பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1)
துப்பாக்கிச் சுடும் போட்டியில்
வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவிற்கு முதல் ஒலிம்பிக் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார்
மனு பாக்கர்.
2)
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில்
முதுநிலை படிப்புகளுக்கு சூலை 27 முதல் ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம்.
3)
ஆடிப்பெருக்கு விழாவை
முன்னிட்டு சூலை 28 லிருந்து ஆகஸ்ட் 3 வரை மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படுகிறது.
4)
ஒகேனக்கலுக்கு வரும் காவிரி
நீர் ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் காவிரி கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள
அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
5)
மேட்டூர் அணையின் நீர்
மட்டம் 71 வது முறையாக 100 அடியைக் கடந்தது. அணையின் நீர்மட்டம் 110 அடியை நெருங்குகிறது.
6)
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில்
முதல் தங்கத்தை வென்றது சீனா.
7)
புதுச்சேரியின் துணை நிலை
ஆளுநராக கே. கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
8)
சி.பி. ராதாகிருஷ்ணன்
மகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
9)
தமிழகத்திற்கு அடுத்து
வரும் 7 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10)
மகளிர் ஆசிய கோப்பை டி20
கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
English
News
1) Manu Bakar won India's first Olympic medal by winning
a bronze medal in shooting.
2) Apply for Masters Degree Courses in Government Arts
and Science Colleges from July 27 to August 7.
3) Water is released from Mettur Dam from July 28 to
August 3 on the occasion of Adiperukku Festival.
4) Cauvery water coming to Okanakkal has increased to
one lakh cubic feet. Due to this, a flood warning has been issued for the
Cauvery coastal areas.
5) Mettur dam water level crosses 100 feet for the 71st
time. The water level of the dam approaches 110 feet.
6) China won the first gold at the Paris Olympics.
7) K. Kailashnathan has been appointed as Lt Governor of
Puducherry.
8) C.P. Radhakrishnan has been appointed as the Governor
of Maharashtra.
9) Tamil Nadu is likely to receive rain for the next 7
days, according to the Meteorological Department.
10) Sri Lanka won the women's Asia Cup T20 cricket
series.
No comments:
Post a Comment