பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1)
பிஎம்ஸ்ரீ திட்டத்தில்
இணையாததால் மத்திய கல்வி அமைச்சகம் வழங்கும் நிதியுதவி தமிழகத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளதாகப்
பள்ளிக்ககல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2)
மேட்டூருக்கு வரும் நீர்
வரத்து 31000 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கலுக்கு வரும் காவிரி நீர் 50000 கன
அடியாக அதிகரித்துள்ளது.
3)
இந்தியாவில் தமிழகம் வறுமை
ஒழிப்பு, தரமான கல்வி, சுத்தமான குடிநீர் போன்ற 13 துறைகளில் முதலிடம் பிடித்து சாதனை
படைத்துள்ளது.
4)
நீட் தேர்வு முடிவுகளை
நகரங்கள், மையங்கள் வாரியாக வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5)
சூலை 24 இல் காவிரி மேலாண்மை
ஆணையக் கூட்டம் நடைபெற உள்ளது.
6)
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக
ஆர்.மகாதேவன், என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
7)
உலகின் ஐந்து பெரிய நிலக்கரி
சுரங்கங்களில் இரண்டு இந்தியாவில் உள்ளதாக நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
8)
இந்தியப் பங்குச் சந்தைகள்
நேற்று புதிய உச்சத்தைப் பதிவு செய்தன. சென்செக்ஸ் 81000 புள்ளிகளையும் நிப்டி
24800 புள்ளிகளையும் கடந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்தன.
9)
இலங்கைத் தொடருக்கான இந்திய
கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மாவும் விராட் கோலியும் இடம் பெற்றுள்ளனர்.
10)
டி20 கிரிகெட் போட்டிக்கு
சூர்யகுமார் யாதவ்வும், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு ரோகிச் சர்மாவும் கேப்டன்களாகச்
செயல்படுவர் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
English
News
1) Officials of the School Education Department have
said that the financial assistance provided by the Union Ministry of Education
has been stopped for Tamil Nadu due to non-compliance with the PM SRI
programme.
2) Inflow of water to Mettur has increased to 31000
cubic feet. Cauvery water coming to Okanagan has increased to 50000 cubic feet.
3) In India, Tamil Nadu has achieved first place in 13
sectors like poverty alleviation, quality education and clean drinking water.
4) The Supreme Court has ordered the release of NEET
results city-wise and center-wise.
5) Cauvery Management Commission meeting to be held on
July 24.
6) R. Mahadevan and N. Kodeeswar Singh were sworn in as
Supreme Court judges.
7) India has two of the five largest coal mines in the
world, according to the Ministry of Coal.
8) Indian stock markets hit new highs yesterday. Sensex
crossed 81000 points and Nifty 24800 points to register new highs.
9) Rohit Sharma and Virat Kohli have been included in
the Indian cricket team for the Sri Lanka series.
10) Suryakumar Yadav will be the captain for T20 cricket
and Rohich Sharma will be the captain for one-day cricket tournament, according
to the Indian Cricket Board.
No comments:
Post a Comment