பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1)
பட்டய கணக்காயர் தேர்வு
எனும் சி.ஏ. தேர்வில் இதுவரை இல்லாத அளவுக்கு இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.
2)
உத்திர பிரதேசத்தில் ஒரே
நாளில் மின்னல் தாக்கி 38 பேர் பலியாகியுள்ளனர்.
3)
கனமழையால் அசாமில் 84
பேரும், இமாச்சல பிரதேசத்தில் 22 பேரும் உயிரிழந்துள்ளனர்.
4)
இன்று கோவை, நீலகிரி,
திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை
ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
5)
மத்திய பட்ஜெட் குறித்து
பிரதமர் மற்றும் நிதியமைச்சர் பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினர். சூலை 23
அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
6)
நாட்டின் வளர்ச்சிக்குப்
பங்காற்ற வேண்டும் என்று பிரதமர் ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
7)
தமிழகத்திற்கு இன்று முதல்
31 ஆம் தேதி வரை தினந்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீரைத் திறந்து விடுமாறு கர்நாடகத்திற்குக்
காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
8)
முன்னாள் அக்னிபாத் வீரர்களுக்கு
மத்திய தொழில்படை, எல்லை பாதுகாப்பு படை, துணை ராணுவப் படை ஆகியவற்றில் இட ஒதுக்கீடும்,
வயது வரம்பில் தளர்வும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
9)
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவையில் 7.1 ஆகப் பதிவானது.
10)
உலகின் முதல் CNG பைக்கைப்
பஜாஜ் நிறுவனம் வெளியிட்டதைத் தொடர்ந்து CNG ஸ்கூட்டரை விரைவில் டிவிஎஸ் நிறுவனம் வெளியிட
உள்ளது.
English
News
1) More than 20,000 people have passed in Chartered Account
exam which is unprecedented.
2) 38 people were killed by lightning in Uttar Pradesh
in a single day.
3) Heavy rains have claimed 84 lives in Assam and 22 in
Himachal Pradesh.
4) Meteorological Department has warned that five
districts namely Coimbatore, Nilgiris, Tirupur, Theni and Dindigul will
experience heavy rain today.
5) The Prime Minister and the Finance Minister held
consultations with economists on the Union Budget. It is to be noted that the
Union Budget is to be presented on July 23.
6) Prime Minister urged the training IAS officers to
contribute to the development of the country.
7) The Cauvery Regulatory Committee has recommended
Karnataka to release one TMC of water daily to Tamil Nadu from today to 31st.
8) It has been announced that ex-Agnibad soldiers will
be given reservation and age relaxation in Border Security Force and
Paramilitary Forces.
9) A powerful earthquake in the Philippines was recorded
as 7.1 on the Richter scale.
10) Following Bajaj's launch of the world's first CNG
bike, TVS is soon to launch a CNG scooter.
No comments:
Post a Comment