சிறந்த
வேலை நாள் என்பது அதிகமாக வேலைபார்ப்பது இல்லை. சரியான அளவில் வேலை பார்ப்பதே.
ஏன்
நாம் அதிகமாக வேலை பார்க்க நினைக்கிறோம்?
இயல்பாகவே
மனிதர்களுக்கு அதிக வேலை பார்ப்பதில் ஈடுபாடு இருக்கும். நிறுவனங்களுக்கோ அதிக வேலை
வாங்குவதில் ஈடுபாடு இருக்கும்.
எந்த
அளவுக்கு அதிக வேலை பார்க்கிறோமோ அந்த அளவுக்குப் பின்னாட்களில் கொந்தளிப்புகள் வர
வாய்ப்புகள் உள்ளன.
அதிகமாக
வேலை பார்ப்பதால் நம்மை அறியாமல் பரபரப்பு, பதற்றம் போன்வற்றிற்கு ஆளாகும் வாய்ப்புகள்
உள்ளன.
இது
ஏன்? இது எப்படி நிகழ்கிறது?
பெரும்பாலான
மனிதர்கள் இந்த உலகில் அவர்கள் என்ன செய்ய விரும்புகின்றனர் என்பது தெரியாமலேயே இருக்கின்றனர்.
இதனால் அவர்கள் காரணமின்றிப் பரபரப்பாக இருக்கின்றனர்.
உங்களுக்கு
என்ன வேண்டும் என்பதில் நீங்கள் தெளிவாக இருந்தால் எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதில்
நீங்கள் தெளிவாக இருப்பீர்கள். அப்படித் தெளிவாக இருக்கும் போது, எந்தச் சூழ்நிலையிலும்
உங்களுக்குத் தேவையான விசயம் உங்கள் கண்களுக்குத் தெளிவாகத் தென்படும். அப்படித் தென்படும்
போது அதை சிக்கெனப் பிடித்துக் கொண்டு அதில் மட்டும் கவனம் செலுத்திச் சரியாகச் செயல்படுவீர்கள்.
தெளிவாக
இருக்கும் போது உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் அதிக தெளிவும், அன்றாட பகட்டுகள்
மற்றும் பரபரப்புகளுக்கு முன்னுரிமை தராமல் இருப்பதற்கும் பழகிக் கொள்வீர்கள்.
இதனால்
எதில் கவனம் செலுத்தி எவ்வளவு வேலை செய்ய வேண்டும் என்பது உங்களுக்குப் புலப்படும்.
நீங்கள் சரியான அளவில் வேலை செய்வீர்கள். நீங்கள் செய்யும் வேலையும் பயனுள்ளதாகவும்
ஆக்கப்பூர்வமானதாகவும் இருக்கும்.
No comments:
Post a Comment