Sunday, 31 August 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (01.09.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (01.09.2025)

1) சென்னையில் கொட்டித் தீர்த்தது கனமழை. மணலியில் அதிகபட்சமாக 27 செ.மீ. மழை பதிவானது.

2) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு வார காலப் பயணமாக இங்கிலாந்து மற்றும் ஜெர்மனிக்குச் சென்றுள்ளார்.

3) சீனாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

4) இந்தியா எழுச்சி பெற உள்நாட்டுப் பொருட்களை ஆதரிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

5) நெல் கொள்முதல் விலையைக் குவிண்டாலுக்கு ரூ. 2500 ஆக நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

6) கனமழை காரணமாக ஒக்கேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 24000 கன அடியாக அதிகரித்துள்ளது.

7) ஏப்ரல் முதல் சூன் வரையிலான காலாண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

8) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு சட்ட விரோதமானது என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

9) வங்கிகள் வழங்கும் தொழில் கடன் 7.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.

Education & GK News

1) Heavy rains lashed Chennai. Manali received the highest rainfall of 27 cm.

2) Tamil Nadu Chief Minister M.K. Stalin has visited to England and Germany.

3) Prime Minister Narendra Modi has been given a warm welcome in China.

4) Prime Minister Narendra Modi has appealed to support domestic products for India to rise in the voice of the people.

5) The Tamil Nadu government has ordered to fix the procurement price of paddy at Rs. 2500 per quintal.

6) Due to heavy rains, the water inflow into the Ockenakkal has increased by 24000 cubic feet.

7) India's domestic product has increased by 7.8 percent in the quarter from April to June.

8) The American court has ruled that US President Donald Trump's tax hike is illegal.

9) Business loans granted by banks have decreased to 7.6 percent.

Thursday, 28 August 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (29.08.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (29.08.2025)

1) செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் தொடர்பான புதிய பொறியியல் பாடங்களை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.

2) சென்னை ஓமந்தூரார், திருவள்ளூர், திருவண்ணாமலை, தேனி, கன்னியாகுமரி ஆகிய தமிழகத்தைச் சேர்ந்த 5 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் தேசிய தர நிர்ணய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

3) சூன் மாதம் நடைபெற்ற குழு 1 தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத் தேர்வு முடிவுகள் (டிஎன்பிஎஸ்சி குரூப் 1) இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

4) டோக்கியோ உச்சி மாநாடு, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடுகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு ஜப்பான் மற்றும் சீனாவுக்குப் புறப்பட்டார்.

5) 2026 நவம்பரில் குலசேரகப்பட்டனத்திலிருந்து ஏவூர்தி ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

6) தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு செப்டம்பர் 2 வரை மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7) ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வரலாறு காணாத மழையால் இதுவரை  41 பேர் உயிரிழந்துள்ளனர்.

Education & GK News

1) Anna University has introduced new engineering courses related to artificial intelligence and machine learning.

2) The National Quality Assurance Award of the Central Government has been announced for 5 government medical colleges from Tamil Nadu namely Omandurar, Tiruvallur, Tiruvannamalai, Theni and Kanyakumari.

3) The results of the Tamil Nadu Public Service Commission Group 1 examination held in June (TNPSC Group 1) have been published online.

4) Prime Minister Narendra Modi left for Japan and China last night to participate in the Tokyo Summit and the Shanghai Cooperation Organization.

5) The Indian Space Research Organization has said that a launch vehicle will be launched from Kulaserakpatnam in November 2026.

6) The Meteorological Department has said that there is a possibility of rain in Tamil Nadu and Puducherry till September 2.

7) 41 people have died so far due to unprecedented rains in Jammu and Kashmir.

*****

Wednesday, 27 August 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (28.08.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (28.08.2025)

1) நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

2) 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டது குறித்து ஆய்வு நடத்தப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

3) பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற உச்சநீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

4) தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் எண்ம முறையில் (டிஜிட்டல் முறையில்) வரி வசூலிக்க மதுரை உயர்நீதி மன்ற கிளை அறிவுறுத்தியுள்ளது.

5) அமெரிக்கா வரி விதிப்பை இந்தியா சமாளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

6) அவசர ஊர்திகளின் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

7) கோட்டூர்புரத்தில் சென்னை இதழியல் நிறுவனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

8) சென்னையில் 248 மகளிர் விடியல் பேருந்துகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.

9) ஆண்டுதோறும் செப்டம்பர் 23 ஆம் தேதி ஆயுர்வேத தினமாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

10) இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட புதிய வான்வெளி பாதுகாப்பு கேடய அமைப்புக்கு சுதர்சன சக்கரம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

11) இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரியை அமல்படுத்தியது அமெரிக்கா.

12) ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 33 பேர் உயிரிழந்தனர்.

Education & GK News

1) Chief Minister M.K. Stalin launched the breakfast program in urban government-aided schools.

2) School Education Minister Anbil Mahesh Poyyamozhi has said that a study will be conducted on the closure of 207 government schools.

3) The Supreme Court has imposed an interim stay on the removal of flagpoles installed in public places.

4) The Madurai High Court bench has directed that taxes be collected in the corporation, municipality and town panchayats in Tamil Nadu in the digital mode.

5) Prime Minister Narendra Modi has expressed confidence that India will cope with the US tax.

6) The Tamil Nadu government has warned that strict action will be taken if there is an attack on ambulances.

7) Chief Minister M.K. Stalin launched the Chennai Journalism Institute in Kotturpuram.

8) The Chief Minister launched 248 women's free buses in Chennai.

