Monday, 30 June 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (01.07.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (01.07.2025)

1) தேசிய நல்லாசிரியர் விருதுக்கு சூலை 13க்குள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான இணையதளத்திற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://nationalawardstoteachers.education.gov.in/

2) 120 மின்சாரப் பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் துவங்கி வைத்தார்.

3) இன்று முதல் தொடர்வண்டிக் கட்டணங்கள் உயர்கின்றன.

4) மகாராஷ்டிராவில் மும்மொழிக் கொள்கை ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

5) ஒடிசா மாநிலம், பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையில் ஏற்பட்ட நெரிசலில் 3 பேர் பலியாகினர். 50 பேர் படுகாயம் அடைந்தனர்.

6) மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முதல் கட்ட பணி ஏப்ரல் 2026 இல் துவங்கும்.

7) 44 ஆவது முறையாக மேட்டூர் அணை நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Education & GK News

1) Teachers can apply online for the National Good Teacher Award by July 13. Click on the link below for the website to apply.

 https://nationalawardstoteachers.education.gov.in/

2) Chief Minister M.K. Stalin flagged off 120 electric buses.

3) Train fares are increasing from today.

4) The state government has announced that the three-language policy in Maharashtra is being scrapped.

5) Three people died in a stampede during the Puri Jagannath Temple Rath Yatra in Odisha. 50 people were seriously injured.

6) The first phase of the population census will begin in April 2026.

7) Mettur dam is full for the 44th time and surplus water is being released.

Sunday, 29 June 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (30.06.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (30.06.2025)

1) இன்று சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மின்சாரப் பேருந்து சேவையைத் தொடங்கி வைக்கிறார்.

2) அரசமைப்புச் சட்டமே உயர்வானது என உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.

3) ஒகேனக்கலுக்கு வரும் நீர் வரத்து ஐம்பதாயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

4) மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. உபரிநீரைத் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது.

5) கலைஞர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான விதிகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளன. மகிழ்வுந்து வைத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

6) இந்தியாவின் சுபான்சு சுக்லா விண்வெளிக்குச் சென்ற 634 ஆவது விண்வெளி வீரரானார்.

7) விண்வெளி வீரர் சுபான்சு சுக்லாவுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலமாகக் கலந்துரையாடினார்.

8) அகமதாபாத் விமான விபத்தில் மீட்கப்பட்ட கருப்புப் பெட்டியிலிருந்து தரவுகள் சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Education & GK News

1) Chief Minister M.K. Stalin will launch an electric bus service in Chennai today.

2) Supreme Court Chief Justice P.R. Kawai has said that the Constitution is supreme.

3) The water inflow to Okenakkal has increased to fifty thousand cubic feet.

4) Mettur Dam has reached its full capacity. Orders have been given to release surplus water.

5) The rules for applying for Kalaignar women’s right fund scheme have been relaxed. Those who own cars can also apply.

6) India's Subhanshu Shukla became the 634th astronaut to go into space.

7) Prime Minister Narendra Modi had a video conference with astronaut Subhanshu Shukla.

8) The work of collecting data from the black box recovered from the Ahmedabad plane crash is in full swing.

Saturday, 28 June 2025

சமநிலையில் இருப்பது எப்படி?

சமநிலையில் இருப்பது எப்படி?

குருநாதர் ஒருவர் இருந்தார்.

அவர் இன்பத்தைக் கண்டு மகிழ்வதும் இல்லை. துன்பத்தைக் கண்டு துவள்வதும் இல்லை. அவர் எப்போதும் சமநிலையிலேயே இருந்தார்.

எப்போதும் சமநிலையிலேயே இருப்பது என்பது சாதாரணமானதா என்ன? அதற்குத் துன்பம் வரும் போது துவளாமல் இருக்க வேண்டும். இன்பம் வரும் போது துள்ளிக் குதிக்காமல் இருக்க வேண்டும். இன்பமோ, துன்பமோ இரண்டும் ஒன்றுதான் என்கிற மனநிலை வேண்டும்.

இப்படி ஒரு மனநிலையைக் கற்றுக் கொள்ள யாருக்குத்தான் ஆசை இருக்காது?

