பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்
01
|
அகழி
|
Moat
|
கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட
நீர் அரண்
|
02
|
அருவி
|
Water fall
|
மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது
|
03
|
ஆழிக்கிணறு
|
Well in Seashore
|
கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு
|
04
|
ஆறு
|
River
|
பெருகி ஓடும் நதி
|
05
|
இலஞ்சி
|
Reservoir for drinking and other purposes
|
பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்
|
06
|
உறை கிணறு
|
Ring Well
|
மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட
கிணறு
|
07
|
ஊருணி
|
Drinking water tank
|
மக்கள் பருகும் நீர் நிலை
|
08
|
ஊற்று
|
Spring
|
பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது
|
09
|
ஏரி
|
Irrigation Tank
|
வேளாண்மை பாசன நீர் தேக்கம்
|
10
|
ஓடை
|
Brook
|
அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும்
வாய்க்கால் வழி ஓடும் நீர்
|
11
|
கட்டுக் கிணறு
|
Built-in -well
|
சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால்
சுவர்கட்டிய கிணறு
|
12
|
கடல்
|
Sea
|
சமுத்திரம்
|
13
|
கம்வாய் (கம்மாய்)
|
Irrigation Tank
|
பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்
|
14
|
கலிங்கு
|
Sluice with many Ventures
|
ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல்
இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய்
உள்ள நீர் செல்லும் அமைப்பு
|
15
|
கால்
|
Channel
|
நீரோடும் வழி
|
16
|
கால்வாய்
|
Supply channel to a tank
|
ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி
|
17
|
குட்டம்
|
Large Pond
|
பெருங் குட்டை
|
18
|
குட்டை
|
Small Pond
|
சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும்
நீர் நிலை
|
19
|
குண்டம்
|
Small Pool
|
சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை
|
20
|
குண்டு
|
Pool
|
குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்
|
21
|
குமிழி
|
Rock cut Well
|
நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி
வரச்செய்த குடை கிணறு
|
22
|
குமிழி ஊற்று
|
Artesian fountain
|
அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து
வரும் ஊற்று
|
23
|
குளம்
|
Bathing tank
|
ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர்
நிலை
|
24
|
கூவம்
|
Abnormal well
|
ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு
|
25
|
கூவல்
|
Hollow
|
ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்
|
26
|
வாளி
|
stream
|
ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி
அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை
|
27
|
கேணி
|
Large well
|
அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு
|
28
|
சிறை
|
Reservoir
|
தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை
|
29
|
சுனை
|
Mountain Pool
|
மலையிடத்து இயல்பாக அமைந்த நீர் நிலை
|
30
|
சேங்கை
|
Tank with duck weed
|
பாசிக்கொடி மண்டிய குளம்
|
31
|
தடம்
|
Beautifully constructed bathing tank
|
அழகாக நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்
|
32
|
தளிக்குளம்
|
tank surrounding a temple
|
கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற்
நீர் நிலை
|
33
|
தாங்கல்
|
Irrigation tank
|
இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை
குறிக்கும்
|
34
|
திருக்குளம்
|
Temple tank
|
கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது
புட்கரணி எனவும் பெயர் பெறும்
|
35
|
தெப்பக்குளம்
|
Temple tank with inside pathway along
parapet wall
|
ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்
|
36
|
தொடு கிணறு
|
Dig well
|
ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும்
இடம்
|
37
|
நடை கேணி
|
Large well with steps on one side
|
இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு
|
38
|
நீராவி
|
Bigger tank at the center of Building hall
|
மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும்
கூறப்படும்
|
39
|
பிள்ளைக்கிணறு
|
Well in middle of a tank
|
குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு
|
40
|
பொங்கு கிணறு
|
Well with bubbling spring
|
ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு
|
41
|
பொய்கை
|
Lake
|
தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை
|
42
|
மடு
|
Deep place in a river
|
ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்
|
43
|
மடை
|
Small sluice with single venturi
|
ஒரு கண்ணே உள்ள சிறு மதகு
|
44
|
மதகு
|
Sluice with many ventures
|
பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும்
திறப்பும் உள்ளது
|
45
|
மறு கால்
|
Surplus water channel
|
அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
|
46
|
வலயம்
|
Round tank
|
வட்டமாய் அமைந்த குளம்.
|
47
|
வாய்க்கால்
|
Small water course
|
ஏரி முதலிய நீர் நிலைகள்
|
No comments:
Post a Comment