Saturday, 6 July 2024

மலிவு விலை மருந்துகளை வழங்கும் மக்கள் மருந்தகங்கள்!

மலிவு விலையில் தரமான மருந்துகளுக்கான வரப்பிரசாதம் மக்கள் மருந்தகங்கள்.

தமிழ் நாட்டில் 940 மக்கள் மருந்தகங்கள் உள்ளன. சென்னையில் மட்டும் 140 மக்கள் மருந்தகங்கள் உள்ளன.

ஜன் ஔஷதி கடை என்றோ பிரதம மந்திரி மருந்தகம் என்றோ இம்மக்கள் மருந்தகங்கள் அழைக்கப்படுகின்றன.

இம்மருந்தகங்களில் பொதுவான மருந்துகள் எனப்படும் ஜெனரிக் வகை மருந்துகள் விற்கப்படுகின்றன.

இம்மருந்தகங்களால் விற்கப்படும் மருந்துகள் மற்ற மருந்தகங்களை விட ஐம்பது சதவீதம் வரை விலை குறைவானவை. அதே நேரத்தில் தரத்திலும் செயல்திறனிலும் மற்ற நிறுவன மருந்துகளைவிட எள்ளளவு கூட குறைந்தவை கிடையாது.

மேலும் அரசு ஆய்வங்களில் தரப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே மக்கள் மருந்தகங்களுக்கான மருந்துகள் அனுப்பப்படுகின்றன.

சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற நீண்ட கால நோய்களால் அவதிப்படுவோர் மக்கள் மருந்துகளில் விற்பனையாகும் மலிவான தரமான ஜெனரிக் மருந்துகளை வாங்கிப் பயன் பெறலாம்.

பெரும்பாலான நகரப் பகுதிகளில் மக்கள் மருந்தகங்கள் உள்ளன.

நீங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் உள்ள மக்கள் மருந்தகத்தை அறிந்து கொள்ள கீழே உள்ள இணையதள இணைப்பைச் சொடுக்கி அறிந்து கொள்ளவும்.

 https://janaushadhi.gov.in/KendraDetails.aspx

மேலதிக விவரங்களுக்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://janaushadhi.gov.in/

No comments:

Post a Comment