அந்தக் குருநாதர் இந்தப் பண்பை யாரிடமிருந்து கற்றுக் கொண்டார் என்பதை அறிந்து கொண்டால், இதை எல்லாருக்கும் கற்றுக் கொள்ளலாம் அல்லவா!

நமக்கு இப்படி வரும் இதே ஆசை அந்தக் குருநாதரின் சீடர்களுக்கும் வந்தது.

அவர்களும் இந்த நல்ல பண்பை அவர் யாரிடமிருந்து கற்றுக் கொண்டார் என்று தங்கள் குருநாதரிடம் கேட்டனர்.

கழுதையிடமிருந்து கற்றுக் கொண்டதாகக் குருநாதர் சொன்னார்.

கழுதையிடமிருந்தா என்று சீடர்களுக்கு ஆச்சரியம்.

அவர்களின் ஆச்சரியத்தைப் போக்கும் வகையில் குருநாதரே பதில் சொன்னார்.

காலையில் அழுக்குத் துணிகளைச் சுமந்து செல்வதற்காகக் கழுதை வருந்துவதும் இல்லை. மாலையில் சலவை செய்யப்பட்ட துணிகளைச் சுமந்து செல்வதற்காக அது சந்தோசப்படுவதும் இல்லை.

நம்மைச் சுற்றியுள்ள யாரும் தாழ்வானவர்களும் இல்லை, உயர்வானவர்களும் இல்லை. நம்மைச் சுற்றியுள்ள பொருட்களிலும் உயர்வு, தாழ்வு இல்லை. அவை அனைத்தும் நம் மனதிலேயே இருக்கின்றன.

இதைத்தான் கணியன் பூங்குன்றனாரும்,

“பெரியோரை வியத்தலும் இலமே

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” (புறநானூறு, 192 : 11 – 12)

என்கிறார்.

நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றும், ஒவ்வொருவரும் நமக்கான பாடங்களைச் சொல்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டால் சமநிலையான மனது வந்து விடும் அல்லவா!

*****

Friday, 27 June 2025

மண்டையோடு பேசிய கதை!

மண்டையோடு பேசிய கதை!

மண்டையோடு பேச வேண்டும் என்றால் அதற்கு உயிர் இருக்க வேண்டும்.

உயிரற்ற மண்டையோடு பேசுவதில்லை.

உயிரற்று தனித்துக் கிடந்த மண்டையோடு ஒன்று பேசிய போது அதைக் கண்ட ஒருவன் அதிர்ச்சியடைந்தான். அது அவனுக்கு ஆச்சரியமாகவும் இருந்தது.

நீ எப்படிப் பேசுகிறாய் என்று அதனிடம் தன் வியப்பைக் கேள்வியாகக் கேட்டான்.

நான் பேசுவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை என்பதை உனக்குப் புரிய வைக்க முடியாது. ஆனாலும் உனக்கு ஓர் அறிவுரை சொல்லவே இப்போது நான் பேசுகிறேன் என்றது மண்டையோடு.

அப்படியா! அதையும்தான் சொல்லேன் என்றான் அவன்.

உன் வாயை மட்டும் உன் கட்டுபாட்டிற்குள் வைத்துக் கொள். உன் வாழ்க்கை உன் கையில் இருக்கும். இல்லையென்றால் நீயும் என்னைப் போலாகி யாருக்காவது இப்படி அறிவுரை சொல்லும் நிலைக்கு ஆளாகி விடுவாய் என்றது மண்டையோடு.

இதென்ன பிரமாதமான அறிவுரை என்று நினைத்த அவன் அந்த மண்டையோடு பேசியதே என்ற வியப்பு தாளாமல் அங்கிருந்து சென்றான். அவன் நாட்டுக்குள் சென்ற நேரம் அரசரின் அறிவிப்பு ஒன்று அவனுக்கு நல்லதிர்ஷ்டத்தைத் தருவதாக இருந்தது.

