Tuesday, 1 July 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (02.07.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (02.07.2025)

1) நீர்ச்சத்துக் குறைபாட்டைப் போக்கும் வகையில் மணி அடித்தால் தண்ணீர் அருந்தும் திட்டம் அரசுப் பள்ளிகளில் அமலுக்கு வந்துள்ளது.

2) நாட்டுக்கான சேவையே மருத்துவத் தொழில் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

3) காவல் நிலைய மரணங்களுக்குக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

4) காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுக் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

5) ஒகேனக்கலுக்கு வரும் நீர் வரத்து 65000 கன அடியாக அதிகரித்துள்ளது.

6) சூலை 7 இல் நடைபெறும் திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கிற்குச் சிறப்புத் தொடர்வண்டியை நெல்லை மற்றும் திருச்செந்தூர் இடையே தென்னகத் தொடர்வண்டி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

7) சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் உடல் சிதறி பலியாகினர்.

8) ஐதாராபாத் ரசாயன ஆலையில் கொதிகலன் வெடித்ததில் 41 பேர் பலியாகியுள்ளனர். பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

9) ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

10) கடந்த நிதியாண்டில் 22.08 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி வசூலாகியுள்ளது. ஐந்தாண்டுகளில் வரி வசூல் மூலம் கிடைக்கும் தொகையானது இரட்டிப்பாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Education & GK News

1) A scheme to drink water by ringing a bell has been implemented in government schools to address water scarcity.

2) President Draupadi Murmu has said that the medical profession is a service to the country.

3) Chief Minister M.K. Stalin has said that strict action will be taken against police station deaths.

4) A flood warning has been issued for people living along the banks of the Cauvery and Kollidam rivers.

5) The water inflow to Okenakkal has increased to 65,000 cubic feet.

6) The Southern Railway has arranged a special train for the Tiruchendur temple festival to be held on July 7 between Nellai and Tiruchendur.

7) Seven people were killed in a firecracker factory explosion near Sattur.

8) 41 people have died in a boiler explosion at a Hyderabad chemical plant. The condition of many is critical.

9) Normal life has been affected due to floods in Jharkhand and Odisha.

10) In the last financial year, the Goods and Services Tax (GST) collection was Rs 22.08 lakh crore. It is noteworthy that the amount collected through tax collection has doubled in five years.