Monday, 8 July 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 09.07.2024 (செவ்வாய்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)                  அசுத்தமான நீரில் குளிப்பதால் அதிலிருக்கும் அமீபாக்கள் மூக்கு வழியாக ஏறி மூளையைத் தின்னுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆகவே குழந்தைகளை அசுத்தமான நீரில் குளிப்பாட்டுவதைத் தவிர்க்குமாறு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

2)                  அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமருக்கு மாஸ்கோவில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

3)                  ஓகேனக்கலுக்கு வரும் நீர் வரத்து 5000 கன அடியாக அதிகரித்துள்ளது.

4)                  லடாக் பகுதியில் சீனா பதுங்குக் குழிகள் அமைத்துள்ளதைச் செயற்கைக்கோள் படங்கள் உறுதிபடுத்தியுள்ளன.

5)                  புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தம் செய்ய குழு அமைத்து முதல்வர் உத்தவிட்டுள்ளார்.

6)                  விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது.

7)                  மும்பை கனமழையால் 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

8)                  இந்தியா போதுமான வேலைவாய்ப்பை உருவாக்க தவறி விட்டதாகக் குறிப்பிடும் சிட்டி குழும அறிக்கையை மத்திய அரசு மறுத்துள்ளது.

 English News

1) Doctors warned that Bathing in contaminated water can cause amoebas to climb through the nose and eat the brain. Therefore, the Tamil Nadu government has advised children to avoid bathing in contaminated water.

2) The Prime Minister, who is on a visit to Russia, was accorded a warm welcome in Moscow.

3) Water flow to Okanakkal increased to 5000 cubic feet.

4) Satellite images confirm that China has set up bunkers in Ladakh.

5) The Chief Minister has set up a committee to amend the new criminal laws at the state level.

6) The campaign for the Vikravandi by-election ended yesterday evening.

7) 50 flights canceled due to heavy rains in Mumbai.

8) The central government has rejected the Citigroup report stating that India has failed to generate enough employment.

No comments:

Post a Comment