தமிழக பட்ஜெட் 2020
|
தரமான கல்வியை மேம்படுத்த தமிழக பட்ஜெட்டில்
அதிகபட்சமாக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 34,181.73 கோடி நிதி ஒதுக்கீடு.
|
தமிழக அரசின் 2020-2021 பட்ஜெட்டை துணைமுதல்வர்
ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
|
பத்தாவது முறையாக தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர்
ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே கடந்த ஒன்பது முறை இவர் நிதி அமைச்சராக
இருந்து தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
|
தமிழக பட்ஜெட்டை அதிகமுறை தாக்கல் செய்தவர்
ஓ. பன்னீர்செல்வம் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
|
பட்ஜெட் தாள்கள் அடங்கிய பெட்டியில் ஜெயலலிதாவின்
படம் அச்சிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
|
நீரை சிக்கனமாக பயன்படுத்தும் திருந்திய நெல்
சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கராக விரிவுபடுத்தப்படும்.
|
2020-21 நிதியாண்டுக்கான தமிழக அரசின் மூலதன
செலவு ரூ.36,367.78 கோடியாக இருக்கும்.
|
தமிழக அரசின் கடன் ரூ4,56,660.99 கோடியாகவும்,
வருவாய் பற்றாக்குறை ரூ25.71 ஆயிரம் கோடியாகவும் உள்ளது.
|
தமிழ் வளர்ச்சி துறைக்கு 74 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
|
காவல்துறைக்கு 8876 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
|
சிறைச்சாலை துறைக்கு 392 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
|
மீன்வளத்துறைக்கு 1,229 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
|
நீர் பாசனத்திற்காக 6,991 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
|
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு
5,306 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
|
நீதி நிர்வாகத்திற்கு 1,403 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
|
உணவுத்துறைக்கு 6,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
|
கால்நடைத்துறைக்கு 199 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
|
Friday, 14 February 2020
தமிழக பட்ஜெட் 2020
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment