கல்வி & பொது அறிவுச் செய்திகள் (27.06.2025)
1) சுபான்சு சுக்லா வெற்றிகரமாக விண்வெளியை அடைந்தார்.
2) விண்வெளியிலிருந்து ‘ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்’ என முதலில் பேசி சுபான்சு சுக்லா தனது தேசபக்தியை வெளிபடுத்தினார்.
3) சுபான்சு சுக்லா உட்பட நால்வரும் விண்வெளி மையத்தில் இரு
வாரங்கள் தங்கி 60 ஆய்வுகளைச் செய்ய உள்ளனர்.
4) ஐந்தாண்டுகளுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி அடுத்த
மாதம் மணிப்பூர் செல்ல உள்ளார்.
5) மத்திய கல்வி வாரியத்தின் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ஆண்டுக்கு
இரு முறை நடத்தப்படும். இந்நடைமுறை அடுத்த ஆண்டு முதல் அமலாகிறது.
6) தமிழகத்தில் 6 மாதங்களில் 2.80 லட்சம் பேர் நாய்க்கடியால்
பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 18 வெறிநாய்க்கடி ரேபிஸ் பாதிப்பால் இறந்துள்ளனர்.
7) இமாச்சல பிரதேசம் குலுவில் ஏற்பட்ட மேக வெடிப்பால் வெள்ளம்
ஏற்பட்டு 2 பேர் பலியாகியுள்ளனர்.
8) வயநாட்டில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் சென்ற
ஆண்டைப் போல இந்த ஆண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மைப் படை அங்கு
தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
9) ஒகேனக்கலுக்கு வரும் நீர் வரத்து 32000 கன அடியாக அதிகரித்துள்ளது.
Education & GK News
1) Subhanshu Shukla successfully reached space.
2) Subhanshu Shukla expressed his patriotism by saying
‘Jai Hind! Jai Bharat’ from space for the first time.
3) Four people including Subhanshu Shukla are going to
stay at the space center for two weeks and conduct 60 experiments.
4) After five years, Prime Minister Narendra Modi is
going to visit Manipur next month.
5) The Central Board of Secondary Education’s Class X
exams will be conducted twice a year. This practice will be implemented from
next year.
6) In Tamil Nadu, 2.80 lakh people have been affected by
dog bites
in 6 months. Out of them, 18 have died due to rabies caused by dog bites.
7) Cloudburst in Kullu, Himachal Pradesh has caused
floods and 2 people have died.
8) Like last year, landslides have occurred this year
due to incessant rains in Wayanad. The Disaster Management Force has been
placed on standby there.
9) The water inflow to Okenakkal has increased to 32000
cubic feet.
No comments:
Post a Comment