9) The Central Government has announced that September 23rd will be celebrated as Ayurveda Day every year.

10) The new air defense shield system developed in India has been named Sudarshan Chakra.

11) The US has implemented a 50 percent tax on Indian goods.

12) 33 people died in severe floods and landslides in Jammu and Kashmir.

Tuesday, 26 August 2025

பத்தாம் வகுப்பு காலாண்டுத் தேர்வு அட்டவணை - 2025

பத்தாம் வகுப்பு காலாண்டுத் தேர்வு அட்டவணை - 2025

பத்தாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வுக்கான அட்டவணையைக் கீழே காண்க.

*****

6 முதல் 9 வகுப்பு வரையிலான காலாண்டுத் தேர்வு அட்டவணை - 2025

6 முதல் 9 வகுப்பு வரையிலான

காலாண்டுத் தேர்வு அட்டவணை - 2025

ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான காலாண்டுத் தேர்வுக்கான அட்டவணையைக் கீழே காண்க.

*****

Monday, 25 August 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (26.08.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (26.08.2025)

1) தமிழ்நாட்டில் சென்னை மயிலாப்பூர் தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி, திருப்பூர் அரசுப் பள்ளி ஆசிரியை விஜயலெட்சுமி ஆகியோருக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2) தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி கிடையாது என தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

3) தமிழகத்தின் மாநிலக் கல்வி கொள்கையால் புதிய வரலாறு படைக்கப்படும் என தமிழக அரசு உறுதிபட தெரிவித்துள்ளது.

4) 2026 இல் சென்னையில் நடைபெறும் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் 100 நாடுகள் பங்கேற்க உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

5) திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செப்டம்பர் 3 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.

6) தமிழகம் 11.19 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது.

7) தமிழ்நாட்டில் முதல் முறையாகச் சென்னை மாநகராட்சியின் சேவைகளை வாட்ஸ்ஆப்பில் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.

8) தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது.

9) முதல் முறை வங்கிக் கடன் பெறுவோருக்குக் கடன் தகுதி எண் (சிபில் ஸ்கோர்) கட்டாயமில்லை என நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

10) உள்நாட்டில் உருவாக்கப்பட்ட வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பை இந்தியா வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.

11) மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் வான்குடை மிதவை சோதனை (பாரசூட் சோதனை) வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

12) ஆசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் டோமர் தங்கம் வென்றார்.

Education & GK News

1) Revathi, a private school teacher from Chennai Mylapore and Vijayalakshmi, a government school teacher from Thiruppur, have been announced as winners of the National best Teacher Award in Tamil Nadu.

2) The Tamil Nadu government has announced that hydrocarbon projects will not be allowed in any part of Tamil Nadu.

3) The Tamil Nadu government has firmly stated that new history will be created with the state education policy of Tamil Nadu.

4) School Education Minister Anbil Mahesh Poyyamozhi has stated that 100 countries will participate in the International Book Fair to be held in Chennai in 2026.

5) President Draupadi Murmu is coming to Tamil Nadu on September 3 to participate in the convocation ceremony of Thiruvarur Central University.

6) Tamil Nadu has achieved 11.19 percent economic growth.

7) For the first time in Tamil Nadu, the facility to receive Chennai Corporation services on WhatsApp has been made available.

8) The Tamil Nadu government has sought permission from the central government to start new medical colleges in 5 districts including Tenkasi.

9) The Finance Ministry has announced that the CIBIL score will not be mandatory for first-time bank loan takers.

10) India has successfully tested an indigenously developed air defense weapon system.

11) The parachute test of the Gaganyaan project to send humans into space was successfully tested.

12) India's Aishwarya Pratap Singh Tomar won gold at the Asian Shooting Championship.

Sunday, 24 August 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (25.08.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (25.08.2025)

1) காலை உணவுத் திட்டம் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குவதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

2) ஆண்டுக்கு 50 ஏவூர்திகளை (ராக்கெட்) இந்தியா செலுத்த வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

3) இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் குலசேகரப்பட்டினத்திலிருந்து செயற்கைக்கோள் ஏவூர்தி (ராக்கெட்) செலுத்தப்படும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

4) கேழ்வரகு உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

5) 12 சதவீதம் மற்றும் 28 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரியை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

6) விரைவில் இந்திய விண்கலத்தில் விண்வெளிப் பயணம் செய்வது சாத்தியமாகும் என்று சுபான்சு சுக்லா

7) நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் 12 மசோத்தாக்கள் நிறைவேறியுள்ளன.

8) மாநில அரசின் அனுமதியின்றி இராமநாதபுரத்தில் 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

9) பஞ்சாப்பில் எரிவாயு சரக்குந்து வெடித்ததில் 7 பேர் உடல் கருகி பலியாகினர்.

Education & GK News

1) Tamil Nadu Chief Minister M.K. Stalin has said that the breakfast program is a pioneer for other states in India.

2) Prime Minister Narendra Modi has said that India should launch 50 rockets per year.

3) The Indian Space Research Organization (ISRO) has said that a satellite rocket will be launched from Kulasekarapatnam in the next one and a half years.

4) Tamil Nadu has topped the country in the production of red clover.

5) The central government has decided to remove 12 percent and 28 percent goods and services tax (GST).

6) Subhanshu Shukla says that it will be possible to travel to space soon in an Indian spacecraft

7) 12 bills have been passed in the monsoon session of Parliament.

8) The central government has given permission for 20 hydrocarbon wells in Ramanathapuram without the permission of the state government.

9) Seven people were charred to death in a gas tanker vehicle explosion in Punjab.