Monday 22 July 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 23.07.2024 (செவ்வாய்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)                  இன்று காலை 11 மணி அளவில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார்.

2)                  கற்பித்தல், பள்ளி நிர்வாகம் தவிர்த்து வேறு பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது என உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

3)                  நூலகப் பயன்பாட்டைப் பாடத்திட்டத்தில் சேர்க்க தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

4)                  தமிழ்நாட்டில் முதன் முறையாக இணைய தளம் மூலமாக கட்டட அனுமதி பெறும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

5)                  இந்தியாவில் 51 சதவீத பட்டதாரிகள் மட்டுமே வேலை வாய்ப்பைப் பெறுவதாகப் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

6)                  மேட்டூர் அணையின் நீர் மட்டம் 77 அடியாக உயர்ந்துள்ளது.

7)                  கேரளாவில் நிபா வைரசால் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து தமிழக – கேரள எல்லையில் சுகாதாரச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

8)                  அமெரிக்க அதிபர் தேர்தலிலிருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

9)                  ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை முன் மொழிந்துள்ளார் ஜோ பைடன்.

10)              மகளிர் கிரிகெட் டி-20 கிரிக்கெட் போட்டியில் முதல் சதம் விளாசிய சாதனையை இலங்கையின் சமாரி அத்தபத்து படைத்துள்ளார்.

 English News

1) Finance Minister Nirmala Sitharaman will present the Union Budget today at 11 am.

2) The Madurai branch of the High Court has ordered that the teachers should not be engaged in any work other than teaching and school administration.

3) The High Court has directed the Tamil Nadu government to include library use in the curriculum.

4) The Chief Minister launched the scheme of getting building permission through online for the first time in Tamil Nadu.

5) An economic survey reports that only 51 percent of graduates in India are employed.

6) Mettur dam water level has risen to 77 feet.

7) Health checks have been intensified at the Tamil Nadu-Kerala border after one person died of Nipah virus in Kerala.

8) Joe Biden has announced his withdrawal from the US presidential race.

9) Joe Biden has nominated Kamala Harris for the Democratic presidential nomination.

10) Sri Lanka's Samari Athapathu has scored the first century in women's T20 cricket.

No comments:

Post a Comment