Wednesday 17 July 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 18.07.2024 (வியாழன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)                  நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க விழையும் ஆசிரியர்கள் சூலை 16லிருந்து 24 வரை EMIS இணையதளத்தில் விவரங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.

2)                  பள்ளிக் கல்வித்துறையின் புதிய செயலாளராக திருமதி மதுமதி இ.ஆ.ப. அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

3)                  நாளை வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4)                  மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்தார்.

5)                  மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 21000 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் நீர் மட்டம் 3 அடி உயர்ந்து 46 அடியாக உள்ளது.

6)                  கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு 8 பேர் பலியாகியுள்ளனர்.

7)                  2023 இல் இந்தியாவில் 16 லட்சம் குழந்தைகளுக்கு எந்த வித தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

8)                  தங்கம் விலை சவரனுக்கு ஐம்பத்தைந்தாயிரத்தைத் தாண்டியது.

9)                  இந்தியாவின் மொத்த விற்பனை விலை பணவீக்கம் சூன் மாத நிலவரப்படி 3.36 சதவீதமாக உள்ளது. இது 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகமாகும்.

10)              பிரபல எழுதுபொருட்கள் தயாரிப்பு நிறுவனமான கேம்ளின் நிறுவனத்தின் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் உடல்நலக் குறைவால் காலமானார்.

 English News

1) The teachers who wish to apply for the Best Teacher Award can upload the details on the EMIS website from 16th to 24th July.

2) Mrs. Madhumati I.A.S. is appointed as the new Secretary of School Education Department.

3) The Meteorological Department has said that a new low pressure center is likely to form over the Bay of Bengal tomorrow.

4) Tamil Nadu Governor RN Ravi met Union Education Minister Dharmendra Pradhan.

5) Inflow to Mettur dam has increased to 21000 cubic feet. The water level has risen by 3 feet to 46 feet in a single day.

6) 8 people have died due to continuous heavy rains in Kerala.

7) According to WHO, 1.6 lakh children in India will not be immunized by 2023.

8) Gold price crossed fifty five thousand per sovereign.

9) India's wholesale price inflation is 3.36 percent as of June. This is the highest in 16 months.

10) Subhash Thandekar, founder of the famous stationery company Camlin, passed away due to ill health.

No comments:

Post a Comment