Saturday, 29 February 2020

2020 மார்ச் மாதத்தின் வரையறுக்கப்பட்ட விடுப்புகள்

2020 மார்ச் மாதத்தின் வரையறுக்கப்பட்ட விடுப்புகள்

வ. எண்
நாள்
கிழமை
வரையறுக்கப்பட்ட விடுப்பு
1
03.03.2020
செவ்வாய்
வைகுண்டசாமி பிறந்த தினம்


Friday, 28 February 2020

March 1st Week - 8th Maths - Lesson Plan

மார்ச் முதல் வாரம் எட்டாம் வகுப்பு கணக்கு - பாடத்திட்டம்
மார்ச் மாதம் - முதல் வாரத்திற்கான எட்டாம் வகுப்பிற்கான இக்கணக்குப் பாடத்திட்டம் உரிய படிநிலைகளோடு, குறைவான பக்கங்களில் எழுதும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள பாடப்பகுதி :
இயல் 4          : புள்ளியியல்
எளிய வட்டவிளக்கப்படம் வரைதல்
பாடத்திட்ட தயாரிப்பு : பா.விஜயராமன், பட்டதாரி ஆசிரியர்.
இப்பாடத்திட்டம் கற்றல் விளைவுகள், புரிதல், கருத்துச் செயல்பாடு, ஆசிரியர் செய்யும் கணக்குகள், மாணவர் செய்யும் கணக்குகள், குழுவேலை, வலுவூட்டுதல், மதிப்பீடு, குறைதீர் கற்றல், எழுதுதல் மற்றும் தொடர்பணி ஆகிய படிநிலைகளைக் கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த தங்களது மேலான கருத்துகளைப் பகிரவும். இம்முயற்சி மற்ற ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என தாங்கள் கருதினால் அனைவரும் பயன்பெற இதைப் பெற பகிரவும்.
இப்பாடத்திட்டத்தைப் பெற கீழே சொடுக்கவும் :



March 1st Week - 7th Maths - Lesson Plan

மார்ச் முதல் வாரம் ஏழாம் வகுப்பு கணக்கு - பாடத்திட்டம்
மார்ச் மாதம் - முதல் வாரத்திற்கான ஏழாம் வகுப்பிற்கான இக்கணக்குப் பாடத்திட்டம் உரிய படிநிலைகளோடு, குறைவான பக்கங்களில் எழுதும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள பாடப்பகுதி :
இயல் 4          : வடிவியல்
சமச்சீர் தன்மை - உருமாற்றங்கள்
பாடத்திட்ட தயாரிப்பு : பா.விஜயராமன், பட்டதாரி ஆசிரியர்.
இப்பாடத்திட்டம் கற்றல் விளைவுகள், புரிதல், கருத்துச் செயல்பாடு, ஆசிரியர் செய்யும் கணக்குகள், மாணவர் செய்யும் கணக்குகள், குழுவேலை, வலுவூட்டுதல், மதிப்பீடு, குறைதீர் கற்றல், எழுதுதல் மற்றும் தொடர்பணி ஆகிய படிநிலைகளைக் கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த தங்களது மேலான கருத்துகளைப் பகிரவும். இம்முயற்சி மற்ற ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என தாங்கள் கருதினால் அனைவரும் பயன்பெற இதைப் பெற பகிரவும்.
இப்பாடத்திட்டத்தைப் பெற கீழே சொடுக்கவும் :



March 1st Week - 6th Maths - Lesson Plan

மார்ச் முதல் வாரம் ஆறாம் வகுப்பு கணக்கு - பாடத்திட்டம்
மார்ச் மாதம் - முதல் வாரத்திற்கான ஆறாம் வகுப்பிற்கான இக்கணக்குப் பாடத்திட்டம் உரிய படிநிலைகளோடு, குறைவான பக்கங்களில் எழுதும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள பாடப்பகுதி :
இயல் 4          : சமச்சீர் தன்மை
சமச்சீர் தன்மை கொண்ட பொருட்களை அடையாளம் காணுதல்
பாடத்திட்ட தயாரிப்பு : பா.விஜயராமன், பட்டதாரி ஆசிரியர்.
இப்பாடத்திட்டம் கற்றல் விளைவுகள், புரிதல், கருத்துச் செயல்பாடு, ஆசிரியர் செய்யும் கணக்குகள், மாணவர் செய்யும் கணக்குகள், குழுவேலை, வலுவூட்டுதல், மதிப்பீடு, குறைதீர் கற்றல், எழுதுதல் மற்றும் தொடர்பணி ஆகிய படிநிலைகளைக் கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த தங்களது மேலான கருத்துகளைப் பகிரவும். இம்முயற்சி மற்ற ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என தாங்கள் கருதினால் அனைவரும் பயன்பெற இதைப் பெற பகிரவும்.
இப்பாடத்திட்டத்தைப் பெற கீழே சொடுக்கவும் :



