Wednesday 4 September 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 05.09.2024 (வியாழன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)         இன்று ஆசிரியர் தினம்.

2)         தொடங்கிய வேகத்தில் தீபாவளி முன்பதிவுக்கான 130 அரசு பேருந்துகளின் பயணச்சீட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

3)         இந்திய தொல்லியல் துறை இயக்குநராக அமர்நாத் ராமகிருஷ்ணா பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் தலைமையில் கீழடி அகழாய்வுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

4)         புரூனே பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் சிங்கப்பூர் சென்றடைந்தார்.

5)         வாரத்திற்கு 200 மில்லியன் பயனர்கள் சாட்ஜிபிடியைப் பயன்படுத்துவதாக ஓப்பன் ஏ.ஐ. நிறுவனம் தெரிவித்துள்ளது.

6)         வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

7)         மருத்துவர்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

8)         டிரோன் பயன்பாட்டுக்கு விரைவில் வழிகாட்டுதல் நெறிமுறைகள் உருவாக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

9)         குஜராத் கனமழையில் பலியானோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.

10)       மசாலா பொருட்கள் மற்றும் மதுபான ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

11)       தொடர்ச்சியாக மூன்று பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்று தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலும் சாதனை படைத்துள்ளார்.

12)       பாரா ஒலிம்பிக்கில் இதுவரை இந்தியா 24 பதக்கங்களை வென்றுள்ளது. இவற்றுள் 5 தங்கப் பதக்கங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English News

1) Today is Teacher's Day.

2) Tickets of 130 government buses for Diwali bookings were sold out at a fast start.

3) Amarnath Ramakrishna has been promoted as the Director of Archeology of India. It is noteworthy that Keezhadi excavations were conducted under his leadership.

4) Prime Minister reached Singapore after completing Brunei tour.

5) Open AI said that 200 million users per week use Chat GPT.

6) A low pressure area is forming in the Bay of Bengal today.

7) The central government has directed the state governments to increase the security of doctors.

8) The central government has informed that the guidelines for the use of drones will be developed soon.

9) Death toll rises to 49 in Gujarat heavy rains.

10) Central Government has decided to promote export of spices and liquor.

11) Mariyappan Thangavel from Tamil Nadu has achieved a record by winning medals in three consecutive Para Olympic Games.

12) So far India has won 24 medals in Para Olympics. Among these, 5 gold medals are noteworthy.

No comments:

Post a Comment