Monday, 30 September 2024

படிப்பில் சூப்பர் ஸ்டார் ஆக…!

படிப்பில் சூப்பர் ஸ்டார் ஆக…!

படிப்பில் நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆக வேண்டுமா?

நிச்சயம் ஆகலாம்.

அதற்கு முன்பு நடிப்பில் யார் சூப்பர் ஸ்டார் என்று பார்ப்போம். நடிப்பில் யார் சூப்பர் ஸ்டார் என்று உங்களுக்குத் தெரியாதா என்ன?

இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்.

தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்.

இவர்கள் இருவரையும் பின்பற்றியே அவர்கள் நடிப்பில் சூப்பர் ஸ்டார் ஆனதைப் போல, நீங்கள் படிப்பில் சூப்பர் ஸ்டார் ஆகலாம்.

அது எப்படி என்கிறீர்களா?

அவர்கள் நடிப்பில் கடைபிடிக்கும் நுட்பங்களை நீங்கள் படிப்பில் கடைபிடித்தால் நிச்சயம் நீங்களும் சூப்பர் ஸ்டார் ஆகலாம்.

அவர்கள் அப்படி என்னதான் நுட்பங்களைக் கடைபிடிக்கிறார்கள்?

ரஜினி, அமிதாப் இருவரும் தங்கள் தொழில் வாழ்க்கையில் கடைபிடிக்கும் ஒழுக்கம் அபரிமிதமானது. நீங்களும் அப்படி ஒழுக்கத்தைக் கடைபிடிக்கலாம்.

அவர்கள் இருவரின் பணிவைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. நீங்களும் அப்படி பணிவானவர்களாக இருக்கலாம்.

இருவருமே இயக்குநர்களை மதிப்பதில் நிகரற்றவர்கள். நீங்களும் அப்படி ஆசிரியர்களை மதிக்கலாம்.

தங்கள் குருநாதர்களையும் தங்களுக்கு உதவியர்களையும் அவர்கள் இருவரும் எப்போதும் மறப்பதில்லை. நீங்களும் அப்படி இருக்கலாம்.

இருவருமே படப்பிடிப்புத் தளத்துக்குச் சரியான நேரத்துக்கு முன்பாக வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நீங்களும் அப்படி பள்ளிக்குத் தனிப்பயிற்சிக்குச் செல்லலாம்.

அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் படப்பிடிப்பு நீண்டாலும் பொறுமையாக அவ்வளவு நேரமும் ஒத்துழைத்து நடித்துக் கொடுப்பவர்கள். நீங்களும் அப்படி சில பாடப்பகுதிகளைப் படித்து முடிக்க நேரமானால் பொறுமையாக அவசரப்படாமல் ஆத்திரப்படாமல் நிதானம் தவறாமல் இருந்து படித்து முடிக்கலாம்.

இருவருமே அவர்களுக்கான வசனத்தை முன்கூட்டியே வாங்கி மனதில் பதிய வைத்துக் கொண்டு கண்ணாடி முன் நடித்துப் பார்த்து விட்டு படப்பிடிப்புத் தளத்துக்கு வருவதை வழக்கமாகக் கொண்டவர்கள். நீங்களும் அப்படி நாளை நடத்த இருக்கும் பாடத்தை இன்றே படித்துப் பார்த்து விட்டு வகுப்பறைக்குச் செல்லலாம்.

அதிலும் அமிதாப் பச்சன் எத்தனை பக்க வசனமென்றாலும் அதை தலைகீழாகக் கேட்டாலும், இடையில் எங்கிருந்து கேட்டாலும் சொல்லக் கூடிய ஆற்றல் படைத்தவர். நீங்களும் அப்படி பாடப்பகுதியைப் படித்து வைத்திருந்தால் எப்படி இருக்கும்.

