செயலியில் விழா முன்பணம் பெற விண்ணப்பிப்பது எப்படி?

ஒருங்கிணைந்த நிதி மற்று மனித வள மேலாண்மைத் திட்டத்தின் (IFHRMS) செயலியான Kalanjiyam App இன் வழியே விழா முன் பணத்திற்கு விண்ணப்பிக்கும் நடைமுறை அக்டோபர் 2024 முதல் நடைமுறைக்கு வருகிறது. இனி தமிழ்நாட்டு அரசின் ஊதியம் பெறுவோர் இந்த App வழியே தங்களுக்கான விழா முன்பணத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பின்வரும் விழாக்களுக்கு விழா முன்பணம் பெற விண்ணப்பிக்கலாம். அவையாவன,

1. பக்ரித்

2. கிறிஸ்துமஸ்

3. தீபாவளி

4. ஈஸ்டர்

5. காந்தி ஜெயந்தி

6. புனித வெள்ளி

7. விடுதலை நாள்

8. கிருஷ்ண ஜெயந்தி

9. மே தினம்

10. மிலாடி நபி

11. மொகரம்

12. ஓணம்

13. பொங்கல்

14. ரம்ஜான்

15. குடியரசு தினம்

16. தெலுங்கு வருடப் பிறப்பு

17. விஜயதசமி

18. விநாயகர் சதுர்த்தி

விழா நாளுக்குச் சரியாக 30 நாள்களுக்கு முன்னர் விழா முன்பணம் பெற விண்ணப்பிக்க வேண்டும். இறுதியாகப் பெற்ற விழா முன்பணத்தை முழுமையாகத் திருப்பி செலுத்திய பின்பே விண்ணப்பிக்க வேண்டும். IFHRMS இல் centralized payroll run செய்வதற்கு முன்பே பணம் வரவாகும்படி முன்தேதியிட்டு விண்ணப்பிப்பது நல்லது.

IFHRMS மூலம் ஒரு நாள்காட்டி ஆண்டில் (January - December) ஒரு முறை மட்டுமே விழா முன்பணம்  அனுமதிக்கப்படும். பணம் வரவாகும் மாதத்தைத்தான் IFHRMS கணக்கில் எடுத்துக் கொள்ளும்.

பணம் வரவான அந்த மாத ஊதியத்திலேயே தவணை தொடங்கப்பட்டு ரூ.1000/- பிடித்தம் செய்யப்பட்டுவிடும். தொடர்ச்சியாக 10 மாதங்கள் தவணை பிடித்தம் செய்யப்படும்.

விழா முன்பணம் பெற விண்ணப்பிப்பதற்கான படிநிலைகளாவன,

1) Kalanjiyam App ஐ Login செய்யவும்.

2) Advance - Festival Advance - Apply என்ற வரிசையில் தேர்வு செய்யவும்.

3) Festival Name என்பதில் தாங்கள் விண்ணப்பிக்கும் விழாவைத் தேர்வு செய்தால், Festival Date - Advance Amount - Recovery no. of Installment உள்ளிட்டவை தானாகவே தோன்றும்.

4) இறுதியாக Submit செய்யவும்.

இத்தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். பயனுள்ள தகவல்களுக்கு என்றும் இணைந்திருங்கள். நன்றி! வணக்கம்!

*****

No comments:

Post a Comment