கல்வி & பொது அறிவுச் செய்திகள் (17.06.2025)
1) மாணவர்கள் இடைநிற்றல் இல்லாத மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குவதாக
முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
2) உலகெங்கும் பள்ளி செல்லாக் குழந்தைகள் 27.2 கோடியாக அதிகரித்துள்ளதாக
யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
3) விரைவில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும்
என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
4) 80 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டம்
இம்மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது.
5) பேருந்து மற்றும் தொடர்வண்டிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான
சக்கர நாற்காலிக்கு இடம் அமையும் வகையில் வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
6) இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் விஞ்ஞானியும்
அறிவியல் எழுத்தாளருமான நெல்லை சு. முத்து உடல்நலக் குறைவால் காலமானார்.
7) நெல்லை சு. முத்து அப்துல் கலாமுடன் இணைந்து பணியாற்றியவர்
என்பது குறிப்பிடத்தக்கது.
Education & GK News
1) Chief Minister M.K. Stalin has expressed pride that
Tamil Nadu is a state with no dropout rates.
2) UNESCO has reported that the number of out-of-school
children worldwide has increased to 27.2 crore.
3) Health Minister M. Subramanian has said that
counseling for medical courses will begin soon.
4) The Valluvar Kottam, which has been renovated at a
cost of Rs 80 crore, is set to open by the end of this month.
5) Guidelines have been issued to ensure that
wheelchairs for the differently-abled are available in buses and trains.
6) Former scientist and science writer of the Indian
Space Research Organization Nellai S. Muthu passed away due to ill health.
7) It is noteworthy that Nellai S. Muthu worked with Abdul
Kalam.
No comments:
Post a Comment