Friday, 8 February 2019

Income Tax Form - 2019 - Excel Format

https://drive.google.com/open?id=1dHWK5HDXLfiRTPZUK4ZmN31kVzIZYMcD
        2019 ஆம் ஆண்டிற்கான வருமான வரிப் படிவத்தின் எக்ஸெல் வடிவம். இப்படிவத்தின் முதல் பக்கத்தில் பெயர், பதவி, பணிபுரியும் இடம், வங்கிக் கணக்கு எண், பான் எண், ஆதார் எண் போன்ற விவரங்களை உரிய கட்டத்தில் தட்டச்சு செய்து, நான்காம் பக்கத்தில் அடிப்படை ஊதியம், வீட்டு வாடகைப் படி, மருத்துவப் படி போன்றவற்றைத் தட்டச்சு செய்தால் பங்கேற்பு ஓய்வூதியம் தானாக கணக்கீட்டுக்கு உள்ளாகும். பங்கேற்பு ஓய்வூதியத்தில் இல்லாதவர்கள் அக்கட்டத்தில் உள்ளவற்றை நீக்கி பி.எப். தொகையைப் பதிவு செய்து கொள்ளலாம். எஸ்.பி.எப்., எப்.பி.எப்., ஹெச்.எப்., எல்.‍ஐ.சி., முன்கூட்டிச் செலுத்திய வருமான வரித் தொகை ஆகியவற்றையும், அகவிலைப்படி அரியர், போனஸ், இன்ன பிற அரியர் ஆகிய தொகைளைப் பதிவிட்டால் அனைத்தும் மற்ற விவரங்கள் தானாக கணக்கீட்டுக்கு உள்ளாகும். அதைத் தொடர்ந்து முதல் பக்கத்தில் வீட்டு வாடகை பனிரெண்டு மாதங்களுக்கு செலுத்திய தொகை, தொழில் வரி, வரிசேமிப்பில் செலுத்திய தொகை போன்றவற்றை உரிய கட்டத்தில் தட்டச்சு செய்தால் செலுத்த வேண்டிய வருமான வரித் தொகை தானாகவே கணக்கீட்டுக்கு உள்ளாகும்.
 இயன்றவரை பிழைகள் இல்லாத வண்ணம் இப்படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்தும் அனைவருக்கும் பயன்தரும் இப்படிவத்தில் ஏதேனும் பிழைகள் இருப்பின் பொறுத்தருளவும். அப்பிழைகளைத் தெரியபடுத்தி உரிய திருத்தங்கள் செய்வதற்கும் உதவவும்.
கீழே உள்ள இணைப்பை அல்லது மேலே உள்ள இணைப்பைச் சொடுக்கி படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

https://drive.google.com/open?id=1dHWK5HDXLfiRTPZUK4ZmN31kVzIZYMcD

No comments:

Post a Comment