அவர்களின் தொழில் வெற்றிக்கு இந்த அர்ப்பணிப்பும் ஒழுக்கமும் அக்கறையும் நேர்த்தியும்தான் காரணம் என்றால் அது உண்மைதானே! அப்படியொரு அர்ப்பணிப்பு, ஒழுக்கம், அக்கறை, நேர்த்தி உங்களுக்கும் வந்து விட்டால்…. சொல்லவும் வேண்டுமோ, நீங்களும் படிப்பில் சூப்பர் ஸ்டார்தானே!

ஆகவே, மாணவர்களாகிய இளைய தலைமுறையினருக்கு இவ்விருவரிடமிருந்து தெரிந்து கொள்வதற்கான முக்கியமான செய்திகள் இருக்கின்றதுதானே. அவை என்ன என்று தொகுத்துச் சொன்னால் நலமாக இருக்கும் என்கிறீர்களா?

சரியாக நேரத்திற்குப் பள்ளிக்குச் செல்லுதல், சரியான நேரத்தில் வீட்டுப்பாடங்களை முடித்தல், சில பாடங்களைப் படித்து முடிப்பதற்குக் கூடுதல் நேரமானாலும் பொறுமையாக இருந்து படித்தல், படித்ததை எப்படிக் கேட்டாலும் அதைச் சொல்லக் கூடிய வல்லமை பெறுதல் போன்ற விசயங்களை ரஜினி மற்றும் அமிதாப்பைப் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம்தானே!

அப்படி கற்றுக் கொண்டால் படிப்பில் நீங்களும் ஒரு சூப்பர் ஸ்டார்தான்! ஆமாம் நடிப்பில் மட்டும்தான் சூப்பர் ஸ்டார் இருக்க வேண்டுமா என்ன? படிப்பில் நீங்கள் சூப்பர் ஸ்டாராக இருங்கள்!

*****

Sunday, 29 September 2024

NMMS – SAT – சமூக அறிவியல் – எட்டாம் வகுப்பு – இந்தியாவில் கல்வி வளர்ச்சி – பாடப்பொருள் & பயிற்சி வினாக்கள்

NMMS – SAT – சமூக அறிவியல் – எட்டாம் வகுப்பு – இந்தியாவில் கல்வி வளர்ச்சி – பாடப்பொருள் & பயிற்சி வினாக்கள்

National Means Cum Merit Scholarship Scheme (NMMS)

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு

 NMMS – SAT – சமூக அறிவியல் – எட்டாம் வகுப்பு – இந்தியாவில் கல்வி வளர்ச்சி பகுதிக்கான பாடப்பொருள் மற்றும் பயிற்சி வினாக்களைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

NMMS – SAT – சமூக அறிவியல் – ஏழாம் வகுப்பு – விஜயநகர, பாமினி அரசுகள் – பாடப்பொருள் & பயிற்சி வினாக்கள்

NMMS – SAT – சமூக அறிவியல் – ஏழாம் வகுப்பு – விஜயநகர, பாமினி அரசுகள் – பாடப்பொருள் & பயிற்சி வினாக்கள்

National Means Cum Merit Scholarship Scheme (NMMS)

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு

 NMMS – SAT – சமூக அறிவியல் – ஏழாம் வகுப்பு – விஜயநகர, பாமினி அரசுகள் பகுதிக்கான பாடப்பொருள் மற்றும் பயிற்சி வினாக்களைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

NMMS – SAT – அறிவியல் – ஏழாம் & எட்டாம் வகுப்பு – மின்னோட்டவியல் & மின்னியல் – பாடப்பொருள் & பயிற்சி வினாக்கள்

NMMS – SAT – அறிவியல் – ஏழாம் & எட்டாம் வகுப்பு – மின்னோட்டவியல் & மின்னியல் – பாடப்பொருள் & பயிற்சி வினாக்கள்

National Means Cum Merit Scholarship Scheme (NMMS)

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு

 NMMS – SAT – அறிவியல் – ஏழாம் & எட்டாம் வகுப்பு – மின்னோட்டவியல் & மின்னியல் பகுதிக்கான பாடப்பொருள் மற்றும் பயிற்சி வினாக்களைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