மன்னரை ஆச்சரியப்படுத்துபவர்கள் லட்சம் பொன் பரிசு பெறுவார்கள், அப்படி ஆச்சரியப்படுத்த முடியாதவர்கள் மரண தண்டனை விதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பைக் கேட்டதும் அவன் மன்னரிடம் சென்றான். தன்னோடு வந்தால் தான் பேசும் மண்டையோட்டைக் காட்டுவதாகச் சொன்னான். ஒருவேளை அப்படிக் காட்டவில்லை என்றால் உன் தலையைச் சீவி விடுவேன் என்று எச்சரித்தார் மன்னர்.

அவன் அதை ஏற்றுக் கொண்டான். மன்னரை அவரது பரிவாரங்களோடு மண்டையோடு இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான். அந்த மண்டையோட்டைக் காட்டி அது பேசும் என்றான். அது பேசவில்லை. அதனிடம் சென்று பேசு என்றான். அது பேசவில்லை. பேசு, பேசு என்று கெஞ்சினான், மன்றாடினான். அது பேசவே இல்லை. மன்னர் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார். இறுதியில் அவன் தலையைச் சீவச் சொல்லி விட்டுப் பரிவாரங்களோடு கிளம்பி விட்டார்.

தலை சீவப்பட்ட அவனது மண்டையோடு இப்போது பேச ஆரம்பித்தது. முன்பிருந்த மண்டையோடு இப்போது மறைந்து விட்டது. அந்த மண்டையோட்டுக்கு இப்போதுதான் முன்பிருந்த மண்டையோடு சொன்ன அறிவுரையின் முழுமையான பொருள் விளங்கியது.

இதைத்தான் திருவள்ளுவர்,

“யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு.” (குறள், 127)

என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டார். ஒவ்வொரு குறளும் வாழ்க்கைக்கான பாடம். குறளைப் பின்பற்றா விட்டால் வாழ்வையே இழக்க நேரிடும் என்பது இதனின்று புலனாகிறது அல்லவா!

*****

Thursday, 26 June 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (27.06.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (27.06.2025)

1) சுபான்சு சுக்லா வெற்றிகரமாக விண்வெளியை அடைந்தார்.

2) விண்வெளியிலிருந்து ‘ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத் என முதலில் பேசி சுபான்சு சுக்லா தனது தேசபக்தியை வெளிபடுத்தினார்.

3) சுபான்சு சுக்லா உட்பட நால்வரும் விண்வெளி மையத்தில் இரு வாரங்கள் தங்கி 60 ஆய்வுகளைச் செய்ய உள்ளனர்.

4) ஐந்தாண்டுகளுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் மணிப்பூர் செல்ல உள்ளார்.

5) மத்திய கல்வி வாரியத்தின் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும். இந்நடைமுறை அடுத்த ஆண்டு முதல் அமலாகிறது.

6) தமிழகத்தில் 6 மாதங்களில் 2.80 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 18 வெறிநாய்க்கடி ரேபிஸ் பாதிப்பால் இறந்துள்ளனர்.

7) இமாச்சல பிரதேசம் குலுவில் ஏற்பட்ட மேக வெடிப்பால் வெள்ளம் ஏற்பட்டு 2 பேர் பலியாகியுள்ளனர்.

8) வயநாட்டில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் சென்ற ஆண்டைப் போல இந்த ஆண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மைப் படை அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

9) ஒகேனக்கலுக்கு வரும் நீர் வரத்து 32000 கன அடியாக அதிகரித்துள்ளது.

Education & GK News

1) Subhanshu Shukla successfully reached space.

2) Subhanshu Shukla expressed his patriotism by saying ‘Jai Hind! Jai Bharat’ from space for the first time.

3) Four people including Subhanshu Shukla are going to stay at the space center for two weeks and conduct 60 experiments.

4) After five years, Prime Minister Narendra Modi is going to visit Manipur next month.

5) The Central Board of Secondary Education’s Class X exams will be conducted twice a year. This practice will be implemented from next year.

6) In Tamil Nadu, 2.80 lakh people have been affected by dog ​​bites in 6 months. Out of them, 18 have died due to rabies caused by dog ​​bites.

7) Cloudburst in Kullu, Himachal Pradesh has caused floods and 2 people have died.

8) Like last year, landslides have occurred this year due to incessant rains in Wayanad. The Disaster Management Force has been placed on standby there.

9) The water inflow to Okenakkal has increased to 32000 cubic feet.

