Wednesday, 10 July 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 11.07.2024 (வியாழன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)                  சேலம் மாவட்டம், கரியகோயில் அரசுப் பள்ளி மாணவி சுகன்யா ஜே.இ.இ. தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

2)                  பொறியியல் படிப்புக்கான தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. பொறியியல் கலந்தாய்வு சூலை 22 இல் தொடங்குகிறது.

3)                  விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82 சதவீதம் வாக்குப்பதிவு ஆகியுள்ளது.

4)                  ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை மு.க.ஸ்டாலின் தருமபுரி மாவட்டம் பாளையம்புதூரில் இன்று தொடங்கி வைக்கிறார்.

5)                  ஆஸ்திரியா சென்றுள்ள பிரதமர் இந்தியாவில் முதலீடு செய்யுமாறு ஆஸ்திரிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

6)                  தமிழகத்தின் ஆரல்வாய்மொழி உலகில் அதிகம் காற்று வீசும் இடங்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா முதலிடத்தில் உள்ளது.

7)                  திரிபுரா மாநிலத்தில் 828 மாணவர்கள் ஹெச்.ஐ.வி. வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

8)                  நகரமயமாக்கலில் தமிழ் நாடு இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

9)                  தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட முதன்மை ஆலோசகராக சௌமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

10)              மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணையின் நீர் மட்டம் 42 அடியை நெருங்குகிறது.

 English News

1) Salem District, Kariyakoil Government School Student Sukanya has topped the JEE exam at the state level.

2) Rank List for Engineering course published. Engineering counseling starts on July 22.

3) 82 percent voting in Vikravandi by-election.

4) M. K. Stalin will inaugurate the scheme of Chief Minister with People in Rural Areas today in Palayampur District Dharampuri.

5) Prime Minister who has visited Austria has invited Austrian companies to invest in India.

6) Tamil Nadu's Aralwaimozhi is ranked second among windiest places in the world. California, USA is at the top.

7) 828 students infected with HIV in Tripura state. 47 of them died.

8) Tamil Nadu ranks first in India in terms of urbanization.

9) Soumya Swaminathan has been appointed as Principal Adviser, National Tuberculosis Eradication Programme.

10) The inflow of water to Mettur dam is continuously increasing. The water level of the dam approaches 42 feet.

No comments:

Post a Comment