NMMS – SAT – அறிவியல் – ஏழாம் வகுப்பு – செல் உயிரியல் – பாடப்பொருள் & பயிற்சி வினாக்கள்

NMMS – SAT – அறிவியல் – ஏழாம் வகுப்பு – செல் உயிரியல் – பாடப்பொருள் & பயிற்சி வினாக்கள்

National Means Cum Merit Scholarship Scheme (NMMS)

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு

 NMMS – SAT – அறிவியல் – ஏழாம் வகுப்பு – செல் உயிரியல் பகுதிக்கான பாடப்பொருள் மற்றும் பயிற்சி வினாக்களைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

NMMS – SAT – கணக்கு – ஏழாம் வகுப்பு (பருவம் 2 & 3) – எண்ணியல் – பாடப்பொருள் & பயிற்சி வினாக்கள்

NMMS – SAT – கணக்கு – ஏழாம் வகுப்பு  (பருவம் 2  & 3) – எண்ணியல் – பாடப்பொருள் & பயிற்சி வினாக்கள்

National Means Cum Merit Scholarship Scheme (NMMS)

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு

 NMMS – SAT – கணக்கு – ஏழாம் வகுப்பு (பருவம் 2 & 3) – எண்ணியல் பகுதிக்கான பாடப்பொருள் மற்றும் பயிற்சி வினாக்களைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

NMMS – MAT – கண்ணாடி பிம்பங்கள் – பாடப்பொருள் & பயிற்சி வினாக்கள்

NMMS – MAT – கண்ணாடி பிம்பங்கள் – பாடப்பொருள் & பயிற்சி வினாக்கள்

National Means Cum Merit Scholarship Scheme (NMMS)

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு

 NMMS – MAT – கண்ணாடி பிம்பங்கள் பகுதிக்கான பாடப்பொருள் மற்றும் பயிற்சி வினாக்களைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

NMMS – MAT – உருவ / பட வரிசையை நிரப்புதல் – பாடப்பொருள் & பயிற்சி வினாக்கள்

NMMS – MAT – உருவ / பட வரிசையை நிரப்புதல் – பாடப்பொருள் & பயிற்சி வினாக்கள்

National Means Cum Merit Scholarship Scheme (NMMS)

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு

 NMMS – MAT – உருவ / பட வரிசையை நிரப்புதல் பகுதிக்கான பாடப்பொருள் மற்றும் பயிற்சி வினாக்களைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

களஞ்சியம் செயலியில் விழா முன்பணம் பெற விண்ணப்பிப்பது எப்படி?

களஞ்சியம் செயலியில் விழா முன்பணம் பெற விண்ணப்பிப்பது எப்படி?

ஒருங்கிணைந்த நிதி மற்று மனித வள மேலாண்மைத் திட்டத்தின் (IFHRMS) செயலியான Kalanjiyam App இன் வழியே விழா முன் பணத்திற்கு விண்ணப்பிக்கும் நடைமுறை அக்டோபர் 2024 முதல் நடைமுறைக்கு வருகிறது. இனி தமிழ்நாட்டு அரசின் ஊதியம் பெறுவோர் இந்த App வழியே தங்களுக்கான விழா முன்பணத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பின்வரும் விழாக்களுக்கு விழா முன்பணம் பெற விண்ணப்பிக்கலாம். அவையாவன,

1. பக்ரித்

2. கிறிஸ்துமஸ்

3. தீபாவளி

4. ஈஸ்டர்

5. காந்தி ஜெயந்தி

6. புனித வெள்ளி

7. விடுதலை நாள்

8. கிருஷ்ண ஜெயந்தி

9. மே தினம்

10. மிலாடி நபி

11. மொகரம்

12. ஓணம்

13. பொங்கல்

14. ரம்ஜான்

15. குடியரசு தினம்

16. தெலுங்கு வருடப் பிறப்பு

17. விஜயதசமி

18. விநாயகர் சதுர்த்தி

விழா நாளுக்குச் சரியாக 30 நாள்களுக்கு முன்னர் விழா முன்பணம் பெற விண்ணப்பிக்க வேண்டும். இறுதியாகப் பெற்ற விழா முன்பணத்தை முழுமையாகத் திருப்பி செலுத்திய பின்பே விண்ணப்பிக்க வேண்டும். IFHRMS இல் centralized payroll run செய்வதற்கு முன்பே பணம் வரவாகும்படி முன்தேதியிட்டு விண்ணப்பிப்பது நல்லது.

