Saturday, 1 February 2020

கல்விக்கு 99300 கோடி ரூபாய் ஒதுக்கிய மத்திய பட்ஜெட்

கல்விக்கு 99300 கோடி ரூபாய் ஒதுக்கிய மத்திய பட்ஜெட்
நாடாளுமன்றத்தில் 2020-2021 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 99,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என அறிவித்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள்.
மேலும் கல்விக்கான முக்கிய பட்ஜெட் அறிவிப்புகளாவன,

Ø திறன் மேம்பாட்டிற்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
Ø வெளி வர்த்தகத்தை ஈர்க்கும் வகையில் கல்வித் துறையில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் மூலம் விரைவில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படுகிறது.
Ø இளம் பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் வகையில் புதிய திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது.
Ø தேசிய காவல் பல்கலைக்கழகம் (National Police University), தேசிய தடவியல் பல்கலைக்கழகம் (National Forensic University) உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படுகிறது.
Ø ஆசிரியர்கள், செவிலியர்கள், பாராமெடிக்கல் உள்ளிட்ட ஊழியர்களுக்கு சிறப்பு படிப்புகள் கொண்டு வரப்படுகிறது.



No comments:

Post a Comment