Wednesday, 25 June 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (26.06.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (26.06.2025)

1) மத்திய அரசின் கல்வி நிதியைப் பெற சட்டப் போராட்டம் தொடரும் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

2) தமிழகத்தில் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறுநீரக சுத்தகரிப்பு (டயாலிசிஸ்) செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

3) இந்தியாவில் அதிக வரி விதிக்கப்பட விலை என அமெரிக்க அதிபர் டிரம்பின் குற்றச்சாட்டுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.

4) ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து 1100 இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பினர்.

5) 1980 கோடியில் டிரோன்கள் மற்றும் ரேடார் போன்ற நவீன பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க பாதுகாப்புத் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.

6) சூலை முதல் தொடர்வண்டி கட்டணங்களை உயர்த்துவது குறித்த தொடர்வண்டி அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

7) இந்தியாவில் விமானப் பராமரிப்பு மற்றும் விமான நிலையங்களில் பல்வேறு விதிமீறல்கள் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

8) இந்திய வீரர் சுபான்சு சுக்லா வெற்றிகரமாகச் சர்வதேச விண்வெளி மையத்துக்குப் பயணித்துள்ளார்.

9) பால்கன் 9 ராக்கெட் மூலமாக சுபான்சு உட்பட 4 பேர் விண்வெளி மையத்துக்குச் சென்றுள்ளனர்.

10) 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது வீரர் என்ற சிறப்பைச் சுபான்சு சுக்லா பெறுகிறார்.

11) 1984 இல் ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குப் பயணித்த முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

12) இராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து 3000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

13) நிலையான வளர்ச்சி பெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 99 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. பின்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Education & GK News

1) School Education Minister Anbil Mahesh Poyyamozhi has said that the legal procedure will continue to get education funds from the central government.

2) 50 primary health centers in Tamil Nadu will be equipped with dialysis facilities.

3) Union Finance Minister Nirmala Sitharaman has responded to US President Trump's accusation that India is facing high taxes.

4) 1100 Indians returned safely from Iran and Israel.

5) The Defense Ministry has approved the purchase of modern security equipment like drones and radar for Rs 1980 crore.

6) The Railway Ministry is considering increasing train fares from July.

7) A study has revealed various violations in aircraft maintenance and airports in India.

8) Indian astronaut Subhanshu Shukla has successfully traveled to the International Space Station.

9) Four people, including Subhanshu, have gone to the space center through the Falcon 9 rocket.

10) Subhanshu Shukla becomes the second Indian to go to space after 41 years.

11) It is noteworthy that Rakesh Sharma was the first Indian to travel to space in 1984.

12) 3000 cubic feet of water has been released from the Vaigai Dam for irrigation in Ramanathapuram district.

13) India has ranked 99th in the list of countries achieving sustainable development. Finland has ranked first.

Tuesday, 24 June 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (25.06.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (25.06.2025)

1) சூலை மாதத்திற்குள் 2346 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

2) அரசுப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் 3.35 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

3) கழிவு மேலாண்மையில் பொது மக்களின் பங்களிப்பை உறுதிபடுத்துமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

4) பெருநிறுவனங்கள் சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும் என குடியரசுத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

5) தேசிய கல்விக் கொள்கை மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

6) சிந்து நதி நீரைத் தர மறுத்தால் இந்தியா மீது போர் தொடுக்கப்படும் என அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் பிலாவல் புட்டோ எச்சரித்துள்ளார்.

7) இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

8) கத்தார் நாட்டின் முயற்சியால் இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

Education & GK News

1) School Education Minister Anbil Mahesh Poyyamozhi has said that 2346 secondary teacher posts will be filled by July.

2) 3.35 lakh students have been admitted to government schools in the current academic year.

3) The Chief Minister has appealed to local bodies to ensure the participation of the public in waste management.

4) The President has appealed to corporates to also pay attention to environmental development.

5) Vice President Jagdeep Dhankhar has said that the National Education Policy will bring about a big change.

6) Former Pakistan minister Bilawal Bhutto has warned that war will be launched against India if it refuses to provide water from the Indus River.

7) US President Donald Trump has announced that a ceasefire has been reached between Israel and Iran.

