Sunday, 15 June 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (16.06.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (16.06.2025)

1) சூன் 23 மற்றும் 24 இல் மாவட்ட வாரியாகப் பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகளைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்ய உள்ளார்.

2) சூன் 14 அன்று வெளியான நீட் தேர்வு முடிவுகளில் இராஜஸ்தானைச் சேர்ந்த மகேஷ்குமார் முதலிடம் பிடித்தார்.

3) நீட் தேர்வில் முதல் 100 இடங்களில் 6 தமிழக மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர்.

4) டெல்டா பாசனத்திற்காகக் கல்லணையிலிருந்து காவிரி நீரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை திறந்து வைத்தார்.

5) பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் சுற்றுப் பயணமாக கனடா, குரேஷியா, சைப்ரஸ் ஆகிய நாடுகளுக்கு நேற்று புறப்பட்டார்.

6) உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.

7) ஈரான் – இஸ்ரேல் இடையே நடைபெறும் போர் புவி அரசியலில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Education & GK News

1) School Education Minister Anbil Mahesh Poyyamozhi is scheduled to conduct a district-wise inspection of the activities of the school education department on June 23 and 24.

2) Mahesh Kumar from Rajasthan topped the NEET exam results released on June 14.

3) 6 Tamil Nadu students have secured places in the top 100 in the NEET exam.

4) Chief Minister M.K. Stalin released Cauvery water from Kallanai for delta irrigation yesterday evening.

5) Prime Minister Narendra Modi left for a three-day tour of Canada, Croatia and Cyprus yesterday.

6) 7 people have died in a helicopter crash in Kedarnath, Uttarakhand.

7) The ongoing war between Iran and Israel has created tension in geopolitics.

No comments:

Post a Comment