IFHRMS மூலம் ஒரு நாள்காட்டி ஆண்டில் (January - December) ஒரு முறை மட்டுமே விழா முன்பணம்  அனுமதிக்கப்படும். பணம் வரவாகும் மாதத்தைத்தான் IFHRMS கணக்கில் எடுத்துக் கொள்ளும்.

பணம் வரவான அந்த மாத ஊதியத்திலேயே தவணை தொடங்கப்பட்டு ரூ.1000/- பிடித்தம் செய்யப்பட்டுவிடும். தொடர்ச்சியாக 10 மாதங்கள் தவணை பிடித்தம் செய்யப்படும்.

விழா முன்பணம் பெற விண்ணப்பிப்பதற்கான படிநிலைகளாவன,

1) Kalanjiyam App ஐ Login செய்யவும்.

2) Advance - Festival Advance - Apply என்ற வரிசையில் தேர்வு செய்யவும்.

3) Festival Name என்பதில் தாங்கள் விண்ணப்பிக்கும் விழாவைத் தேர்வு செய்தால், Festival Date - Advance Amount - Recovery no. of Installment உள்ளிட்டவை தானாகவே தோன்றும்.

4) இறுதியாக Submit செய்யவும்.

இத்தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். பயனுள்ள தகவல்களுக்கு என்றும் இணைந்திருங்கள். நன்றி! வணக்கம்!

*****

Saturday, 28 September 2024

கெட்டப் பழக்கங்களை நல்லப் பழக்கங்களாக மாற்றுவது எப்படி?

கெட்டப் பழக்கங்களை நல்லப் பழக்கங்களாக மாற்றுவது எப்படி?

மனிதர்கள் எப்படி கெட்டப் பழக்கங்களுக்கு அடிமையாகிறார்கள்? ஏன் அதிலிருந்து வெளியே வர முடியாமல் தவிக்கிறார்கள்.

மன இறுக்கம்,

மன உளைச்சல்,

சலிப்படைதல்,

களைப்படைதல் காரணமாக கெட்டப் பழக்கங்களுக்கு அடிமையாகுபவர்கள் உண்டு.

சில நிமிட மனக்கிளர்ச்சிக்காகவும் கெட்டப் பழக்கங்களை விடாமல் பிடித்துக் கொள்பவர்களும் உண்டு.

நகம் கடித்தல் தொடங்கி, கடைகளில் பொருட்களை வாங்கிக் குவித்தல், வார இறுதியில் மது அருந்ததுதல், அடிக்கடி புகைப் பிடித்தல், அடிக்கடி அலைபேசி பார்த்தல், தொடர்ச்சியாகப் பல மணி நேரங்கள் தொலைக்காட்சி பார்த்தல் வரை இதில் பல்வேறு ரகங்கள் உண்டு.

இது போன்ற பழக்கங்களை மாற்றிக் கொள்ள முடியாதா?

ஏன் முடியாது?

முதலில் சின்ன சின்ன மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். மனம் எப்போதும் சுகமானதையும் சௌகரியமானதையும் விரும்பும். அதனால் மாற்றங்களைச் சிறியதாகத்தான் தொடங்க வேண்டும். சிறியதாகத் தொடங்கும் மாற்றம் பெரியதாக மாறும்.

