பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1)
தமிழகத்தில் பொறியியல்
படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. செப்டம்பர் 11 ஆம் தேதி வரை
நடைபெறுகிறது.
2)
நாளை மறுநாள் பாரிசில்
துவங்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக 117 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
3)
இன்று நாடாளுமன்ற பட்ஜெட்
கூட்டத்தொடர் தொடங்குகிறது. நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டைத் தாக்கல்
செய்கிறார்.
4)
கண்ணாடி முகப்பில் பாஸ்டேக்
வில்லை ஒட்டாத வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் விதிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை
ஆணையம் தெரிவித்துள்ளது.
5)
தமிழகத்தின் இரண்டாவது
பெரிய ஓடுதளம் உள்ள விமான நிலையமாகத் தூத்துக்குடி விமான நிலையம் வளர்ந்துள்ளது.
6)
2327 குரூப் – 2 மற்றும்
குரூப் 2A பணியிடங்களுக்கு 7.90 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
7)
வெள்ளி மற்றும் சனியன்று
மைக்ரோசாப்ட் மென்பொருள் முடங்கியதால் பல நாடுகளில் வங்கி, விமானம் மற்றும் மின்னணு
தொடர்பான பல சேவைகள் பாதிக்கப்பட்டன.
8)
வங்கதேச கலவரத்தில்
133 பேர் பலியாகியுள்ளனர். அங்கு நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரக்காரர்களைக்
கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது.
9)
கர்நாடகாவிலிருந்து கே.ஆர்.எஸ்.
மற்றும் கபினி அணைகளிலிருந்து தமிழகத்திற்குத் திறக்கப்படும் நீர் 60000 கன அடியாக
அதிகரிக்கப்பட்டுள்ளது.
10)
தமிழகத்தில் சூலை 27 ஆம்
தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English
News
1) Counseling for engineering courses in Tamil Nadu
starts from today. Runs till 11th September.
2) 117 athletes will participate on behalf of India in
the Olympic Games which will start in Paris the day after tomorrow.
3) Parliament's budget session begins today. Finance
Minister Nirmala Sitharaman will present the budget tomorrow.
4) The National Highways Authority has said that double
toll will be charged for vehicles that do not stick the FASTag.
5) Tuticorin Airport has grown to become the airport
with the second largest runway in Tamil Nadu.
6) 7.90 Lakhs applied for 2327 Group – 2 and Group 2A
posts.
7) Banking, aviation and electronic services were
affected in many countries due to Microsoft software outages on Friday and
Saturday.
8) 133 people died in Bangladesh riots. A nationwide
curfew has been imposed there. The rioters have been ordered to shoot on sight.
9) The water released to Tamil Nadu from KRS and Kabini
dams has been increased to 60000 cubic feet.
10) Meteorological Department has informed that moderate
rain is likely in Tamil Nadu till July 27.
No comments:
Post a Comment