March 1st Week - 8th Tamil - Lesson Plan with Mind Map Videos

மார்ச் முதல் வாரம் – எட்டாம் வகுப்பு தமிழ் - பாடத்திட்டம்
மார்ச் மாதம் - முதல் வாரத்திற்கான எட்டாம் வகுப்பிற்கான இத்தமிழ்ப் பாடத்திட்டம் உரிய படிநிலைகளோடு, குறைவான பக்கங்களில் எழுதும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள பாடப்பகுதி :
இயல் 3 :        அ) உயிர்க்குணங்கள் (கவிதைப்பேழை)
                        ஆ) இளைய தோழனுக்கு (கவிதைப்பேழை)
பாடத்திட்ட தயாரிப்பு : பா.விஜயராமன், பட்டதாரி ஆசிரியர்.
இப்பாடத்திட்டம் கற்றல் விளைவுகள், அறிமுகம், புரிதல், மனவரைபடம், ஒருங்கமைத்தல், வலுவூட்டுதல், மதிப்பீடு, வளரறி மதிப்பீடு, குறைதீர் கற்றல், எழுதுதல் மற்றும் தொடர்பணி ஆகிய படிநிலைகளைக் கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த தங்களது மேலான கருத்துகளைப் பகிரவும். இப்பாடத்திட்டத்தோடு மனவரைபடம் வரைவதற்கான காணொலிக்கான இணைப்பும் பகிரப்பட்டுள்ளது.
மனவரைபடம் வரைதலுக்கான காணொலிகள் :
உயிர்க்குணங்கள் – மனவரைபட காணொலி :
இளைய தோழனுக்கு – மனவரைபட காணொலி :
இம்முயற்சி மற்ற ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என தாங்கள் கருதினால் அனைவரும் பயன்பெற இவ்விணைப்பைப் பகிரவும். இப்பாடத்திட்டத்தைப் பெற கீழே சொடுக்கவும் :



Thursday, 27 February 2020

டிப்ளமா முடித்தவர்களுக்கு கப்பல் நிறுவனத்தில் வேலை

டிப்ளமா முடித்தவர்களுக்கு கப்பல் நிறுவனத்தில் வேலை

நிறுவனம்
கொச்சி ஷிப் யார்ட் லிமிடெட்
பணி
வடிவமைப்பு உதவியாளர்
மொத்த காலிப் பணியிடம்
30
கல்வித் தகுதி
Diploma in Mechanical Engineering, Diploma in Electrical Engineering
வயது வரம்பு
30 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.cochinshipyard.com என்ற இணையதளம் மூலம் 04.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.200. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும் :


போட்டித் தேர்வுகளுக்கான இலவச அரசுப் பயிற்சி நிறுவனம்

போட்டித் தேர்வுகளுக்கான இலவச அரசுப் பயிற்சி நிறுவனம்
மத்திய, மாநில அரசுகள் நடத்தும் அனைத்து விதமான வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளுக்கும் இலவசமாகப் பயிற்சி அளிக்கும் அரசுப் பயிற்சி நிறுவனம் வடசென்னை, வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராஜா கல்லூரியில் இரண்டு ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
தனியார் பயிற்சி நிறுவனங்களுக்குச் சவால் விடும் வகையில் இயங்கும் இப்பயிற்சி நிறுவனம் வழங்கும் இலவசப் பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இப்பயிற்சி நிறுவனத்தில் சேர்வதற்கும், இப்பயிற்சி நிறுவனம் குறித்த மேலதிக விவரங்களை அறிந்து கொள்வதற்கும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும். 


Tuesday, 25 February 2020

Local FM Radio ஐ பெற...