இப்போது நீங்கள் கெட்டப் பழக்கங்களை விடுவதில் இருக்கும் ஒரு முக்கியமான அம்சத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கெட்டப் பழக்கத்தை விட்டு விடுவது அவ்வளவு சுலபமானதன்று. ஆனால் கெட்டப் பழக்கத்தின் இடத்தில் ஒரு நல்ல பழக்கத்தைக் கொண்டு வருவதன் மூலமாக அதை மாற்றலாம், கெட்டப் பழக்கத்தை இல்லாமல் செய்யலாம். ஆக கெட்டப் பழக்கத்தை ஒழிப்பது என்பது ஒரு கெட்டப் பழக்கத்திற்குப் பதிலாக ஒரு நல்ல பழக்கத்தைக் கொண்டு வருவதே ஆகும்.

உதாரணமாகப் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள நபர் அதற்குப் பதிலாக அந்த நேரத்தில் ஆழ்ந்து மூச்சை இழுத்து விடும் பழக்கத்தை மாற்றாக உருவாக்கிக் கொள்ளலாம்.

மது அருந்தும் பழக்கம் உள்ளவர் அந்த நேரத்தில் அதற்குப் பதிலாகப் பழச்சாறு அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

அதிகம் அலைபேசியைப் பயன்படுத்தும் ஒருவர் அந்த நேரத்தில் புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

அதிகம் தொலைக்காட்சிப் பார்க்கும் பழக்கம் உள்ள ஒருவர் அந்த நேரத்தில் நண்பர்களைச் சந்தித்து அளவளாவும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

இப்போது நல்ல பழக்கத்தை உருவாக்கிக் கொள்வதில் இருக்கும் இன்னொரு பிரச்சனைக்கு வருவோம்.

நல்லப் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள நினைக்கும் போது அது அவ்வளவு சுலபமாக நடந்து விடாது. ஏன் அப்படி?

ஏனென்றால் ஆசையின் காரணமாக நாம் எல்லாவற்றையும் பெரிது பெரிதாகச் செய்ய நினைக்கிறோம். ஆகவே அதை மாற்றி சிறியதிலிருந்து துவங்க வேண்டும்.

அது எப்படி என்கிறீர்களா?

உதாரணமாகத் தினந்தோறும் ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்ய நினைக்கும் ஒருவர் அந்தப் பழக்கத்தை முதலில் ஐந்து நிமிட நடைபயிற்சி என்ற அளவில் தொடங்க வேண்டும்.

சிறிய அளவில் தொடங்கும் போது அதை சுலபமாகச் செய்ய முடியும். அதில் கிடைக்கும் வெற்றி தொடர்ந்து நடைபயிற்சிக்கான நேரத்தை அதிகரிக்கத் தூண்டும். படிப்படியாக நேரத்தை அதிகரித்து ஒரு மணி நேர நடைபயிற்சி என்ற இலக்கை நீங்கள் வெற்றிகரமாக அடையலாம்.

இதே முறைதான் எல்லாவற்றிற்கும்.

உணவுப் பழக்கத்தை மாற்ற விரும்பும் போதும் இதே போன்ற சிறிய அளவில் துவங்க வேண்டும். ஒட்டுமொத்த உணவை மாற்றுவதற்குப் பதிலாக ஒரே ஒரு உணவை மட்டும் துவக்கத்தில் மாற்றி அதில் வெற்றி கண்டு விட்டால் ஒவ்வொரு உணவாக மாற்றும் ஆர்வம் உங்களை அறியாமல் உங்களுக்கே வந்து விடும்.

இதற்குக் காரணம் சிறிய இலக்குகள் மலைப்பை உண்டாக்காது. செய்ய முடியுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தாது. சுலபமாகச் செய்து விட முடியும் என்ற நம்பிக்கையும் ஆர்வத்தையும் உண்டாக்குவதால் சிறிய சிறிய இலக்குகளிலிருந்தே இலக்குகளைப் பெரிதாக்க வேண்டும்.

ஆகவே சிறியதே அழகு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இதில் இன்னொரு முக்கிய விசயத்தையும் கவனிக்க வேண்டும்.

சிறிய காரியங்களைச் சிறிய காரியங்கள்தானே, இதைப் பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளி வைத்து விடக் கூடாது. அப்படி தள்ளி வைத்தால் சிறிய காரியமானாலும் அதைச் செய்வது பெரிய காரியமாகி விடும். அதே நேரத்தில் சிறியதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் அந்த இலக்கை, அந்தக் காரியத்தைத் தொடர்ந்து செய்யவும் வேண்டும். அதில் சுணக்கமோ, சோம்பேறித்தனமாக காட்டி விடக் கூடாது. காரியங்களைச் செய்யத் துவங்கும் போதுதான் சுணக்கமும் சோம்பேறித்தனமும் உண்டாகும். செய்ய ஆரம்பித்து விட்டால் அது விலகி விடும்.

இப்படியாக நீங்கள் கெட்டப் பழக்கத்தை மாற்றி அமைக்கலாம். நல்லப் பழக்கத்தை வலுபடுத்தலாம்.

இச்செய்தி உங்கள் வாழ்க்கையை மாற்றி உங்களைப் பயனுள்ளவராக மாற்றினால் அந்த அனுபவத்தைப் பதிவிடுங்களேன். அது மேலும் பலருக்கு உதவும், உத்வேகம் தரும்.

Friday, 27 September 2024

குழந்தைகளைப் பிரச்சனைகள் இன்றி வளர்ப்பது எப்படி?

குழந்தைகளைப் பிரச்சனைகள் இன்றி வளர்ப்பது எப்படி?

குழந்தைகளைப் பிரச்சனைகள் இன்றி வளர்க்க முடியுமா?

அவர்களை மிகவும் பாதுகாப்பாக வளர்க்க முடியுமா?

குழந்தைகளுக்குப் பிரச்சனைகளே இல்லாத வாழ்க்கையைக் கொடுக்க முடியாது. ஆனால் பிரச்சனைகள் வந்தால் தீர்க்கும் அறிவையும் திறமையையும் கொடுக்க முடியும்.

குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்க்கிறோம் என்ற பெயரில் குழந்தைகளைப் பலவீனமானவர்களாக ஆக்கி விடக் கூடாது. குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக வளர்ப்பதாக நினைத்தால், அவர்கள் பாதுகாப்பற்ற மனநிலையில்தான் வளர்வார்கள்.

அதே நேரத்தில் அவர்களைச் சரியாக வளர்க்க வேண்டும் என்று அடிக்கடி அறிவுரைகளைக் கூறி அவர்களின் அறிவை மலுங்கடித்து விடக் கூடாது. அவர்களுடைய அறிவு வளர்வதற்கு அறிவுரைகளைக் கூறாமல் ஒதுங்கி நிற்க வேண்டிய தருணங்களும் இருக்கின்றன.

குழந்தைகள் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும். அவர்கள் சமாளித்துப் பழக வேண்டும். அடிபட்டுக் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப பெற்றோர்கள் விலகிக் கொள்ள வேண்டிய சூழ்நிலைகளும் இருக்கின்றன.

அப்படியானால் பெற்றோர்கள் செய்ய வேண்டியது எதுவுமே இல்லையா?

ஏன் இல்லை?

குழந்தைகள் தோல்விகளைக் கண்டு துவளும் போது அவர்களுக்கு நம்பிக்கைக் கொடுக்க வேண்டும்.

பிரச்சனையை எப்படி சமாளிப்பது எனத் தடுமாறும் போது அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

சோர்ந்து போய் அமர்ந்திருக்கும் போது அவர்களுக்கு உத்வேகம் ஊட்ட வேண்டும்.

பெற்றோர்கள் செய்ய வேண்டியது இதுவே.

குழந்தைகளை அவர்களுக்கான அனுபவங்களைப் பெற அனுமதியுங்கள். அப்போதுதான் அவர்களுக்கு துணிவும் தன்னம்பிக்கையும் கிடைக்கும்.

குழந்தைகளை அவர்களுக்கான அனுபவங்களைப் பெறுவதற்கான சுதந்திரத்தைத் தருவதற்கான துணிச்சல் பெற்றோர்களிடம் இருக்கிறதா? அது இருந்தால்தான் குழந்தைகள் துணிச்சல் மிகுந்தவர்களாக வளர்வார்கள்.

குழந்தைகள் பிரச்சனைகளை நம்பிக்கையோடு எதிர்கொள்வார்கள் என்ற நம்பிக்கை பெற்றோர்களிடம் இருக்கிறதா? அது இருந்தால்தான் குழந்தைகள் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக வளர்வார்கள்.

ஆக குழந்தைகளைப் பிரச்சனைகளின்றி வளர்க்க முடியாது. பிரச்சனைகளோடுதான் வளர்க்க வேண்டும். பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களாகத்தான் அவர்களை வளர்த்தெடுக்க வேண்டும்.

குழந்தைகள் குழந்தைகளாக வளர்வதற்கு அவர்களுக்குரிய சுதந்திரத்தையும் துணிச்சலையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கும் பெற்றோர்களாக இந்தியப் பெற்றோர்கள் மாறும் போது இந்தியக் குழந்தைகள் உலக அளவில் மிகப் பெரிய அளவில் சாதிப்பார்கள்.

Thursday, 26 September 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 27.09.2024 (வெள்ளி)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)      அரசுக்குச் சொந்தமான நிலம் மற்றும் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடருமாறு மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

2)      காலாண்டு விடுமுறைக்காக 1120 சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

3)      நியாய விலைக் கடைகளில் தராசுகளுடன் விற்பனை இயந்திரத்தை இணைப்பதற்கான உத்தரவைத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

4)      உச்சநீதி மன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதை அடுத்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 471 நாட்களுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வருகிறார்.

5)      சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக பல இடங்கள் தண்ணீரில் மிதக்கின்றன.

6)      மும்பையில் ஒரே நாளில் 27 சென்டி மீட்டர் பெய்த மழையால் மும்பை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

7)      புனேயில் கனமழை பொழியக் கூடும் என்ற வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையால் பிரதமரின் புனே பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

8)      தமிழகத்திற்கு மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையை வழங்கியுள்ள வானிலை ஆய்வு மையம்.

9)      பாரசிட்டாமால், கால்சியம் மாத்திரைகள், விட்டமின் பி3 மாத்திரைகள் உள்ளிட்ட 53 மருந்துகள் மருந்து தரநிலைச் சோதனையில் தோல்வி அடைந்துள்ளதாக இந்திய மருத்து கட்டுப்பாட்டு அமைப்பு அறிவித்துள்ளது.

10)  திருப்பதி தேவஸ்தானத்துக்குக் கலப்பட நெய் வழங்கிய புகாரில் திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

11)  கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோனையை பசிபிக் பெருங்கடலில் சீனா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

12)  அமெரிக்க அதிபர் தேர்தலில் விண்வெளியில் இருந்து வாக்களிக்க இருக்கிறார் சுனிதா வில்லியம்ஸ்.

13)  நுங்கம்பாக்கம் காம்தார்நகர் சாலைக்குப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயர் வைக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

14)  உக்ரைன் போர் தீவிரமானால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா தயங்காது என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எச்சரித்துள்ளார்.

English News

1) The Tamil Nadu Government has directed the District Collectors to file criminal cases against those encroaching on government owned land and water bodies.

2) Government State Transport Corporation has informed that it will operate 1120 special buses for the quarterly holidays.

3) Government of Tamil Nadu has issued an order to connect vending machines with scales in fair price shops.

4) Former minister Senthil Balaji comes out of jail after 471 days after Supreme Court granted him conditional bail.

5) Many places are floating in water due to heavy rain in Chennai.

6) 27 cm of rain in a single day in Mumbai, Mumbai city is reeling under floods.

7) Prime Minister's visit to Pune has been canceled due to weather forecast of heavy rains in Pune.

8) Meteorological Center has issued heavy rain warning for Tamil Nadu for three days.

9) The Medicines Control Organization of India has announced that 53 medicines including paracetamol, calcium tablets and vitamin B3 tablets have failed the drug standard test.

