Monday 3 February 2020

இஸ்ரோ செல்ல பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு

இஸ்ரோ செல்ல பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு
இந்தக் கல்வியாண்டில் 8ஆம் வகுப்பு முடித்து 9 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டத்தில் பதிவு செய்து, கோடை விடைமுறையில் இஸ்ரோ (ISRO - Indian Space Research Organization) மையத்தில் இரண்டு வார பயிற்சி பெற இஸ்ரோ அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கு மாநில / மத்திய / சர்வதேச கல்வி திட்டத்தில் பயிலும் எல்லா இந்திய மாணவர்களும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
பிப்ரவரி 3 முதல் 24 வரை.
பயிற்சி நாட்கள் :
மே 11 முதல் 22 வரை
தேர்வு முறை :
மதிப்பெண், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி போன்ற போட்டிகளில் வென்ற சான்றிதழ்கள், விளையாட்டு போட்டியில் வென்ற சான்றிதழ்கள் போன்ற அனைத்தையும் கணக்கில் கொண்டு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும் :


No comments:

Post a Comment