8) A ceasefire has been reached between Israel and Iran due to the efforts of Qatar.

Monday, 23 June 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (24.06.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (24.06.2025)

இன்று கவியரசு கண்ணதாசனின் 99 ஆவது பிறந்த நாள் விழா.

1) சூன் 23 முதல் 27 வரை பள்ளிகளில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

2) நெடுஞ்சாலைத் துறையில் நாட்டிலேயே சிறந்த மாநிலமாகத் தமிழகம் விளங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

3) தமிழகத்தில் 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 55 ஆட்சிப்பணி அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

4) இந்திய கப்பற்படைக்கு ஐஎன்எஸ் தமால் எனும் போர்க்கப்பல் சூலை 1 முதல் அர்ப்பணிக்கப்படுகிறது.

5) ஆபரேஷன் சிந்து மூலம் ஈரானிலிருந்து 317 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.

6) இஸ்ரேல் – ஈரான் போரைத் தொடர்ந்து கச்சா எண்ணெயின் விலை உயரத் தொடங்கியது.

7) டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 86.72 ரூபாயாகச் சரிந்தது.

Education & GK News

Today is the 99th birth anniversary of Kaviyarasu Kannadasan.

1) The School Education Department has instructed to conduct anti-drug awareness programs in schools from June 23 to 27.

2) The Tamil Nadu government has stated that Tamil Nadu is the best state in the country in the highway sector.

3) 55 administrative officers, including 9 district collectors, have been transferred in Tamil Nadu.

4) The warship INS Thamal will be dedicated to the Indian Navy from July 1.

5) 317 Indians returned home from Iran through Operation Sindh.

6) Following the Israel-Iran war, the price of crude oil started rising.

7) The value of the Indian rupee against the dollar fell to 86.72 rupees.

Sunday, 22 June 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (23.06.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (23.06.2025)

1) அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கீழடி கல்விச் சுற்றுலா விரைவில் ஏற்பாடு செய்யப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

2) 11 ஆவது சர்வதேச யோக தினத்தில் மனித குலத்துக்கு யோகா இன்றியமையாதது எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

3) 11 ஆவது சர்வதேச யோகா தினத்தில் பிரதமருடன் மூன்று லட்சம் பேர் யோகா செய்தனர். இது கின்னஸ் சாதனையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

4) 80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சூன் 21 அன்று திறந்து வைத்தார்.

5) வால்பாறை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி காலமானார்.

6) ஒகேனக்கலுக்கு வரும் நீர் வரத்து 19000 கன அடியாக அதிகரித்துள்ளது.

7) இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ஈரான் மீது அதி பயங்கர தாக்குதலை நடத்தி  ஈரானின் மூன்று அணு ஆயுத மையங்களை அழித்துள்ளது.

8) ஈரான் பணியா விட்டால் பயங்கரமான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

9) அமெரிக்காவுக்குப் பேரழிவு காத்திருக்கிறது என ஈரான் தலைவர் அயதுல்லா காமேனியும் அமெரிக்காவை எச்சரித்துள்ளார்.

10) பாரிஸ் டைமயண்ட் லீக் போட்டியில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.

Education & GK News

1) School Education Minister Anbil Mahesh Poyyamozhi has said that an educational tour to Keezhadi will be organized soon for government school students.

2) Prime Minister Narendra Modi has said that yoga is essential for humanity on the 11th International Yoga Day.

3) Three lakh people performed yoga with the Prime Minister on the 11th International Yoga Day. This has been recorded as a Guinness World Record.

4) Chief Minister M.K. Stalin inaugurated the Valluvar Kotam, which was renovated at a cost of 80 crores, on June 21.

5) Valparai AIADMK MLA Amul Kandasamy has passed away.

6) The water inflow to Okenakkal has increased to 19,000 cubic feet.

7) The United States, in support of Israel, has carried out a devastating attack on Iran and destroyed three of Iran's nuclear weapons centers.

8) US President Donald Trump has warned that Iran will be attacked if it does not comply.

9) Iranian leader Ayatollah Khamenei has also warned the US that a disaster awaits it.

10) Neeraj Chopra has won the javelin throw championship at the Paris Diamond League.