Local FM Radio ஐ பெற...
கீழே உள்ள LINK    Click செய்தால் உலக உருண்டை  சுழலும். அதில் பச்சை நிற  புள்ளியாய் தெரிவது அனைத்தும் உலகம் முழுவதும் இயங்கிகொண்டிருக்கும் FM வானொலி நிலையங்கள் ஆகும். ஒரு வட்டத்தில் + குறியீட்டை நீங்கள் விரலால் தொட்டு உலகின் எந்த ஒரு புள்ளியைய் தொட்டால் அந்த ஊரின் பெயர், மற்றும் local FM வானொலி நிகழ்ச்சிகளை தெளிவாக live Radio without earphone ல்  கேட்க முடியும். பயனுள்ள இத்தகவலை அனைவருக்கும் பகிரவும். இணைப்பைப் பெற கீழே சொடுக்கவும்.



Monday, 24 February 2020

பெற்றோர் ஆசிரியர் கழக விவரம்

பெற்றோர் ஆசிரியர் கழக விவரம்
பெற்றோர் ஆசிரியர் கழக விவரம் குறித்து கேட்கப்பட்ட தகவல்கள் அனுப்புவதற்கான படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.


குழந்தைகள் பாதுகாப்பு கையேடு

குழந்தைகள் பாதுகாப்பு கையேடு
பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்புத் தொடர்பான கையேட்டினைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.


Sunday, 23 February 2020

UDISE Data Capture Format - 2020

UDISE Data Capture Format
Please Follow the link and click to get UDISE Data Capture Format instructions.



மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி

மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி

Ø இந்திய  குடிமகனாகிய நான் சாதி, மதம், இனம், மொழி, சமூக, பொருளாதார பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்துவேன்.
Ø எனது செயல்பாடுகளால் எந்த ஒரு குழந்தையும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்காத வகையில் கவனமுடன் நடந்து கொள்வேன்.
Ø எனது கவனத்திற்கு வரும் குழந்தைகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், வன்முறைகள் மற்றும் எந்தவொரு பாதிப்பையும் தடுப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவேன். மேலும், இதனை உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்வேன்.
Ø இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என உணர்ந்து அவர்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு என்னால் இயன்ற பங்களிப்பை அளிப்பேன்.
Ø குழந்தைத் திருமணம் பற்றி தெரிய வந்தால் அதைத் தடுத்து நிறுத்துவதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபடுவேன்.
Ø நான் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்கிட உறுதுணையாக இருப்பேன்.
Ø இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கையில் வழங்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உரிமைகளை அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுவேன் என உளமார உறுதி கூறுகிறேன்.
இப்பாதுகாப்பு உறுதிமொழியை PDF ஆகப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.



தற்கொலை செய்ய வைத்த புகைப்படம்!

தற்கொலை செய்ய வைத்த புகைப்படம்!

ஒரு புகைப்படம் தற்கொலை செய்ய தூண்டுமா என்ற கேள்விக்கு கீழே உள்ள சங்கதியைப் படியுங்கள். இப்படி ஒரு சங்கதியை வாசித்து முடித்ததும் அச்சங்கதி பேசிய மனித நேயத்தை எல்லாருக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று தோன்றியது. உங்களுக்கும் அப்படித் தோன்றினால் இந்தச் சங்கதியை நீங்களும் நான்கு பேருக்கு கொண்டு போய் சேருங்கள். இனி சங்கதிக்கு வருவோம்.
உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்?

கெவின் கார்ட்டர் உலக புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம், காடு, மலை என்று கொண்டு சென்றது.
1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது. குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி, தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.
பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய
கெவின் தொலைதூர கிராமங்கள் வரை சென்றார். இறுதியாக அவர் முயற்சி கைகூடியது.
ஒரு நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது.
பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்டார்.
அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.
தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது. ஆம்! அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.
எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும், மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.
கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார். சிறுமியையும் கழுகையும் ஒரு பிரேமில் அடக்கிக் கொண்டு ‘க்ளிக் செய்தார். இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது. இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார். பறந்து விட்டார்.
இந்த அரிதான படத்தை நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு விற்று விட்டார்.
இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டனர்.
அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்? அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா? இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைபேசி ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை.
1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.
விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.
குறைந்தபட்சம் புகைப்பட நிபுனர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம். அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம். கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்.
ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார். அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர் அவர் மீது குற்றம் சாட்டியதுதான் அவரது மன உளைச்சலுக்குக் காரணம்.
இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது. அதில் அவர் பிணமாகக் கிடந்தார்.
கெவின் தற்கொலை செய்துகொண்டார். அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன. முதல் வரி I am Really, Really Sorry...
நாம் எவராக இருந்தாலும் சரி, நம்மிடம் மனிதம் இல்லையெனில் நாமும் மிருகத்திற்கே ஒப்பாவோம் என்ற செய்தியைச் சொல்லாமல சொல்கிறது கெவின் கார்ட்டரின் அந்தப் புகைப்படம்.


Saturday, 22 February 2020

சீசர் சொன்னதாக ஒரு சங்கதி!

சீசர் சொன்னதாக ஒரு சங்கதி!
சில சுவாரசியமான சங்கதிகளை வாசிக்கும் போது ஆச்சரியமாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது. அப்படி ரோமானிய பேரரசர் சீசரே எழுதியதாக வாசித்த சங்கதி ஒன்று நம் வலைப்பூ அங்கத்தினருகளுக்காக…

1
ஏழை வேலைசெய்கிறான். தொடர்ந்து வேலை செய்கிறான்.
2
பணக்காரன் ஏழையைச் சுரண்டுகிறான்.
3
இராணுவவீரன் இருவரையும் பாதுகாக்கிறான்.
4
வரி செலுத்துபவன் இம்மூவருக்காகவும் ஒழுங்காக வரி கட்டிவிடுகிறான்.
5
இந்த நால்வருக்காகவும் நாடோடி ஓய்வெடுக்கிறான்.
6
இந்த ஐந்து பேருக்காகவும் குடிகாரன் மது அருந்துகிறான்.
7
வட்டி வாங்குபவன் ஆறு பேரிடமும் வட்டி வாங்குகிறான்.
8
வக்கீல் ஏழு பேரையும் வழக்குகாக வழி நடத்துகிறான்.
9
மருத்துவன் இந்த எட்டு பேரிடமும் கட்டணம் வசூலிக்கிறான்.
10
இடுகாட்டு காவலாளி ஒன்பது பேரையும் புதைக்கிறான்
11
அரசியல்வாதி இந்த பத்துப்பேர் பெயரைச் சொல்லி மகிழ்ச்சியாக வாழ்கிறான்.


2020ம் ஆண்டுக்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்

2020ம் ஆண்டுக்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்

வ.
எண்
பண்டிகை
தேதி
கிழமை
1
ஆங்கில புத்தாண்டு
01.01.2020
புதன்
2
பொங்கல்
15.01.2020
புதன்
3
திருவள்ளுவர் தினம்
16.01.2020
வியாழன்
4
உழவர் திருநாள்
17.01.2020
வெள்ளி
5
குடியரசு தினம்
26.01.2020
ஞாயிறு
6
தெலுங்கு வருடப்பிறப்பு
25.03.2020
புதன்
7
வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு
01.04.2020
புதன்
8
மகாவீர் ஜெயந்தி
06.04.2020
திங்கள்
9
புனித வெள்ளி
10.04.2020
வெள்ளி
10
தமிழ்ப்புத்தாண்டு மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம்
14.04.2020
செவ்வாய்
11
மேதினம்
01.05.2020
வெள்ளி
12
ரம்ஜான்
25.05-2020
திங்கள்
13
பக்ரீத்
01.08.2020
திங்கள்
14
கிருஷ்ண ஜெயந்தி
11.08.2020
செவ்வாய்
15
சுதந்திர தினம்
15.08.2020
சனி
16
விநாயகர் சதுர்த்தி
22.08.2020
சனி
17
மொகரம்
30.08.2020
ஞாயிறு
18
காந்தி ஜெயந்தி
02.10.2020
வெள்ளி
19
ஆயுத பூஜை
25.10.2020
ஞாயிறு
20
விஜயதசமி
26.10.2020
திங்கள்
21
மிலாது நபி
30.10.2020
வெள்ளி
22
தீபாவளி
14.11.2020
சனி
23
கிறிஸ்துமஸ்
25.12.2020
வெள்ளி