10) A case has been registered against the Dindigul A.R. dairy company on the complaint of providing adulterated ghee to Tirupati Devasthanam.

11) China has successfully launched an ICBM in the Pacific Ocean.

12) Sunita Williams to vote in US presidential election from space.

13) The Chief Minister has announced that Nungambakkam Kamtarnagar road will be named after singer SB Balasubramaniam.

14) Russian President Vladimir Putin has warned that Russia will not hesitate to use nuclear weapons if the war in Ukraine escalates.

பணியில் சேர்வதற்கு முன்பே உயர்கல்வியில் சேர்ந்தவர்கள் Arrear தேர்வு எழுத துறை அனுமதி பெற வேண்டாம்!

பணியில் சேர்வதற்கு முன்பே உயர்கல்வியில் சேர்ந்தவர்கள் Arrear தேர்வு எழுத துறை அனுமதி பெற வேண்டாம்!

பணியில் சேர்வதற்கு முன்பே உயர்கல்வி படித்துவிட்டு பணியில் சேர்ந்த பிறகு நிலுவைத் (arrear)தேர்வு எழுத அனுமதி பெற வேண்டியது இல்லை என்பதற்கான செயல்முறை கடிதம்.


வினாத்தாள் கட்டணப் பயன்பாட்டிற்கான சான்றிதழ்

வினாத்தாள் கட்டணப் பயன்பாட்டிற்கான சான்றிதழ்

வட்டாரக் கல்வி அலுவலகத்துக்குக் கொடுக்க வேண்டிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளுக்கான ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வினாத்தாள் கட்டணத் தொகைக்கான பயன்பாட்டுச் சான்றிதழ் படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

Wednesday, 25 September 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 26.09.2024 (வியாழன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)      150 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள தொடக்கப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்களை இடைநிலை ஆசிரியர் பணியிடங்களாக மாற்றுவது குறித்து கல்வித் துறையில் பரிசீலனை நடப்பதாகக் கல்வித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2)      காலாண்டு விடுமுறையை செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6 வரை ஒன்பது நாட்களுக்குப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. அக்டோபர் 7 இல் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்.

3)      மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் கல்வித் துறைக்கான நிதியைக் கேட்டு முதல்வர் இன்று டெல்லி செல்கிறார்.

4)      மாநிலம் முழுவதும் சிறந்த நெசவாளர் மற்றும் வடிவமைப்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்ட 12 விருதாளர்களுக்கு முதல்வர் விருதுகளை வழங்கினார்.

5)      சென்னை உயர்நீதி மன்ற தலைமை பதிவாளராக நீதிபதி அல்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

6)      தமிழகத்தில் மர்ம காய்ச்சல் பாதிப்பு இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

7)      காஷ்மீரில் இரண்டாம் கட்டமாக 26 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

8)      இந்தியாவில் 4000 கோடியில் 31 கப்பல்கள் கட்டப்பட்டு வருவதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

9)      விரைவில் அமைதி திரும்பும், போர் முடிவுக்கு வரும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

10)  ஹரிணி அமர சூரிய இலங்கையின் புதிய பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

English News

1) According to sources in the Education Department, the Education Department is considering converting the posts of Headmasters into Secondary Grade Teacher Posts in primary schools with less than 150 students.

2) The school education department has announced the quarterly holiday for nine days from September 28 to October 6. Schools will reopen on October 7 after the quarterly vacation.

3) CM is going to Delhi today to ask for funds for metro rail project and education department.

4) Chief Minister presented awards to 12 awardees selected as best weavers and designers across the state.

5) Judge Alli has been appointed as the Chief Registrar of Madras High Court.

6) Minister of Health has said that there is no case of mysterious fever in Tamil Nadu.

7) Assembly elections were held in Kashmir in the second phase in 26 assembly constituencies.

8) Defense Minister Rajnath Singh said that 31 ships are being built in India at a cost of 4000 crores.

9) Ukrainian President Zelensky said that peace will return soon and the war will end.

10) Harini Amara Surya has been selected as the new Prime Minister of Sri Lanka.