Thursday, 19 June 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (20.06.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (20.06.2025)

1) பள்ளிக் கல்வி செயல்திறனில் தமிழகம் இந்திய அளவில் 16 ஆவது இடம் பிடித்துள்ளது. சண்டிகர் முதல் இடமும், பஞ்சாப் இரண்டாம் இடமும், தில்லி மூன்றாம் இடமும் பிடித்துள்ளன.

2) நிகழாண்டில் அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை 3 லட்சத்தைக் கடந்தது. சென்னை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலும், நீலகிரி மாவட்டத்தில் குறைவான எண்ணிக்கையிலும் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

3) தமிழகத்தில் புதிதாக 62 துணை சுகாதார மையங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

4) திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

5) இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனையில் பிற நாடுகளின் மத்தியஸ்தத்தை இந்தியா ஒரு போதும் ஏற்காது எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

6) இஸ்ரேல் – ஈரான் போரில் ஈரான் ஒருபோதும் அடிபணியாது என அந்நாட்டின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.

7) தமிழகத்தின் இயல்பு வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

8) உத்திரபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம், மேற்கு வங்க மாநிலங்களில் எடை குறைவான குழந்தைகள் பிறப்பது அதிகமாக உள்ளது.

Education & GK News

1) Tamil Nadu ranks 16th in India in terms of school education performance. Chandigarh ranks first, Punjab ranks second, and Delhi ranks third.

2) The enrollment of students in government schools has crossed 3 lakh this year. The highest number of students have enrolled in Chennai district and the lowest number in Nilgiris district.

3) A government order has been issued to set up 62 new sub-health centers in Tamil Nadu.

4) Minister Shekhar Babu has said that the consecration of the Tiruchendur temple will be conducted in Tamil.

5) Prime Minister Narendra Modi has said that India will never accept mediation by other countries in the India-Pakistan dispute.

6) Iran will never surrender in the Israel-Iran war, the country's Supreme Leader Ayatollah Ali Khamenei has said.

7) The Meteorological Department has announced that the average temperature in Tamil Nadu will increase by 3 degrees Celsius.

8) The states of Uttar Pradesh, Gujarat, Maharashtra, and West Bengal have the highest rates of low birth weight babies.

No comments:

Post a Comment